Thursday, August 30, 2018

வினை (தொகை)கள்


                        வினை(தொகை)கள் 




என்னடா இது ரொம்ப நாளாக ராஜூகிட்ட இருந்து ஒருகப்ஸாவும் வரலயேன்னு ரொம்ப கவலையா இருந்திங்களோ ?? !!! காரணம் என்னனா ராஜு இப்போ எல்லாம் வேற டைம்Passla பிஸியா இருக்கான். அதுஎன்னனு விலாவாரியா கேட்போம்.

அது வேற ஒண்ணும்  இல்ல. ராஜுவிற்கு எதேர்ச்சியாக ஒரு வெப்சைட்ல தையல் மெஷின் விற்பனைக்கு வந்ததை பார்த்து ஒரு விபரீத ஆசை வந்தது. Balconyகார்டன் oru பக்கம் இருக்க, தையல் கற்றுக்கொண்டால் மீதி நேரத்தில உருப்படியா ஏதாவது செய்யலாமேன்னு ஒரு ஐடியா தோணியது. வழக்கம்போல்,  வீட்டு பாஸ்க்கு சொல்லாம surpriseஆ ரொம்ப புத்திசாலித்தனமா கொறஞ்ச விலைக்கு தையல் மெஷின் வாங்கி வந்துட்டான் . ராஜுவின் பாஸ் ஒரு மாதிரி இது என்ன புது பொண்டாட்டின்னு கிண்டலாககேட்டாள். ஏற்கனவே ரொம்ப வருஷமா சும்மா இருந்த மெஷின் போன வருஷம் தான் அடி  மாட்டு விலைக்கு கொடுத்தோம்,இப்போ என்ன இதுக்கு அவசரம்ன்னு கேட்க, இல்ல...  இது லேட்டஸ்ட் மாடல்,ரொம்ப சீப்பாகவாங்கியதாக சொல்ல, அப்போவே பாஸ்க்கு புரிஞ்சு போச்சு. ஏதோ மழுப்பல்ன்னு. anyways கதைக்குள்ள போகலாம் வாங்க...






வீட்டுக்கு வந்த புதிய விருந்தாளி ஒரு எலக்ட்ரிகல் மெசின். அத எப்பிடி யூஸ் பண்ணறது அப்பிடின்னு யோசிச்சிண்டிருந்தான். உடனே,கமாண்டர் இன் chief, ராஜூவை பார்த்து நீங்க கையும் காலையும் வச்சுக்கிட்டு ஏதாவது ஏடா கூடமா செய்யாதீங்க அப்படினு சொல்லவே. ராஜு தன் மொபைலில் YOUTUBEல டைலரிங் டுடோரியல் பாக்க போனான்.கூடவே இந்த மிஷினை வித்தவர் சொன்ன ஐடியா நியாபகம் வரவே,மெஷின் வாங்கின கடைக்கு போன் போட்டு ஒரு டெமோ செஷன் fix பண்ணி ரொம்ப பெருமையா பார்த்தான். டெமோ அப்பாயிண்ட்மெண்ட் ரெண்டு நாள் ஆகும். அதுவரை புது பொண்டாட்டிய சுத்தி சுத்தி வந்தான். டெமோ மாஸ்டர் கரெக்டா வந்தார். மெஷினை பார்த்து எவ்வளவுக்கு சார் வாங்கினீங்கன்னு வந்தது வராததுமாய் இடம் பொருள் ஏவல் தெரியாம கேட்டார். ராஜு ஒரு மாதிரி சசுதாரித்துக்கொண்டு, close friendது, விலைக்கு வந்து இருக்கு, வாங்கலாமான்னு  கேட்டான். மெஷின் கண்டிஷன் எப்பிடி  இருக்குனு சொல்லுங்க என்றான் . அவர் மெஷினை ஒட்டி பார்த்துட்டு கொஞ்சம் சர்வீஸ்  பண்ணனும், நானே பண்ணுவேன்,500 ரூபாதான்  ஆகும், கடைல கொடுத்தா  1000 ஆகும்னு சொன்னரு. ராஜு HOD approval வாங்கி சரி நீங்களே சர்வீஸ் நீங்களே செய்யுங்கன்னு சொன்னான். டெமோ மாஸ்டர் தனக்கு அன்னைக்கு ஒரு மீனு மாட்சின்னு சந்தோச பட்டு மெஷின் சூப்பரா  இருக்கு சார்ன்னு சொல்லி வாங்கக்கூடிய விலையை சொன்னாரு. அந்த தொகையும் தான் கொடுத்த தொகையை விட கொஞ்சம்தான்  கம்மியாக இருந்ததால ராஜு மீண்டும் ஒரு பெரு மூச்சு  விட்டான். அப்பாடி பரீட்சை பாஸ். டெமோ செஷன் ரொம்ப smoothaga போனது. மாஸ்டர் ரொம்ப சிம்பிளா ஸ்ட்ரெயிட்ட running ஸ்டிட்ச் சொல்லி கொடுத்து மற்றபடி எப்பிடி ஊசில நூல் கோக்கணும்னு ரொம்ப லாவகமா  காண்பிக்கவே யானைக்கு ஏர்றம் குதிரைக்கு குர்ரம் போல அப்பிடின்னு மனசுல நினைசக்கிட்டான். மறக்காம மாஸ்டர் போன் நம்பர் வாங்கி கொண்டான்.  

அப்பாடி , இனி நாம்பளே தைக்கலாம்னு சந்தோசம். யூ டூப்பில் பார்த்த DIY  (Do  It Yourself ) எல்லா டுட்டோரிலும் ரொம்ப ஈஸியாக இருந்தது. சரி, இனி கோதாவில் இறங்க வேண்டியது தான். மொதல்ல ஒரு வேஸ்ட் கெர்ச்சிப் துணி எடுத்து ஸ்டிச் பண்ணலாமேன்னு துணிய தைக்கிறதுக்கு ஆயுதமானான். இப்போ தா வந்தது மதுரைக்கு  வந்த சோதனை. நூலை கண்டிலிருந்து இழுத்து பல ரூட் குள்ள போயி  கடைசியில ஊசி முனை கிட்ட வரணும். அதுவே ஒரு challenging  வேலை. இப்போ ஊசியில் நூலை நுழைக்கும் படலம். நூல் நுனி கூர்மையாக இல்லாததால், நூலை நுழைக்க ரொம்ப பிரம பிரயத்தனம் பட்டான். வேறவழி  இல்லாம பொண்டாட்டியை  ஒரு ஹெல்ப் பார்வை. அவங்க அலட்சியமா டூல்  பாக்ஸ்லேந்து ஒரு item (அது பேரு kneedle threader, ராஜு  மாதிரி, சோப்லாங்கிகளுக்குன்னு கண்டு பிடிச்சாங்க போல) எடுத்து, அத ஊசி ஓட்டைக்குள்ள நுழைச்சு நூலை கோத்து வாங்கி அனாவசியமா நூலை ஊசிக்குள்ள கோத்துக்கொடுத்தாங்க. ச்ச, இது எனக்கு தெரியாம போச்சேன்னு அசடு வழிய, இது எனக்கு தெரியாதா..நீ என்னமோ அப்பிடியே  நூலை கோப்பியோனு நினைச்சேன்னு சமாளிக்கிறதுக்குள்ள, படக்குனு நூலை ஊசிலேந்து உருவி எடுத்து ராஜு கைல அந்த வஸ்துவை கொடுத்து, இப்போ உங்க turn அப்பிடின்னு சொன்னா.ராஜுவும்  ரொம்ப வீறாப்பா , அந்த வஸ்துவின் நுனியை ஊசி முனையில் நுழைக்க ட்ரை பண்ண போக, அதன் நுனியிலுள்ள சின்ன ஒயர் மொளுக்ன்னு உடைந்து வாயே பிளந்து கொண்டு சிரித்தது !. ராஜுவின் முகம் ரொம்ப விகாரமா போக, சகதர்மினி  பரவா  இல்ல..., நீங்க, அது இல்லாம  பழகிக்கோங்கன்னு சொன்னா. அய்யோயோ, இது அதைவிட ரொம்ப கஷ்டமான பரீட்சை ஆச்சே, எப்பிடி சமாளிக்கப்போறோம்னு மனசு கிடந்தது அடித்துக்கொண்டது. இதோ பாருங்க, நான் கோத்து காண்பிக்கிறேன் சொல்லி மீண்டும் வெற்றிகரமா நூலை ஊசில கோத்து கொடுத்தாங்க. உடனே, ராஜு அப்புறமா நான்  ட்ரை பண்றேன் சொல்லி சமாளிச்சான். இப்போ அடுத்த கட்டம், trial ஓட்டம். ராஜு, சாமிக்கு வேண்டிக்கிட்டு தன்  காலை பெடல்  மேல் வைத்து லேசா ஒரு அழுத்து அழுத்த, மிஷின் சும்மா தண்ணி  போட்ட ரேஸ் குதிரையாக கோணல் மாணலாக தையல் போட்டது. ராஜு ஒரு நிமிஷம் வெலவெலத்து போனான். அம்மாடி, இதுல நெறைய சூட்சமம் இருக்கு டோய்ன்னு புரிஞ்சுகொண்டான். நூல் தான் சரி இல்ல போலிருக்கு..அப்பிடின்னு நூல் மேல பழியை போட்டு திரும்பி பார்க்கிற நேரத்திலே, தான் நினைத்தது அவன் மனைவிக்கு மூக்கிலே வேர்த்தது போல...ஆட தெரியாத நாட்டியக்காரி மித்தம் கோணலாக இருக்குனு சொன்னாளாம் அப்பிடின்னு முணுத்துக்கொண்டே  மொதல்ல அப்பிடித்தான் இருக்கும், டெய்லி கொஞ்சம் ப்ராக்டிஸ்  பண்ணுங்க சரி ஆகிடும் அப்படின்னு  அசரீரி மாதிரி சொன்னா. ராஜுவிற்கு பகிர்ன்னு இருந்தது.
ஆனாக்க ராஜு மனசை தேத்திக்கிட்டு விடா கொண்டனாக தினமும் கிரமசித்தயாக தினமும் பொறுமையா கற்றுக்கொண்டு, யு Tubeய மானசீக குருவாக கொண்டு சின்ன சின்ன, ஈஸியாக வரக்கூடிய items தைக்க ஆரம்பித்தான். இந்த மெஷின் வாங்கின வினை (தொகை)களை தினமும் தனக்கு வேண்டியவர்களுடன் வாட்ஸாப்ப் மூலம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தான். 


- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்

 

















       



No comments:

Post a Comment