Sunday, April 17, 2016

KITCHEN முதல் பிர(வே)ச(வ )ம்!!





வணக்கம் அன்பு நண்பர்களே !!!.


இது என் வாழ்கையில் முதல் முதலாக என்  சொந்த ஐடியாவில் தொடங்கும் கற்பனை கதை ..

என்ன ஊக்குவித்த என் familyக்கு அன்புடன் dedicate  செய்கிறேன்.

கண்டிப்பாக குற்றம் குறை இருக்கும்..ஆதரவும் பல தரப்பட்ட விமர்சனகளும் முழு மனதுடன் வரவேற்கப்படும்.. எனக்கு தெரிந்த  தமிழ்ல தான் இந்த ப்ளாக் இருக்கும். ரெண்டு காரணம் உண்டு..ஒன்று இலக்கண தமிழ்ல நான் ஞான சூனியம். ரெண்டாவது சாதாரண டெய்லி பேசற  தமிழ்தான் எனக்கு வரும். இந்த கதையை  படிக்கிறவங்க  அதெல்லாம் கண்டுக்ககூடாது. அது தான் என்  terms  அண்ட் conditions !!..
கச்சா-முச்சா- kitchen 

இன்னைக்கு  நான் KITCHEN ல செய்த கலக்கல் சமையல் பத்தி சொல்லபோறேன்..இவனுக்கு எப்பிடிடா வீட்ல கிட்சேன்ல  என்ட்ரி கிடைச்சுதுன்னு நினைப்பிங்க..அதுக்கு ஒரு காரணம்  இருக்கு மாப்ளே ..


"என் பொண்டாட்டி  இன்னையலேந்து ஆபீசுக்கு  போறாங்கோ டோய் "  . அதனால எனக்கு புது designation . ஹவுஸ் மேனேஜர் !. எல்லா  வீட்டு  வேலையும் MANAGE   பண்ணனுமாம் ! அதுல முதல் DUTY இன்னைக்கு சமையல் செய்யுங்கன்னு ஆர்டர் வந்துச்சி.  இது என்னடா மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைச்சு, வேற DEPARTMENTல   வேல காலி இருக்கான்னு  கேட்டேன் . வேற DEPARTMENTனா  என்னா ..டிஷ் வாஷிங், ஹவுஸ் கீபிங் , வாஷிங் CLOTHES,  காய்  கறிகள் நல்லா  பார்த்து வாங்கணும்.... யம்மாடியோவ் !! .அந்த DEPARTMENT வேல நம்ப level க்கு ஆகாது  போல அப்பிடின்னு நினைச்சு, ரொம்ப கில்லாடியா   சமையல் செய்யறேன்னு அரை மனசோட ஒத்துகிட்டேன்!! அங்கதான் நான் வாங்கின முதல் அடி!!

சரி , சுருக்குமா , புரியும்படியா , நான்  செய்யும் படியா  ஒரு receipe சொல்லு, ட்ரை பண்றேன்னு சொன்னேன் . அவ்வளவுதான்...தட தடன்னு சரமாரிய செய் முறைய ஆரம்பிச்சுட்டாங்க .சரி, இன்னியோட நம்ப புருஷ லக்ஷணம் காலி தான் நினைச்சு,  பாதி  என்னோட மர  மண்டைலேயும்  பாதி அவசரம் அவசரமா ஒரு கழுதை வாய்லேந்து புடிங்கின பேப்பர்ல  யாருக்குமே புரியாத tamiilish ல  practical பரிட்சைக்கு பிட் தயார் பண்ணிக்கிட்டேன். என்ன itemன்னு பார்த்தா அவரைக்காய் பொறியலாம் !!

மிஞ்சி மிஞ்சி போன 35 நிமிஷம் தான் உங்களுக்கு kithenல வேலை அப்பிடின்னு டைம் line  வேற!!  நீங்க சும்மா ஒரு கடாய்ல  கடுகு , ஜீரா  கொஞ்சமா எண்ணைல தாளிச்சு, அப்புறம் வேக வைத்த அவரைகாய போட்டு, மசாலா பொடி போட்டு, ரெண்டு கிளறு கிளறி ஒரு அஞ்சு நிமிஷம் அப்புறம் காஸ் ஆப் பண்ணுங்கனு பாதி answer அவுட்  ஆகிட்டாங்க. அதனால என்ன ஆபீஸ்ல டிராப் பண்ணலாமேன்னு ஒரு அன்பு request பண்ண, சரின்னு ஸ்கூட்டில டிராப் பண்ணிவிட்டு, வீட்டுக்கு  வந்து செந்தில் அரை பாண்டு, பிளஸ் எனக்கு பிடிச்ச பழைய தமிழ் பாடல்கள்  downloaded  மொபைல்  சகஜம் kitchenல ஆஜர் ஆனேன். பூ மாலையில்....    ஊட்டி வரை உறவு பட பாட்டு ஆரம்பத்துடன்  டைம் நோட் பண்ணிகிட்டேன். இப்போ மேல படிங்க, எப்பிடி நம்ம முதல் item ரிலீஸ் ஆகபோகுதுன்னு ...!!

இதுவரை பொறுமையா படித்ததற்கு நன்றி..மீண்டும் அடுத்த போஸ்டிங் வரும் வரை காத்திருக்கவும் ...ஹி ஹி!!!!

எண்ணம்,  எழுத்து வடிவம் : ரவிசங்கர்
*********************************************************************************

ஒ ! இதுங்கதான்  items 
நான்  மாஜி  கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்  தானே !!. அதனாலே சிம்பிள் data flow ரெடி செய்து, எல்லா parameters (வேண்டிய வஸ்துகள் ) லிஸ்ட் போட்டேன். இந்த datas   எல்லாம்  எந்த drive , (friegdeல ), files (items ) locate செய்து , high லைட் செய்து ட்ராக் பண்ணி வச்சுகிட்டேன். லிஸ்ட்ல  ஜீரா,கொஞ்சம் சோம்பு சேர்க்கவும்ன்னு  ஒரு லைன் இருந்தது . இப்போ எனக்கு ஒரு சின்ன . குழப்பம். எது ஜீரா, எது சோம்புனு ..பார்க்க ஒரே மாதிரி இருந்திச்சு. ஒரு சின்ன decision  பாக்ஸபோட்டு ஸ்மெல் பண்ணி பார்த்து ஜீராவை identify செய்து எடுத்து வெச்சாச்சு. அடுத்தது தாளிப்பு... கடாய்ன்னு ஒரு பாத்திரம்.. தேடினேன்  தேடினேன் . ..தேடினேன் ..எல்லா இடத்திலேயும் தேடினேன் . இருக்கிற இடம் தவிர..கொஞ்சம் கூட யூகிக்க முடியாத இடத்தில கண்டு பிடிச்சேன்..ஏன்னாக்க, நான் தான் சமையல் ரூம்குள்ள போனதே இல்லையே ! இப்போ காஸ் பற்ற வைக்கணும் ..வீட்ல நான் பார்த்த  காஸ் அடுப்பு ஆட்டோமாடிக் அதனால , ஸ்டைலா  பாட்டு கேட்டு கிட்டே on பண்ணலாமுன்னு ரைட் sidela திருகினேன். வழக்கமாக ஒரு டிக் டிக் சவுண்ட் வரும், காஸ் தானாகவே வரும். ஆனா ஏன் ராசி பாருங்க அந்த மாதிரி எந்த சப்தமும் வரலே,  காஸ்ம்  வரலே. என்னடா இது சிக்கல்னு யோசிச்சுகிட்டே அடுப்பு பக்கத்தில காஸ் lighter இருந்துச்சி. ஓஹோ, அப்புறம் என்ன கொளுத்த வேண்டியது தான்..ஒரு கையில் lighterம் , வலது கையால காஸ் on செய்யும் போது மறுபடியும் சிறு சிக்கல் . இப்போ என்னடான்னா காஸ் lighterய் டக்குன்னு அமுக்கி அதே நேரத்தில காஸ் switchi யும் ஒரே நேரத்தில connect  பண்ணனும். நா ன் அப்பிடி சரியாய் செய்ய முடியாமல் காஸ் திறந்து வச்சுட்டு அப்புறமா lighter காஸ் கிட்ட கொண்டு போய் ஒரு அழுத்து அழுத்தினேன்..அவ்வளவுதான் ..குபீர்னு சொக்க பானை மாதிரி காஸ் பூரா நெருப்பு,,,உடனே காஸ்  close  பண்ணிட்டேன். நல்ல வேளை ஒண்ணும damage ஆகலை ..யாருக்குன்னு கேட்கறிங்களா ...மேற்கொண்டு நேரம் வேஸ்ட் பண்ணாம, மீண்டும் ஜாக்கிரதையா அடுப்பு பற்ற வைத்து கடாய் ல எண்ணை ஊற்றினேன். உடனே கடுகு ஜீரா மற்ற லாகிரி வஸ்துக்கள் எல்லாம் சேர்த்து அதுல வேக வைத்த அவரைக்காய் போட்டு, மறக்காமல் சால்ட், லிஸ்ட் ல இருக்கிற பேர் தெரியாத மசாலா எல்லாம் சேர்த்தேன்.  என்னை அறியாமல் கரண்டிய வாசனை பார்த்தேன்..அட நெசமாவே அவரைக்காய் பொரியல் மாதிரியே இருக்கேனு ரொம்ப இனம் புரியாத சந்தோசம். சரி, எப்பிடியும்  boss வந்ததும் taste பண்ண சொல்லி, அடக்கமா இருக்கலாம். stove  எல்லாம்  துடைத்து  செய்து, சூட்டோ  சூடா ஒண்ணுமே நடக்காத மாதிரி இடத்தை சுத்தம்  செய்து விட்டு ..அப்பாடா ..என் முதல் KITCHEN முதல் பிர(வே)ச(வ )ம் நல்ல படியா  முடிந்தது..டைம் out noted . 60 mts . அடடா  டைம் ஜாஸ்தி எடுத்திகிடோமே ..என்ன கமெண்ட் வருமோ அந்த தீபாவளி மட்டும் இல்லாம இருந்தா கண்டிப்பா timeline match ஆகி இருக்கும் .
அட ! நெசமாவே போரியல் தான் 
ஒண்ணுமே  நடக்கலையே !

ஆபீஸ் விட்டு  ஹோம்  மின்ஸ்டர் வந்தாங்க. வரும் போதே என்ன ..கொஞ்சம் தீயற வாசனை வருதே ன்னு கேட்டாங்க ..நான் உடனே வேற பக்கம் திரும்பி எனக்கும் ஒண்ணும்  வரலையே ன்னு சொன்னேன். taste  பண்ணி பாரு .கொஞ்சம் டைம் ஆச்சு. எது எது எங்க எங்க இருக்குனு சொலவே இல்லேன்னு ஒரு safe clause போட்டு  வெச்சேன். அதுக்கு உடனே அப்ப அப்ப சமையல் ரூம்ல வந்து ஹெல்ப் பண்ணும். அப்ப தான் தெரியும் என்  கஷ்டம் எல்லாம் ஒரு பதில் வந்தது . வேலி மேல  இருக்கிற ஓனானை மேல விட்டுக்குவானே, அப்புறம் குத்துதே ! குடையுதேன்னு!  சொலுவாங்க அது மாதிரிதா ஆச்சு. சொன்னா நம்ப மாட்டிங்க ..ஒரு ஸ்பூன்ல பொரியல எடுத்து ஸ்மெல் பண்ணினா ...என்ன அதிசியம்..உம்..வாசனை தூக்குதேனு சொன்னா ..அவ்வளவுதான் ஏன் மனசு தன் தன , தன் தன ன்னு இளையராஜா பாட்டு மனசல பாடிச்சு ..அவ்வளவு சீக்கிரம் என்  mind  பாட்டு  நிலைகல...taste சூப்பர் ..எல்லா   சாமான்களும் காலி பண்ணிடிங்களா? கூகிங் எப்பிடி சிக்கனம் செய்யறதுல தான் சாமர்தியம்னு ஒரு passing டிப்ஸ்  வேற கிடைச்சுது ..

ஒ ..இது தான்  தாளிப்பா !
Anyways நீங்க சமையல் எக்ஸ்பெர்ட் ஆகிடிங்க.இனிமேல் தைகிரியமா நான் ஆபீஸ் போகலாம்ன்னு ஒரு தலையில ஒரு கௌரவமான குண்ட தூக்கி போட்டாங்க. இது நடந்து ரொம்ப வருஷம் ஆச்சு. அனா என் பொண்டாட்டி சொல் மந்திரம் அப்பிடியே இன்னி வரைக்கும் நடக்குது. ரொம்ப சந்தோசம். கை வசம் இன்னும் ஒரு கலை இருக்குனு. இனி நானும் சமையல் போட்டியில் வந்தாலும் வருவேன்..உஷார்..



,கண்டிப்பா அவரைக்காய் பொரியலே தான் t 


இங்கே இருக்கிற படங்க எல்லாம் கொஞ்சம் கேவலமா இருக்கும். அனா இதெல்லாம் உண்மையான என்  மொபைல் கேமரால எடுத்ததுதான்.

கண்ட கண்ட ஹோட்டெல கண்டத சாப்டறத விட நாமே செஞ்சு சாப்டற சுகமே !! ஆரோகயமும் கூட !!!...வரட்டா !!!
*********************************************************************************

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்