Tuesday, June 26, 2018

சோப்பளாங்கி !!!!

                                                       சோப்பளாங்கி    !!!!

"சோப்பளாங்கி  " ....அப்பிடின்னா என்ன? அது வேற ஒண்ணும் இல்ல.  கொஞ்சம் கூட எதுக்குமே சாமர்த்தியம்  இல்லாதவங்களை "சோப்பளாங்கி   "ன் னு கிண்டலாக சொல்லுவாங்க. பொதுவா எல்லோராலையும் ஏமாற்றப்படுவனாக இருப்பவனைக்கூட  சோப்பளாங்கி  கூட சொல்லலாம்.

இந்த எல்லா குணங்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டவன் தான் இந்த கதையின் ஹீரோ. பார்க்கிறதுக்கு வேற கல்யாணராமன் கமல் மாதிரியும், கொஞ்சம் சப்பாணி சாயலும் இருக்கும். அவனோட அப்பாவி தனத்தை அவன் நண்பர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு அவனை மேலும் மக்காக ஆக்கினார்கள். பின்ன என்னாங்க ..அவனை சோப்பளாங்கி  என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள். அவனும் வாயெல்லாம் பல்லாக பெரிய பட்டம் போல ஏற்றுக்கொள்வான். ஊரை பாருடான சேரியை பார்ப்பான். அந்த ஏரியா பசங்கள் எல்லோரும் தமாஷுக்காகவே சோப்பளாங்கியெ விளையாட்டுக்கு சேர்த்துகொள்வார்கள். இதுக்கு பல காரணம் உண்டு. அதுல ஒரு முக்கிய காரணம் நம்ம சோப்பளாங்கி கொஞ்சம் கைல  பசை உள்ள பார்ட்டி. என்னவோ அவன்கிட்ட கொடுத்துவச்ச மாதிரி,  டேய்,.. சோப்பளாங்கி ..   டிபன் வாங்கிகொடுடா என்பார்கள். அதற்கு அவனும் ரொம்ப சந்தோசமா எல்லோருக்கும் வாங்கி கொடுப்பான்.  ரெண்டாவது அவனை ஒப்புக்கு சப்பாணி ஸ்டேட்டஸ் கொடுத்து விளையாட்டில் சேர்த்துக்கொள்வார்கள். அதுல அவனுக்கு ரொம்ப பெருமை. இப்பிடித்தான், ஒரு சமயம் அவனை  கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக்கொண்டு, அவனை பெரிய fielder ஆக வருவேடா  நீன்னு சொல்லி, fielding எப்பிடி பண்ணனும்னு சொல்லி கொடுத்தார்கள். நாளைக்கு மாட்ச்க்கு field  செய்யன்னு வருமாறு சொன்னார்கள். நமப சோப்பளாங்கி க்கு அன்னைக்கு ராத்திரி தூக்கமே இல்லை . மனசுக்குள்ள பெரிய ஜடேஜா மாதிரி நினைப்பு வேற. இந்த பசங்க அவனை இந்த மாட்ச்க்கு கூப்பிட காரணம், எதிர் டீம் ஒரு டப்பா டீம். அதோடு இல்லாம அந்த கிரௌண்ட்க்கு பக்கதில் ஒரு நல்ல ஹோட்டல் மற்றும் டாஸ்மாக் வேற இருந்தது. நாளைக்கு நம்ப டீம் ஜெயிச்சுதுன்னா நீ தாண்டா  ட்ரீட் எல்லோருக்கும் கொடுக்கணும்னு சொல்லவே, சோப்பளாங்கிக்கு ரொம்ப குஷி ..அவனை நல்லா அரைக்கிறாங்க ன்னு தெரியவே இல்லை. purseல நெறய பணம் வைத்திருந்தான். அடுத்த நாள் மேட்ச் ஆரம்பித்தது . நம்ப சோப்பளாங்கிய  ball வராத இடத்தில long onல  நிக்க வச்சுட்டாங்க. கடைசிவரைக்கும் அவன் பக்கம் ஒரு ballஆவது வரணுமே ..ம்ஹூம் ..மேட்ச் முடிய போற சமயத்தில ஒரே ஒரு ball வர, எல்லோரும் சேர்ந்து, டேய்.. சோப்பளாங்கி ball field பண்ணுடான்னு... சொல்லவே, உடனே நம்ப ஆளு பெரிய fielder போல காலை மட்டி போட்டு உக்கார்ந்து பிடிக்கலாம்ன்னு try பண்ணும்போது, கொஞ்சமும் எதிர்பாராத விதமா பந்து அவன் ரெண்டு கால் இடையில் நழுவி பின்னாடி சென்றது. umpire உடனே four சிக்னல் காண்பிக்க, எதிர் கட்சி வின்னர் ஆகிட்டாங்க. வந்ததே ஒரே ball,  அதையும் நம்ப சோப்பளாங்கி  வெற்றிகரமா நழுவ விட, எல்லா  பசங்களும் அவனை சாடு சாடுன்னு சாடிட்டாங்க. உன்னால தான் மேட்ச் தோத்து போச்சுன்னு அவன் மேல  பழியை போட்டு, அதற்கு பரிகாரமாக சோப்பளாங்கி    தான் எல்லோருக்கும் டிபன், தண்ணி  வாங்கி தரணும் சொல்லவே இவனும் வேற வழி இல்லாம தன் purse காலி ஆக்க வேண்டியதாயிற்று.

சரி, கிரிக்கெட் தான் வரலை,  கொம்பாட்டம்   ஆடலாம் வாடான்னு கூப்பிடுவாங்க. அதுயென்ன ஆட்டம்னா, எல்லோரும் ஆளுக்கு கைல ஒரு கொம்பு வைத்துக்கொண்டு இருக்கணும் , சாட் ..பூட் ..த்ரீ ..போட்டு சோப்பளாங்கிய மீண்டும் இளிச்சவாயனாக்கி அவன் தான் ஆடணும்னு சொல்வாங்க. தோற்றவன் கொம்பை ரெண்டு கைகளில் வைத்துக்கொண்டு தலைக்கு மேல தூக்கி பிடித்து திரும்பி நிக்கணும். எவனாவது வந்து அவனுக்கு பின் பக்கமா வந்து கொம்பை சமர்த்தியமா தூக்கி அடிப்பார்கள். மற்றவர்கள் ஓடி போய் கைல இருக்கும் கொம்பை ஏதாவது கல்லில்  மேல் வைக்க வேண்டும். அப்பிடி வைத்தவர்களை  அவுட் அக முடியாது. உடனே சோப்பளாங்கி வேகமா போய் அந்த கொம்பு விழுந்த இடத்திற்கு ஓடி கொம்பை எடுக்க வேண்டும். இதக்கிடையில் மற்றவர்கள் சாமர்த்தியமாக அந்த கொம்பை தங்கள் கையில் வைத்திருக்கும் கொம்பால்  கண்ட மேனிக்கு தள்ளுவார்கள். அப்பிடி புத்திசாலித்தனமாக எடுக்க  போகும் சமயத்தில், பசங்க சோப்பளாங்கியயை பார்த்து , டேய் , மேல பாருடா ..ஏரோபிளான் போகுதுனு சொல்ல நம்ப ஆளு ஆச்சரியத்துடன் மேல பார்ப்பான். அவளவுதான் கீழ இருந்த கொம்பு 100 அடிக்கு தள்ளியிருப்பார்கள். மீண்டும் இளிச்சவாயன் பட்டம். இப்பிடியாக கில்லி , பம்பரம் , கோலி , டப்பா ஐஸ் byes, ஹாண்ட்  கிரிக்கெட்,  இன்னும் பல விளையாட்டுகள் விளையாடி நெறய மக்கு பட்டம் வாங்கி இருக்கிறான் சோப்பளாங்கி.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மற்றொரு ஆச்சிரியமான  விஷயம் என்னவென்றால், சோப்பளாங்கி படிப்பிலே படு  சுட்டி. ஆனால் அங்கேயும் அவன் புத்திசாலி தனம் எடு  படவில்லை. பரீட்சை வரும்போதெல்லாம், சக மாணவர்கள் அவன் பக்கத்தில உக்காருவதற்கு போட்டி போடுவானுங்க. என்ன அப்போதான் சோப்பளாங்கி பார்த்து காப்பி அடிக்கலாம். யாரும் பிட் கொண்டுவர மாட்டார்கள். அதிலேயும் அவனுக்கு ரொம்ப பெருமை. இப்பிடியாக நாளொரு மேனியா பொழுதொரு வண்ணமாக நம்ப கத நாயகன் வாழ்கை  ஓடியது. இதுவரை பார்த்த படம் கடந்த காலம்.

இப்போ நிகழ்  காலம் என்ன  சமாச்சாரம்னு பார்க்கலாமா. நம்ப சோப்பளாங்கி நன்றக படித்து, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ஆனான். மற்றவர்கள் வெறும் கீழ் மட்டத்திலேயே இருந்தார்கள். ஸ்மார்ட்ஆக 27 வயது நிரம்பிய இளைஞன். அமெரிக்க கூகிள்  கம்பெனி அவனை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கியது. மாச மாசம் வெளிநாட்டு பயணம். லட்சம் லட்சமா சம்பளம்.

 கதையின் கடைசி கட்டம். சோப்பளாங்கிக்கு கல்யாணம். அழாகான படிச்ச அனு என்கிற அனுராதா தான் லைப் பார்ட்னர். மாலை reception  சென்னையிலேயே பெரிய இடமான Abbotsbury கல்யாண மண்டபம். ஏக  கூட்டம். சோப்பளாங்கி அவன் சிறு வயசு நண்பர்களையெல்லாம் மறக்காமல் கூப்பிட்டான். அவர்களும் வந்து சோப்பளாங்கியின் பரிமாண வளர்ச்சியை கண்டு மலைத்து போனார்கள். எல்லோரையும் பேரை சொல்லி அன்போட வரவேறான் . டேய் , எல்லோரும் டின்னெர் சாப்பிட்டு வாங்க.. குத்து டான்ஸ் போடலாம் வாங்கனு சொன்னான். அதுக்கு முன்னாடி சரக்கு வேணும்னா சொல்லுங்க ஏற்பாடு பண்ணி இருக்கேன் சொல்லவே எல்லோரும் குஷி ஆகிட்டாங்க. என்ன இருந்தாலும் நம்ப சோப்பளாங்கி ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா னு வாய்விட்டே புகழ்ந்தார்கள். இப்பிடி எல்லோரும் சோப்பளாங்கியின் கல்யாண அமர்களத்தில் திளைத்திருக்க, திடீர்னு reception ஹால்ல   ஒரே பரபரப்பு. எல்லோரையும் ஓரம் போக சொல்லி, செக்யூரிட்டி ஆட்கள் திபு திபு என்று வந்தார்கள். வாசலில் பெரிய வெளிநாட்டு கார் வந்தது. அதிலிருந்து வந்து இறங்கிய விருந்தாளி வேற யாருன்னு சொன்ன அப்பிடியே மலைச்சு போயிடுவீங்க. ஆமாம், அது வேற யாரும் இல்ல. கூகிள் கம்பெனி CEO Mr . சுந்தர் பிச்சை தான். நம்ப சோப்பளாங்கி கூகிள்  இந்தியாவின் ஒரு பெரிய பொறுப்புள்ள உயர் அதிகாரி.. Mr சுந்தர் பிச்சை  நேர மேடைக்கு வந்து சோப்பளாங்கியை கட்டி பிடித்து கை  குலுக்கி Congratulations Mr ராஜு என்றார். அட, ஆமாங்க..!!! நம்ப  ராஜுவேதான் ..!!!  ராஜு,  தன் நண்பர்களை சுந்தர் பிச்சைக்கு  அறிமுக படுத்தினான். கூடவே மறக்காமல், இந்த நண்பரகள் தான் அவனுடைய இந்த வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு காரணம் என்று  சொல்லி அன்று அவனை  சோப்பளாங்கின்னு கூப்பிடலைனா தனக்கு  வாழவேண்டும் என்ற வெறி வந்திருக்காது என்று ரொம்ப அடக்கமாக நண்பர்களை அணைத்து கொண்டே கூறினான். Mr சுந்தர் பிச்சை  ரொம்ப சந்தோசம் அடைந்து ராஜுவின் நண்பர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் விடியோவும் எடுத்துக்கொண்டு மீண்டும் செக்யூரிட்டி சகிதம் வெளிஏறினார் .

                                                           
- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
























No comments:

Post a Comment