Monday, August 5, 2019

மொறு மொறு கொசுறு

                                                                 மொறு மொறு  கொசுறு

இந்த கதையில் ராஜு வாழக்கையில் சந்தித்த ஒரு வித்தியாசமான கேரக்டர். அவங்க எப்படி  வித்யாசமானவங்கன்னு பார்க்கலாமா. இவங்க பெயர்  கோகிலா. இவங்க மற்ற பெண்களைப்போலவே தான் இருப்பாங்க. ஆனால் ஒரு  தமாஷான  அல்லது விதியாசமான  குணாதிசியத்தை கொண்டவங்க. கோகிலாவுக்கு  ஓரளவுக்கு தான் படிப்பு.  ஆனால் ஸ்ட்ரீட் ஸ்மார்ட், எந்த வேலை கொடுத்தாலும் பம்பரமாக சுழன்று செய்வாங்க, வீட்டு வேலையிலிருந்து வெளி வேலை வரை, assaultஆக  செய்வாங்க. ரொம்பவும் பேச்சு சாமர்த்தியம், கடைக்கு  போனால் பேரம் பண்ணாமல் ஒரு சாமானும் வாங்கமாட்டாங்க.

இதிலென்ன  வித்தியாசம் இருக்குனு தோணும். மேட்டர் வெறும் பேரம் பண்ணைகூடிய  ஷாப்பிங் இல்ல. இவங்களுக்கு ஸ்னாக்ஸ் கடைக்கு போகிறது என்றால்  ரொம்பப்பிடிக்கும்.  நம  நமனு  கை  அரிக்கும். நாக்கிலே  ஜொள்ளு ஊரும். அதை குறித்து ஒரு சம்பவத்தை பாக்கலாமா. ஒரு சமயம் ஸ்ரீனிவாசா போளி ஸ்டாலுக்கு போய் இருந்தாங்க. அங்கே சரியான கும்பல் நெறிச்சி தள்ளியது  . இவங்க  பந்தாவாக கும்பலை தள்ளிக்கொண்டு முன்னாடி போய் நின்னாங்க.
அங்க இருக்கிற கர கர மொற மொற  பண்டங்களையெல்லாம் பொறுமையா ஒரு நோட்டம் விட்டாங்க . சரி , இனிக்கிக்கு ஒரு கை  பார்க்க வேண்டியது தான்னு வயிறு சொல்லியது. அவங்க பக்கத்தில ஒரு பெரிய கடாயில வெங்காய தூள் பகோடா கம கமான்னு  ரெடி ஆகிக்கொண்டிருந்தது. அந்த பக்கோடாவை மாஸ்டர் லாவகமாக பக்கத்திலிருந்த எண்ணெய் வடிகட்டியில் போட்டுக்கொண்டிருந்தாரு .உடனே நம்ப கொசுறு  கோகிலா, "இந்தாங்க, கொஞ்சம் கொசுறு கொடுங்க, சரியா வெந்துருக்கானு பாக்குறேன், நெறய வாங்க வேண்டி இருக்குது"னு  கைய நீட்டினாங்க. அதுக்கு மாஸ்டர் அவங்களை  ஏற இறங்க ஒரு முறை பார்த்துவி ட்டு, "எல்லாம் கண்டிஷனா தா இருக்கும். நீங்க வேண்டுமானா சாம்பிள் பாருங்க"ன்னு அந்த ஜாலி கரண்டியிலிருந்து ஒரு 50 கிராம் சுட சுட பக்கோடாவை கோகிலா கையில கொடுத்தாரு. கோகிலாவிற்கு பழம் நழுவி பாலில்  விழுந்து அங்கிருந்து வாயில் விழுந்த கதையாய் ஆனது . கோகிலா உடனே, " போறும்ப்பா, கொஞ்சம் போதும், ஒரே எண்ணெய்" அப்பிடின்னு சொல்லிக்கொண்டே அத்தனை பக்கோடாவையும் பக்கத்திலிருந்த நியூஸ் பேப்பரில் வாங்கிகொண்டாங்க. சரி, இவங்க சாப்பிட்டு டேஸ்ட் எப்பிடி இருக்குனு சொல்ல போறாங்கன்னு  கோகிலா முகத்தையே  பார்த்து கொண்டிருக்க, நம்ப ஆளு அந்த பக்கோடாவை சமர்த்தியமா  பொட்டலாமா மடிச்சு,  கையோடு கொண்டு வந்திருந்த பையில பத்திரமா வச்சிக்கிட்டாங்க. "இல்ல, வயிறு, ஒரு மாதிரி இருக்கு, அதான் சாப்பிடலன்னு"  ஒரு சமாளிப்பு . மாஸ்டர் ஒரு மாதிரி அவங்கள பாக்கிறதுக்குள்ள, கோகிலா கவுண்ட்டர் பக்கம் வேகமாக போனாங்க. இன்னிக்கி கொஞ்சம் சிப்ஸ் வாங்கலாம்னு ஒரு ஐடியா தோணவே, கடை காரரை பார்த்து, "இந்த வாழைக்காய் சிப்ஸ் உப்பு போட்டதா? இல்ல காராமா ?"னு கேக்கவே, அவரும்ன கொஞ்சம் சிப்ஸ் கையில் கொடுத்து, "உப்பு போட்டதுதான் பாருங்க"ன்னு காண்பிக்கவே, "கொஞ்சம் சாம்பிள் கொடுங்க பாக்கலாம்"னு கேட்டாங்க.
salted  சிப்ஸ் இவங்க கைக்கு இடம்மாறியது. அதை வாயில் போட்டுகொண்டு, "ரொம்ப உப்பாக இருக்கு, கொஞ்சம் காரம் போட்டது கொடுங்க எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்?"னு கேட்டாங்க.  மீணடும் சிப்ஸ் கை  மாற்றம். கொஞ்சம் வாயில் போட்டு கொண்டு, "பரவாஇல்லை   , சூடா  இல்லயே ..?இன்னிக்கி போட்டதா"னு கேட்டாங்க. அந்த பையன் இவங்கள கொஞ்சம் உஷாரா பார்த்து, "மதியம் தான் போட்டது, இன்னும் சூடு கூட ஆறலை பாருங்க"ன்னு சொல்லி, மேலும் கொஞ்சம் கார சிப்ஸ் கைல கொடுத்தான். அட, இது நம்ப கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லையே என்று மனசுக்குள் ஒரு அல்ப சந்தோசம். "எவ்வளவுங்க  வேணும், ஒரு கிலோவா ரெண்டுங்களா" என்று கேக்கவே, கோகிலா உடனே சுதாரித்துக்கொண்டு. " இப்போ ஒரு 100 கிராம் கொடுங்க, வீட்ல கேட்டுட்டு மேல வாங்கிக்கிறேன்"னு சொல்லி நிலைமை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. அவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே 100 கிராம் சிப்ஸ் எடை போட போனான். கோகிலா சும்மா இருப்பாங்களா , ..100 கிராம் சிப்ஸ், 100 கிலோ மாதிரி நினைச்சுகிட்டு எடை சரியாய் இருக்கானு பார்த்துக்கொண்டே இருக்கையில் அவன் சரியாய் 100 கிராம் அளந்து போட, கோகிலா அவனை இடை மறித்து, "இன்னும் ரெண்டு கொசுறு போடுங்க... எல்லாம் பொடிஞ்சு இருக்கு" அப்பிடினாங்க. "40 ரூபாய் கொடுங்க சில்லறையா, இல்லேன்னா ஒரு பத்து ரூபாய்க்கு பர்பி வாங்கிக்கோங்க" அப்பிடினான். "50 ரூபாய் மொத்தம் ஆகிடும். என்கிட்ட வேற சிலரை இல்லை". கோகிலா ரொம்ப சாமர்த்தியமா , "என்கிட்ட 500 ரூபாய் தா இருக்கு, வேற இல்லையே, என்ன செய்ய, சிப்ஸ் திருப்பி எடுத்துக்கோங்க" ன்னு ஒரு அலட்சிய பார்வையோடு சொல்லவே, அதற்கு, "நீங்க சில்லறை மாற்றி  திரும்பி போகும் போது  கொடுங்க"ன்னு அவங்களை கழட்டி விட பார்த்தான். நஷ்டம் வெறும்  100 கிராம் மட்டும் தான்னு அவன் கணக்கு , இல்லேன்னா  இந்த அம்மா free   சாம்பிள்லேய கடையே காலி பண்ணிடு வாங்க போலன்னு. கோகிலா மனதில் ஒரேடியா  வெற்றிப்புன்னகை . இன்னிக்கி யார் முகத்தில முழிச்சமோ   ..நல்ல லாபம். சரி, நேர வீட்டுக்கு நடையை கட்ட வேண்டியது தா நினைத்துக்கொண்டே நகரும் போது தாகம் தொண்டையை வறட்டவே , ஏதாவது கலர் இல்ல சர்பத் குடிக்கலாம்னு ஐடியா தோன்றியது. சொல்லி வெச்ச மாதிரி கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில் இளநீரும் மற்றும் தேங்க பூவும் ஒருத்தர் கூவி கொண்டிருந்தாரு. கோகிலாவிற்கு அதை கண்டதும், அவங்களுடைய விபரீத ஆசை மீண்டும் காஞ்சனா 3 டான்ஸ் ஆடியது. தானாகவே அந்த கடை காரனிடம் தன உடல் பொருள் ஆவி எல்லாம் தள்ளிக்கொண்டு போனது..
ஒரு விதமான மோகத்தில் கட்டுண்டவள்  போல சென்றாள் . தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்னு சொல்றபோல, அவங்க மனம் அநத தேங்காய் பூவின் மீது ஆசை  விழுந்தது. வழக்கம்போல் அவனிடம் சென்று,  "இளநீர் எப்பிடிப்பா?" னு கேட்டுக்கொண்டே, "அது என்னப்பா வெள்ளையா இருக்கே, தேங்க மேல" னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டாள். அவன் இதுக்கு தான்  காத்திருந்த மாதிரி, "அது தேங்க பூம்மா, ரொம்ப ருசியா இனிப்பா  இருக்கும்"னு சொல்லிக்கொண்டே இளநீர்ரை வெட்ட போனான். "ஒ, அப்பிடியா நான் சாப்பிட்டதே இல்லை" என தன்  அடுத்த ப்ரொஜெக்ட்க்கு ஒரு முஸ்தீபு போட்டாள். "அப்போ கொஞ்சம் வெட்டி  கொடு.. சாப்பிட்டு பாக்கலாம், உடம்புக்கு நல்லதுன்னு வேற சொல்றிங்க."..இத கேட்டு தனக்கு, ஓஹோ ரெண்டு வியாபாரம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்  டோய் இன்னிக்கி என மனசுக்குள்ள சந்தோஷ பட்டு ஒரு கீத்து தேங்காய்  பத்தை மாதிரி நறுக்கி கொடுத்தான். அதை சாப்பிட்டுவிட்டு , "அடே டே , ரொம்ப நல்ல இருக்கே, இளநீர் வெட்ட வேண்டாம் , தேங்காய் பூவே வாங்கலாம்னு நினைக்கிறன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கைப்பையிலிருந்த மொபைல் போனை கையில் எடுத்தது, "இருப்பா , கொஞ்சம் வீட்ல கேக்குறேன், எவ்வளவு வேணும்னு" அப்பிடின்னு சொல்லி, கொஞ்சம் தள்ளி போய் பேசுகிற  மாதிரி பாசாங்கு செய்துட்டு இருந்தாங்க. இதறக்கிடையில், கடைக்கு வியாபாரம் பெருகவே, அவனது கவனம் வேறு பக்கம் திரும்பியது. இது தான் சாக்கு என்று  அங்கிருந்து கோகிலா நழுவினாள். இவ்வாறாக கோகிலாவின் வாழ்க்கை  கொசுறும் வயிறுமாக நகர்ந்தது..

காலப்போக்கில் , கோகிலாவிற்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியது. அவர்கள் பெற்றோர்களுக்கு அவளுடைய அந்த கொசுறு வியாதி கொஞ்சம் கூட தெரியாது. மாப்பிள்ளை மனோகருக்கு தங்கள் பெண்ணின் பெருமைகளை விலா  வாரியாக சொல்ல, பிள்ளை வீட்டார், எங்களுக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம் நல்லா குடும்பத்தை  சாத்தியமாக நடத்துறே பெண்ணே வேண்டும் என்று சொன்னார்கள்..ஆஹா, ஜாடிக்கு ஏத்த மூடி சரியாய் , என கோகிலா மனதுக்குள் சந்தோச பட்டாள். காசிக்கு போனாலும் கர்மம் விடாது போல, கல்யாணம் ஆகியும் அவளுடைய அந்த கொசுறு புத்தி கொஞ்சம் கூட மாறவே இல்லை. மனோகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அந்த மனோ வியாதி பு ரிந்தது. இருந்தாலும் கண்டுக்காம விட்டுடான். எதிர்பார்த்த மாதிரி, சரியாய் ஒரு வருடம் கழித்து கோகிலா பிரசவம்..ஆஸ்பத்திரியில் குறுக்கும் நெடுக்குமாக மனோகர் மற்றும் அனைவரும் கவலையோடு இருந்தார்கள். பிரசவம் எந்த நிமிடத்திலும் ஆகலாம். சரியாய், 5 நிமிடம் கழித்து , ரூமிலிருந்து குழந்தை அழும் சப்தம் கேக்கவே, எல்லோரும் டாக்டர் எப்போ ரூமிலிருந்து வருவாங்க னு காத்திருக்கும் போது , நர்ஸ்  கையில் குழந்தையுடன் ஓடி வந்து,  "பொண்ணு பொறந்திருக்கு" னு சொல்லவே எல்லோரும் ரொம்ப சந்தோச பட்டார்கள் . மனோகரின் முகத்தில்  ஒரே சந்தோசம். இது நடந்து ஒரு 2 நிமிடம் ஆகி இருக்கும் மற்றொரு நர்ஸ் கையில் இன்னொரு குழந்தையுடன் வந்து, "ட்வின்ஸ்ங்க பையன்"னு சொன்னாங்க, எல்லோருக்கும் ரெட்டை சந்தோசம். அட அமாம், கொசுறு கோகிலாவிற்கு, குழந்தையும் கொசுறாக  கிடைத்தது. கோகிலா ரொம்ப சநதோஷமாய் மனோகரை பார்த்து கொசுரித்தாள் !!! .

எண்ணம், எழுத்து - ரவிசங்கர்

*********************************************************************************








.


   

Thursday, July 18, 2019

முண்டியடி முகூர்த்தம் !!!

                               

                                                     முண்டியடி முகூர்த்தம் !!!!

அமாம் , மீண்டும் ராஜூவே தான்.. ராஜுவின் வாழ்க்கை ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி சும்மா அலுங்காம தளும்பாம சூப்பர்ah போய்  கொண்டிருந்தது. வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், வாக்கிங்..அப்போப்போ வெளியில போஜனம் வேற. யாராவது பேச்சுக்கு கூட வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாலோ இல்ல சும்மா ஏதாச்சும் கல்யாண நோட்டீஸ் வந்தாலே போதும் குடும்ப சகிதமா  கெளம்பிடுவாங்க. இந்த கதையின் சாராம்சமே , ராஜுவும் அவன் பாமிலியும் ஒரு தூரத்து சொந்தக்காரங்க வீட்டு
கல்யாணத்துக்கு போயிடு வந்த புராணம் தான்.

அப்பிடி ஒண்ணும் எல்லாமே பிரீ இல்ல. ஏனென்றால் , இந்த ப்ராஜெக்ட் ல CALLTAXI  மற்றும்  SURGE  சார்ஜ் அடங்கவில்லை . இந்த கட்டத்தில் கால் டாக்ஸியை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இப்போ எல்லாம் யாரும் வயத்தை குலுக்குற ஆட்டோவில, driver கிட்ட  பட்ட பகல்ல நட்ட நடு பாஜார்ல யாரும் பேரம் பேசுறது இல்ல. சும்மா , அலட்ச்சியமா கைல இருக்கிற மொபைல் APP USE   பண்ணி  டாக்ஸி புக் பண்றங்க. அதே தோரணையில் ராஜுவும் தன் மொபைல் எடுத்து கால் டாக்ஸி அழைக்க ஒரு மணி நேரம் முன்னதாகவே   தொடங்கினான் ...தொடங்கினான்...தொடங்கினான்...!! ராஜுவுக்கு வயசாகிவிட்ட காரணத்தினாலே கண்ணு வேற சாளேஸ்வரம்.!!! ஒரு கைல மொபைல், இன்னொரு கை விரலால லொட்டு லொட்டுன்னு ட்ராப் அட்ரஸ் அடிக்கிறதுக்கே 10 நிமிஷம் . அதையும் தப்பு தப்பா அடிக்க,
 அந்த GPS  APP   , அட்ரஸ் தேடறேன்  பேர் வழின்னு சுத்த ஆரம்பிக்க, வீட்க்குள் இருந்து, ஹை command என்னங்க முகூ ர்த்தம் முடிஞ்சிடும் போல இருக்கே, நீங்க டாக்ஸி புக் பண்றதுக்குள்ளேன்னு ஒரு குரல் விட்டாங்க. உடனே, ஆமா  நீ இன்னும் ரெடி ஆகவே இலையே, உன் சீ(மந்த !) புத்திரனை கூப்பிடு கொஞ்சம், அவன் தான் மொபைல் கிங் னு சொல்வதற்குள் அந்த வடு மாங்காய் ராஜுவின் கையிலிருந்த மொபைல் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவன்  கைக்கு மாற்றினான். ஒரு 5 செகண்ட் தான்  ஆகி இருக்கும், அந்த பையன் மொபைல்ல, அவனுடைய புத்திசாலி அப்பா அடித்திருக்கிற ட்ராப் அட்ரெஸ்ஸை பார்த்து பயங்கரமா சிரித்துக்கொண்டே அம்மா, இந்த அப்பா எப்பிடி TYPE   பண்ணி இருக்காரு பாருங்கன்னு ஊரெல்லாம் கேக்கும்படி கத்திகொண்டே ஓடினான். வெங்கட்ராமன் ஸ்ட்ரீட் TYPE  பண்றதுக்கு பதிலா வெட்கம் கெட்ட ராமன் ஸ்ட்ரீட்  ன்னு போட்ருக்காருனு சொல்ல, அவ்வளவுதா, அம்மா முகத்தில ஒரு நக்கல், நய்யாண்டி தோரணை..உங்க அப்பா, எதை தா ஒழுங்கா செஞ்சிருக்காருனு ஒரு  இலவச performance certificate  கிடைக்க பெற்றான். மீதிருந்த 40 வினாடியில், டாக்ஸி confirm  ஆகியது.

டாக்ஸியில் முன் சீட்டில் பையனும், பின் சீட்டில் இருவருமாக உக்கார்ந்தார்கள். சார், எந்த ரூட் ல சார் போகணும்ன் னு கேக்க, ராஜு கொஞ்சம் நக்கலாக, சீக்கிரம் போனாக டிபன் சாப்பிடுவோம்,லேட்டா  போனாக்க முகூர்த்த சாப்பாடு அப்பிடின்னு சொன்னான். டிரைவர் முகம் ஒரு மாதிரியா போனது. டிரைவர் பெயரை சொல்லி, AC கொஞ்சம் போடுங்க, ரொம்ப சூட இருக்கு காலையிலேயேன்னு சொல்ல, அதற்க்கு டிரைவர் , சார், AC full ah தான் சார் வெச்சுருக்கேன், அவ்வளவுதா சார் வரும், நீங்க வேணும்ன ட்ரிப் கேன்சல் பண்ணிக்கலாம் சார்னு சொல்லி அவன் வஞ்சம் தீர்த்து கொண்டு ஸ்பீட் யை குறைத்தான் . இது என்னடா புது திருப்பமாக இருக்கே, முகூ ர்த்தம் நேரம் நெருங்குதே அப்பிடின்னு. பக்கத்தில wife பக்கம் திரும்ப, அவங்க வேற பக்கம் திரும்பினாங்க. இப்பிடி எங்களை நடு தெருவில விட்டா  நாங்க எப்பிடி போறது, என்ன இப்பிடி சொல்றீங்க னு கேக்கவே, சார், நான் உள்ளதை தான் சொன்னேன்,எனக்கும் தான் சவாரி போகுது அப்பிடின்னான். சரி, எப்பிடியோ சீக்கிரம் கொண்டு விட்டாக்க  சரி . சார், கேஷ் payment ah  இல்ல கார்டா  சார். ராஜுவிற்கு ஒரே எரிச்சல் ..ஏன் கேக்குறீங்க..? இல்ல சார், CASH  ன்னா வண்டிக்கு டீசல் போடணும்..அதான்  கேட்டேன்..நீங்க தா முதல்  சவாரி ..ராஜுவின் கையில், மொய் காசு மட்டுமே இருந்தது. மீண்டும் ரைட் சைடு பார்த்தான்.  உடனே handbag வாயை  திறந்தது. காசு பரிவர்த்தனை சீக்கிரம் நடந்தது. ராஜு மீண்டும் பெரு மூச்சு விட்டான்.

கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள்  . டாக்ஸி கட்டணம் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கை  விட்டு போனது. டிரைவரிடம் சில்லறை இல்லாத காரணத்தினால். கல்யாண வரவேற்பு குழுவில் அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒன்று வரவேற்ப்புக்குழு அனைவரும் marriage காண்ட்ராக்ட் யுவதிகள். வாயில் செயற்கை சிரிப்பு, கூடவே, ஏண்டி, இன்னிக்கி payment கொடுப்பங்களான்னு? சக தோழியிடம் கேட்டுகிட்டே கும்பிடு போட்டாங்க. ரெண்டாவது காரணம், கலயாணத்திற்கு அழைத்தவர்கள் ஏதோ தூரத்து உறவோ இல்ல friend!! அதனால் என்ன, ராஜு வாட்ச் பார்த்தான். டிபன் சாப்பிடும் நேரம் முடிவடையும் நேரம் நெருங்கியது. ஆனால்  லஞ்ச்க்கு இன்னும் நெறய நேரம் இருந்தது. ரெண்டும் கேட்டான் நேரம்.. நன்றி டாக்ஸி நண்பர்,!!


ராஜுவின் மனைவி, வாங்க சீக்கிரம், டிபன் கடை முடிய போகுது, அப்பிடியே சாப்பிட்டுவிட்டு மணமக்களை வாழ்த்தி அப்புறமாக மொய்  எழுதலாம்னு சொல்ல, அதற்க்கு ராஜு, டிபன்  ஓவர் போல, நம்ப லஞ்ச் க்கு  போகலாம் னு சொல்லி அவங்களை முன்னே தள்ளினான். அதற்கு, இந்த லஞ்ச் மெனு ரொம்ப bore  ங்க. ஸ்டாண்டர்ட் மெனு தான் போடுவாங்க. சாம்பார், ரசம், அவியல், பருப்பு உசிலி, புளி  சாதம் அப்புறம் ஒரு பாயசம் தான் இருக்கும் அப்பிடின்னு மெனு லிஸ்ட் கொடுத்தாங்க. டிபன்ல மசால் தோசை, இடியாப்பம், பாதாம் ஸ்வீட், பூரி தவிர இட்லி, வடை பொங்கல் எல்லாம் இருந்துச்சாம் 10 மணி வரை. நீங்க தான்  அவசரபட்டிட்டீங்கன்னு பொலம்பினாங்க. கூட  வந்த பையனுக்கு, இவங்க சண்டையில தனக்கு எதுவுமே கிடைக்காது போல   இருக்கே னு மூஞ்சி வாடியது. இடையில் மீண்டும் அந்த கேட்டரிங் அழகிகள் வந்து ஒரு கலர் சர்பத் கொடுக்க, சக குடும்பத்தினர் எல்லோரும் பசியின் கொடுமையால் அதை  என்னனு கூட பார்க்காம வாங்கி மட மட என்று குடித்தனர் . ஒரு மாதிரி முகூர்த்தம் முடிய ராஜு தம்பதியினர் மணமக்களை வாழ்த்தி மொய் எழுதி அப்பிடியே மறக்காமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும் கொண்டாங்க. இப்போ அடுத்த கட்டம். சிறு குடல் பெருங்குடலை விழுங்கியது.

அவ்வளவுதான் ..அடுத்த 5 நிமிஷத்தில அனைவரும் டைனிங் ஹால்ல நோக்கி படை எடுத்தனர். அங்கே போனால்  ஒரு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. ஏற்கெனவே ஒரு பந்தி நடநதுகொண்டிருக்க அவரக்ளின் பின்னாடி அடுத்த பந்தி ஆட்கள்  HARI NIVAS HOTELa TOKEN TABLE la வெச்சிட்டு  நிக்குற மாதிரி   விவரமா நின்றுகொண்டிருந்தார்கள். இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத situation ராஜுவும் அவன் மனைவியும் குழம்பி கொண்டிருக்க, அவங்களோட பையன் சடார்என்று கூட்டத்தை தள்ளி கொண்டு முந்தினான். அப்பா, அம்மா இங்க வாங்கன்னு எதிர் வரிசையிலிருந்து கூவினான். பையன் ரொம்ப சாமர்தியமா தான் ஒரு chair லேயும், மீதம் ரெண்டு chairகளை  தன இடது மற்றும் வலது கைகளால் பிடித்து கொண்டிருந்தான், பெற்றோர்களுக்கு பெருத்த நிம்மதியும் கூடவே பிள்ளையின் சாமர்த்தியத்தை கண்டு ரொம்ப சந்தோசம். டாக்ஸி செலவு செய்துட்டு வந்த காரியம் நிறைவேற போகுதுனு அப்படி, ஒரு நிம்மதியுடன் பந்தியில் மும்முரமாக இறங்கினார்கள். என்ன, ஆச்சர்யம்,  ஒவ்வொரு ஐட்டமாக பரிமாற, அவன் மனைவி சொன்ன மாதிரியே அத்தனை ஐட்டம்களும் வந்தது. முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும், பசியின் கொடுமையினால் அத்தனை ஐட்டம்களும் அவர்களுக்கு தேவாம்ருதமாய் இருந்தது. பையன் கொஞ்சம் அடக்கி தான் வாசித்தான். ஏண்டா கம்மியா சாப்பிடுறன்னு கேட்டதுக்கு, அதோ அங்க இருக்கு பாருங்க, டெஸெர்ட் CORNER  ..அதுக்கு தா.. RESERVATION  அப்பிடின்னு சொல்லவே ராஜுவிற்கு..அடடா இது தெரியாம போச்சே..நம்ப கூட கொஞ்சம் கம்மியா வாசித்திருக்கலாம்னு நினைச்சன்.

ANYWAYS , அந்த குறையும் இல்லாம, மொய் எழுதின அமௌண்ட்க்கு மேலாகவே சாப்பிட்டு சந்தோஷமா, வெற்றிலை பாக்கு தேங்காய் பையுடன் வெளியே வந்து, மீண்டும் டாக்ஸி புக் பண்ணுவதில்  முனைந்தான்.

எண்ணம், எழுத்து  - ரவிசங்கர்

***********************************************************************************










Monday, October 8, 2018

கருப்பு கண்ணாடி


                                                           கருப்பு கண்ணாடி

 நீங்கள் மேற்கொண்டு படிக்கப்போவது இதுவரை நீங்கள் படித்து வந்த ஹாஸ்ய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தை கொண்ட ஒரு வித்யாசமான கதை. தொடருங்கள் திறந்த மனதுடன்....!!

 ராஜுவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட நண்பர்கள் உண்டு. எல்லோரிடமும் அவர்கள் வயதிற்கு ஏற்றவாறு பழகும் குணம் உடையவன். அப்பிடிப்பட்ட இளைஞர்  நண்பர்களில் வித்யாசமான துடிப்புள்ள  நண்பன் உமேஷ். இவனுக்கும் ராஜுவிற்கும் குறைந்த  பட்சம் 40 வயசு  வித்தியாசம் இருக்கும். இவர்கள் நட்பு அறிமுகம் ஆனதே ரொம்ப சுவாரசியம். இவர்கள் ஒரு பிசினஸ் மீட்டிங்கில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது, உமேஷ் ஒரு enterprising கேரக்டர். மீட்டிங்கில் ராஜுவும்  அவன்  பக்கத்தில் அமர்ந்து இருந்த உமேஷ்சும் மாறி மாறி கேள்விகளை
கேட்டவாறு  இருந்தனர். இருவரின்  thinkingஉம்  ஒரே மாதிரி இருக்கவே இருவரும், தங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்களுடைய மொபைல் நம்பர்யை exchange  செய்துகொண்டு விடை பெற்றுக்கொண்டனர். உமேஷ் போகும் போது ராஜூவை பார்த்து, "சார்.. உங்களோட பிசினஸ் approach மிகவும் practical ஆக இருக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்' என்று சொல்லி, அடுத்து எப்போது, எங்கே மீட் பண்ணலாம் என்ற விவகாரத்தை உற்சாகத்துடன் சொல்லி முடித்து விடை பெற்றான.

சொல்லியபடியே அவர்கள் இருவரும் காபி ஷாப்பில் மீட் பண்ணினார்கள். நெறய விஷயங்களை உமேஷ் .பகிர்ந்துகொண்டான். இவர்களுடைய நட்பு அடிக்கடி மீட் பண்ணும் படி நேர்ந்தது. உமேஷுக்கு  ராஜு மீது ஒரு அபிமானம் உண்டாக்கியது. ராஜூவை தன் friend , philosopher அண்ட் guide போன்று பாவித்தான். தன் பேமிலி மற்றும் தன் சொந்த விஷயங்களை பற்றி ராஜுவிடம் பகிர்ந்துகொண்டான். ராஜுவும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் கேட்டு கொண்டான். உமேஷ் ஒரு சிறந்த multi -talented இளைஞன். பரதநாட்டிய கலைஞன். அதை தவிர மற்ற விஷயத்திலும் ரொம்பவும் ஸ்மார்ட் ஆக  இருந்தான். அவனுக்கு போட்டோகிராபி கை வந்த கலை . மேலும் அவன் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜித்தன். இது போறாதுன்னு கிட்டார் வேற கற்று கொண்டு வருகிறான். நல்ல துடிப்பான எல்லோரிடமும் சகஜமாக நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசும் குணம் உடையவன். உமேஷுக்கு  சீனியர் சிடிஸன்ஸ்  என்றல் ரொம்ப பிடிக்கும். இது ரொம்ப வியப்பான விஷயம். நோ டவுட் உமேஷுக்கு , ராஜூவை பிடித்தது.
.

ஒரு சமயத்தில் உமேஷை அவன் பெற்றோர்கள்  கல்யாணம் பண்ணிக்கொள்ள complel பண்ணுகிறார்கள் என்று சொன்னான். . ஏனென்றால்  அவன் சென்னையில் ஒரு MNC கம்பெனியில்  நல்ல வேலையில் இருந்தான். வயது 26. இந்த கட்டத்தில் உமேஷ்  தனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என சொல்லவே, ராஜுவும்,  "ஆமா, இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்சம் வருஷம் போகலாம், நல்லா  சம்பாதித்து, உன் டான்ஸ் திறமையை வெளிப்படுத்து, வெளி நாட்டு அசைன்மெண்ட் வந்தால் நல்ல experience கிடைக்கும், நல்லா காசு சேர்க்கலாம் " அப்பிடின்னு அட்வைஸ் பண்ணினான். ஆமா, அது தான் என்  பிளான், ஆனால் ..என்று ஒரு இழு இழுத்தான் .இந்த தருணத்தில் உமேஷ்  ஒரு ரகசியமான அதிர்ச்சியான உண்மையை  ராஜுவிடம் சொன்னான். அதை கேட்ட ராஜுவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஆனால்  சுதாரித்துக்கொண்டு மேலும் விவரமாக கேட்டுக்கொண்டான். தனக்கு ஏன் கல்யாணத்தில் நாட்டம் இல்லை என்ற காரணத்திற்கு அவன் சொன்ன பதில் ராஜுவிற்கு இப்பொது புரிந்தது. உமேஷ் தான் ஒரு GAY எனவும், தனக்கு பெண்களிடம் கவர்ச்சி இல்லை  எனவும், தன்னால் ஒரு பெண்ணின் life கெட கூடாது என்பதற்காகவும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என கூறினான். ராஜுவிற்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் மறு பக்கம் உமேஷ் எவ்வளவு தெளிவாக பேசுகிறான் என்கிற உண்மையும் புரிந்தது. ராஜூவினால் உடனே ரெஸ்பாண்ட் பண்ண முடியவில்லை. ராஜுவின் வாழ்கை பயணத்தில் இந்த மாதிரி மக்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறான், நெறய படித்தும் இருக்கிறான். ஆனால் இதுவே முதல் தடவை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு. ராஜுவிற்கு உள்ளுர ஒரு பயம் கலந்த சந்தேகம். என்னாக்க, தன்னிடம் அபிமானம் மற்றும் கிளோஸ் ஆக இதற்கு தான் பழகுகிறானோ? ஏற்கனவே உமேஷுக்கு  சீனியர்ஸ் கண்டால் ரொம்ப பிடிக்கும். என்னடா இது புது திருப்பமாக இருக்கேன்னு யோசனை பண்ணி கொண்டிருக்கும்போது, உமேஷ், சார் நீங்க ஒண்ணும்  worry பண்ணிக்காதீங்க, நீங்க என்  அப்பா மாதிரி அப்பிடின்னு சொல்லவே, ராஜு மனசுக்குள் நிம்மதி பெரு மூச்சு விட்டான். உமேஷ், ராஜுவிடம், "நீங்க தான் சார், எப்பிடியாவது  என் parents  கிட்ட சொல்லி புரியவைக்கணும், நான் கல்யாணத்துக்கு லாயக்கு இல்லை" அப்பிடின்னு ரொம்ப கெஞ்சினான். ராஜுவும் அவனுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லணுமே என்கிற முறையில், 'இப்போது, அத பத்தி ஒன்னும் worry பண்ணிக்காதே, சமயம் வரும்  போது பார்த்துக்கலாம், இப்போதைக்கு  ஏதாவது ஸ்டராங் காரணம் சொல்லி கொஞ்சம் வருஷம் வாய்தா வாங்கிக்கோ..யோசிப்போம், எப்பிடி solve  பண்ணலாமுன்னு " அப்பிடினு சொல்லி ராஜுவும்  வாய்தா வாங்கிக்கொண்டான். உமேஷினின் பெற்றோர்கள் ரொம்பவும் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் . அவர்களுக்கு ஒரு மகன் உமேஷும், மகள் ரசிகாவும் உள்ளனர். ரசிகாவிற்கு கல்யாணம் ஆகி, தன் கணவருடன் வெளி  நாட்டில் இருக்கிறாள் . உமேஷ் ஒரே பையன் என்பதினால் அவன் மேல் மிகவும் பாசமாக இருப்பதில்  ஆச்சர்யம் இல்லை..
அவனை மேல் படிப்பிற்காக கூட வெளி நாடு செல்ல அரை மனதுடன் சம்மதித்தார்கள். உமேஷுக்கும் ரசிகாவிற்கும் ஒரு நல்ல understanding இருந்தது, ரசிகாவும் கர்நாடக சங்கீதத்தில் தனியாக கச்சேரி செய்யும் அளவிற்கு ரொம்பவும் தேர்ச்சி பெற்று இருந்தாள்.  இப்பேற்பட்ட சூழ்நிலையில் உமேஷ் ரொம்பவும் குழம்பி கிடந்தான். உடனடியாக ஏதாவது action எடுத்தால் தான் பெற்றோரின் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என ராஜூவை, மீண்டும் "ஏதாவது solution சொல்லுங்க சார்"னு பிடுங்கி எடுத்தான். உடனே, ராஜுவின் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. உமேஷிடம், இந்த பிரச்சினை அவ்வளவு சீக்கிரம் தீராது, so உடனே உன் ஆபீஸ்ல பெங்களூரு transfer  கேட்டு வாங்கிக்கொண்டு போகமுடியுமா  என்று கேட்கவே, உமேஷும் அதன் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டான். இருவருக்கும் கொஞ்சம் பாரம் குறைந்தமாதிரி இருந்தது. உமேஷ் கொஞ்சம் வருத்தத்துடன் , "சார், உங்களை பார்க்க முடியாதே சார்னு..?" கேட்கவே, ராஜு, "பெங்களூரு பக்கம் தானே, நீ எப்போவேணடுமானாலும் வரலாமே" என்று சொல்லி பிரச்சினைக்கு ஒரு temperory முற்று புள்ளி வைத்தான்.

உமேஷும் பெற்றோரிடம் ஏதோ காரணம் சொல்லி, தனக்கு பெங்களூரு transfer ஆகிவிட்டதாகவும் உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லி, ரெண்டு நாட்களில் பெங்களூரு போய்  சேர்ந்தான். இரண்டு மாதம் பறந்து போனது. ஒரு நாள் போனில் ராஜூவை கூப்பிட்டு, தனக்கு ஒரு நல்ல சீனியர் நண்பர் கிடைத்து விட்டதாகவும், அவருடன் சந்தோசமாக இருப்பதாகவும் சொல்லி நிறுத்தாமல், அவங்க ரெண்டு பேரும் gay பார்ட்னர்ஸ் ஆகி விட்டதாகவும், we  are into  relationship,  living together nu ஒரு மிகவும் serious ஆன  விஷயத்தை அலட்சியமாக சொன்னான். அதோடு நில்லாமல் ரசிகாவிடமும் ஜாடை மாடையாக இதை பற்றி சொன்னதாகவும் ஏனென்றால் அவள் வெளி நாட்டில் இருப்பதனால், இந்த மாதிரி லைப் ஸ்டைல் ஏற்று கொள்வாள்  என்றும் சொன்னான். இவன் என்ன இப்பிடி விதியாசமான பாஸ்ட் ட்ராக்கில் போகிறானே என்று  ராஜு ஆச்சரியத்தில் மூழ்கினான். இதெல்லாம் நடக்கிற விஷயமா என்று ராஜு தனக்குள் கேட்டு கொண்டிருந்தான். இது வெளி நாட்டு கலாச்சாரம் ஆச்சே, எப்பிடி நமக்கு ஒத்து வரும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. இந்தியாவில் இந்த மாதிரி நிறைய GAYS இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக ஒரே வயது குரூப் நண்பர்களுடன்தான்  relationship  வைத்துக்கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறான் . ராஜுவிற்கு, உமேஷின் இந்த வாழ்க்கை முறையை அவனுடைய parents எப்பிடி ஏற்று கொள்வார்கள் என்றெல்லாம் யோசித்தான். இவர்களின் வாழ்க்கையை எப்பிடி அமைய போகுதுனு ரொம்ப கவலை  பட்டான் . ஏனென்றால் ராஜுவின் மனதிற்கு உமேஷ் எடுத்த முடிவு சரி என பட்டது. அவரவர் வாழ்க்கையை வேறு யாரும் முடிவு செய்ய கூடாதுயென நினைத்தான். இதில் பெற்றோரின் intervention கண்டிப்பாக இருக்க கூடாது என்பது ராஜுவின் உறுதியான எண்ணம். அவர்களுக்கு புரிய வைக்க  வேண்டியது மிகவும் அவசியம். இந்த சிக்கலான மற்றும் சென்சிடிவ் மேட்டர். பெற்றோர்கள் யதார்த்தமாகவும், பிள்ளைகளின் நன்மைக்காகவும் புரிந்து கொண்டு சப்போர்ட் செய்ய வேண்டும். பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மாதிரி அணுகுமுறைகள் இல்லாததால் நிறைய பேர்கள் வாழ்கை ரொம்பவும் பாழானது . இட் ஐஸ் நாட் தட் easily said அண்ட் done. இந்த முடிவில்  எல்லோருடைய வாழ்கை முறையும் அதை சுற்றி உள்ள பிரச்சினைகளும் அடங்கும். இதை எல்லாவற்றையும் விட, ஒருவரின் மன  நிம்மதியும் வாழ்க்கையின அர்த்தமும் அடங்கி உள்ளது. இப்பிடி இருக்கையில், மீண்டும் உமேஷிடம் இருந்த்து ஒரு திரில்லர் படத்தில் வருவது  போல போன் வந்தது. நாளை நைட் தன் அக்கா ரசிகா சென்னை வருவதாகவும், அவளை வரவேற்க்க  தானும் சென்னை வருவதாகவும் சொன்னான்.  உமேஷ் சென்னை வர இன்னொரு முக்கிய காரணம் ரசிகா மூலம் தன் கல்யாண பிரச்சினைக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் குஷியாக இருந்தான். "ஆஹா, ரொம்ப சந்தோசம் வா, உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றான் ராஜு.

மறுநாள் உமேஷ் நேராக ஏர்போர்ட்க்கே வந்துவிட்டான். அங்கே தான் அவனுடைய பெற்றோர்களையும் மீட் பண்ணும் படி ஆகிற்று. flight குறித்த நேரத்திற்கு வரவே உமேஷ் தன் அன்பு அக்காவை சந்திக்க ரொம்பவும் ஆவலாக  இருந்தான். ரசிகாவும் ரொம்பவும் தாமதம் இல்லாமல் trolly தள்ளி கொண்டுவரவே வேகமாக சென்று அக்காவை வரவேற்க சென்றான். வழக்கமாக அன்பு தம்பியை கண்டவுடன் அணைக்கும் அக்கா, இந்த தடவை ஹாய் மட்டுமே சொல்லி பெற்றோரின் பக்கம் நகர்ந்தாள் / உமேஷுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஓகே, மரியாதைக்காக அப்பா அம்மாவை முதலில் பார்க்கவேண்டும் என்ற ஆவலாக கூட இருக்கலாம்னு நினைத்து அக்கா பின்னாடி ஓடி போனான் . அக்கா அவனை  பார்த்து "டாக்ஸி , புக் பண்ணி  கொண்டு வரையா" என்று சொல்ல, உமேஷும் உடனே விரைந்தான் டாக்ஸி கவுண்டர் நோக்கி. ஒரு 10 நிமிடம் ஆகும் டாக்ஸி கிடைக்க என்று கவுண்ட்டரில்  சொல்லவே, சரி, அக்காவிடம் டாக்ஸி வரும் வரை பேசலாம் என்று அவர்களை நோக்கி வரும் நேரத்தில், உமேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அசம்பாவித நிகழ்ச்சி நடந்தது. உமேஷின் அப்பா அவன்  கிட்ட வேகமாக வந்து, மிகவும் கோபமாக கண் இமைக்கும் நேரத்தில் உமேஷின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, ஆவேசத்துடன், "இனி என் முகத்தில விழிக்காதே, உன்னை பெற்றதுக்கு எங்களுக்கு இதுவும் வேணும் ,, இன்னமும் வேணும், நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு நினைக்கவே இல்ல  " என்று கன்னா  பின்னாவென்று ஏச ஆரம்பித்தார்." நீ எங்களுடன் வர வேண்டாம், இப்பிடியே போய்  விடு" என்று சொன்னார். உமேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவமானத்தால் ரொம்ப கூனி குறுகி போனான். அவன் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரசிகாவும் ஒன்றும் பேசவில்லை மாறாக அவளும் கோவமாக இருந்தாள். இதெல்லாம் ஏர்போர்ட்டில் டாக்ஸி வரும் நேரத்திற்குள் நடந்தன. உமேஷுக்கு உடனே புரிந்தது அப்பாவின் இந்த கோவத்திற்கு யார் காரணம் என்று. அக்காவின் வில்லி  குணம் தான் என புரிந்து கொண்டான். யாரு தனக்கு உறு துணையாக இருப்பாங்க என்று நினைத்தானோ, அவளே அவன் நெஞ்சில் வேலை பாய்ச்சினாள். நம்பிக்கை துரோகம் !!. பாவம், உமேஷ் மனது ஒடிந்து, அழுகையை அடக்கி கொண்டு வீட்டில் போய் விவரமாக பேசிக்கொள்ளலாம் என்று பேசாமலே அவர்களுடன் சென்றான்.

வீட்டில் luggage கொண்டு வைத்தவுடன், அவன் அப்பா மீண்டும் ஆவேசமாக, " நீ ஏன் பிள்ளை இல்லை, உனக்கு தலை மூழ்கியாச்சு, நீ எனக்கு கொள்ளி போடக்கூடாது, உன் ரூமை காலி பண்ணிக்கொண்டு போ" என்று சொல்லவே, உமேஷுக்கு இதற்கு மேல் அங்கு  இருக்க கொஞ்சம் கூட பிடிக்காமல் கண்கள் கலக்கத்துடன், தன் bag மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். உடனே உமேஷ் அருகில்  உள்ள bar கு சென்று சினிமா ஹீரோக்கள் மாதிரி குடிக்க ஆரம்பித்தான். அங்கிருந்து, ராஜூ விற்கு போன் பண்ணி உடனே வரும்படி அழைத்தான். ராஜுவும், ஆஹா பையன் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து விட்டான்,   அவன் பெற்றோர்களை  கன்வின்ஸ் பண்ணிட்டான்  போலன்னு ஆவலுடன் barக்கு விரைந்தான். அங்கு உமேஷை கண்டதும் தூக்கி வாரி போட்டது. எல்லா விஷயமும் ஒரு மாதிரி யூகிக்க முடிந்தது. சரி, மேட்டர் failure ஆகிட்டுது என புரிந்தது. உமேஷ் ராஜுவிடம் நடந்தவைகளை ஒன்று விடாமல் அழுது கொண்டே சொல்லி தீர்த்தான். ராஜூ வின் மனம் ரொம்பவும் கஷ்ட பட்டது. ஐயோ, பாவம்  உமேஷ், மிகவும் நொந்து போயிருந்தான். ராஜு அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டி, குடிப்பதை நிறுத்தி, முதலில் ஊருக்கு போகுமாறு வலியுறுத்தினான். "காலம் தான் பதில் சொல்லணும். உடம்பை பார்த்து கொள்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இது நடந்து ஒரு 3 மாதம் இருக்கும். ராஜுவின் போன் அலறியது. உமேஷ் தான் வேறு யாராக இருக்க முடியும் இந்த அர்த்த ராத்திரி வேளையில். என்ன சமாச்சாரம் என்று கேட்பதற்கு முன்னதாகவே, உமேஷ் முந்திக்கொண்டான்.
"சார், நாளைக்கு நான் Amesterdam போகிறேன், எல்லாம் லாஸ்ட் மினிட் decision " என்றான். ராஜுவும், " சந்தோஷமாக போய்ட்டு வா. நல்லா  வேலை எல்லாம் கற்றுக்கொள்" என்றான். அதற்கு , அவன், "சார், நீங்க வேற,  என்  பார்ட்னர்க்கு அமெஸ்டெர்டாம்க்கு போன இடத்தில, அசிஸிடெண்ட் ஆகிடுத்து, அதுக்கு ஹெல்ப்புக்கு போறேன், அவருதான் எல்லா செலவும் ஏத்துக்கிறாரு" ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டான். ராஜு வாய் அடைத்து போனான்." நிஜமாவா சொல்றே?, அவரு எப்பிடி உனக்காக...? இவ்வளவு ...? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே, அதே சமயத்தில ரொம்ப பெருமையாகவும் இருக்கு, உங்க relationship நினைத்தால் "ன்னு சொன்னான். அதான் சார், gay  relationship னு ஒரு புது மீனிங் கொடுத்தான். ராஜு, "anyways , டேக் கேர் of yourself அண்ட் your partner , குட் luck , enjoy யுவர் stay "யென்று wish  பண்ணி, தூக்கம் இல்லாமல் ஆச்சர்யத்தில் புரண்டான்.

உமேஷ்  அடிக்கடி  அமெஸ்டெர்டாம் இல் நடந்த சுவையான அனுபவங்களையும், அங்கு எவ்வளவு பிரீ யாக மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்த வேலை மற்றும் லைப் ஸ்டைல் எல்லாம் ஒரு தடங்கலும் இல்லாமல் இருக்கிறதாக வாட்சப்பில் சொன்னான். அவனுக்கு அந்த ஊரு ரொம்ப பிடித்துப்போயிற்று. நாளை இந்தியா வருவதாக கூறினான். பாருங்கள் அவன் வந்து இறங்கிய நாள், இந்தியா வரலாற்றில்  மிகவும் முக்கியமான தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில்  தீர்மானம் ஆகியது. அமாம் !!.., உமேஷ் போன்ற பல கோடி gay சார்பினர்களுக்காகவே தீர்மானிக்க பட்டது.   Articlle 377, gay relationship  அங்கீகரிக்கப்பட்ட செய்தி வெளியாகியது. இந்த சந்தோஷமான செய்தியை  ஏர்போர்ட்டிலேயே உமேஷ்  கேள்விப்பட்டான். உமேஷுக்கு தலை கால் புரியவில்லை. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த ராஜூவை மனதார அணைத்து கொண்டான். ராஜுவும் அவனை வாழ்த்தினான். இனி உமேஷ்  ஒரு குற்றவாளி இல்லை. கால போக்கில் அவன் பெற்றோர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினான். ராஜுவும் அதை ஆமோதித்தான். உமேஷுடன் வந்த அவனுடைய பார்ட்னரை ராஜுவிற்கு அறிமுகம் செய்துவைத்து பின் அவரை அணைத்தபடியே இருவரும் கையை  கோர்த்து கொண்டு  தைரியமாக அவர்கள் வீட்டுக்கு இனிய முகத்துடன் ஏர்போர்ட் விட்டு வெளியேறினார்கள்.

ராஜுவின் மனம் நடந்தவற்றை அசை போட்டது. ஒரு சினிமா போல இருந்தது.  ஆனால் நடந்ததும் நடப்பதும் உண்மை. இது காலத்தின் கோலம். உமேஷ் மாதிரி கோடி கோடியான மக்கள் இந்த பிரச்சினைலருந்து விடு பட முடியாமல்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்கள் தேர்ந்து எடுத்த வாழ்கை இல்லை. பிறப்பின் அடையாளம்.
தனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியாமலும், வெளியே சொல்ல முடியாமலும், உள்ளுக்குள் வேதனை பட்டு, மனம் நொந்து வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.  கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு பார்த்தால் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும். இவர்களை வேறுபடுத்த  தேவை இல்ல. சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பெற்றோர்கள் அன்பும் ஆதரவு மற்றும் புரிதலும் தேவை. பல புகழ் வாய்ந்தவர்கள் gay என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

இது ராஜுவின் சொந்த அபிப்பிராயம்.

                                              - எண்ணம், எழுத்து :- ரவி சங்கர்
*********************************************************************************




















L A N A K A J U M P (Continued)

L A N A K A     J U M P (Continued)

ராஜு தன்னுடைய  ஸ்ரீலங்கா ட்ரிப்  ரொம்பவும் ஜாலியாகவும் அலுப்பு தட்டாமலும் இருக்கவேண்டி  எல்லா எற்பாடுகளையும் ரொம்பவும் அக்கறையோடு செய்திருந்தான். எதுவும் மறக்காம இருக்கவும், கடைசி நிமிஷ சொதப்பல்கள் எதுவும் இருக்க கூடாது  என்பதற்காக ஒரு பாயிண்ட் கூட விடாம  எவ்வளவு அற்ப விஷயமானாலும் சரி எல்லாவற்றையும் தன் பாக்கெட் டைரியில் குறிச்சி வெச்சிருந்தான். அன்றைக்கு வீட்ல சமையல் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டான். அதான் ஏகப்பட்ட food டெலிவரி app  இருக்கே.  ராஜு wife அவங்களுக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம் கச்சிதமா எடுத்து பேக் பண்ணி வச்சிக்கிட்டாங்க. ராஜுவும் கடைசியா ஒரு 15 தடையாவது repack பண்ணி அவன் மனைவியை விட கொஞ்சம் பெரிய பேக்கிங்ல முடித்தான். ஒரு நாளைக்கு ரெண்டு டிரஸ் வீதம் ஒரு பத்து டிரஸ் எடுத்தது வைத்திருந்தான். ஏன்னா, விதம் விதமா போட்டோஸ் எடுக்கணுமாம். ராஜுவின் மனைவி  tour ப்ரோக்ராம் கைல வச்சிக்கிட்டு ஏங்க  இவ்வளவு தூக்கிட்டு வரீங்க , நீங்க இந்த tour ப்ரோக்ராம்  எவ்வளவு clear ah  போட்டுருக்காங்க. அது பிரகாரம் நம்மளுக்கு மொத்தமே 6 டிரஸ் தான் மாக்ஸிமம் தேவை, அப்பிடின்னு சொல்லவே  ராஜு  அரை மனசோடு மீண்டும் 16 தடவையாக ரீபாக்  பண்ண வேண்டியதாயிற்று. ராஜு  shoulder bag பல பாகெட்ஸ் கொண்டது. எப்போவோ துபாய்ல வாங்கியது. அதில எல்லா papers , டாக்குமெண்ட்ஸ், பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் மொபைல், ear பிளக் தவிர தனக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம், ஒவொரு பாக்கெட்டிலேயும் மறக்காமல் வைத்து கொண்டான்.
"என்னங்க ..டாக்ஸி சொல்லிட்டீங்களா"ன்னு கேட்கவே, ராஜு டாக்ஸி அட்வான்ஸ் புக் பண்ணினான். tour மேனேஜர் சொன்ன மாதிரியே போன் பண்ணி ஏர்போர்ட்ல எங்க மீட் பண்ணணும்ன்னு விவரமா சொன்னாரு.
ராஜுவிற்கு சூப்பரா வெளிநாடு போற குஷி கிளம்பியது. டாக்ஸி சொன்ன நேரத்துக்கு வந்தது. ராஜு மொபைல்ல   டிராபிக் எங்கேய எல்லாம் இருக்குனு வந்தது. ஏர்போர்ட் சைடுல ரொம்ப டிராபிக் இருக்குனு அனௌன்ஸ்மென்ட் வரவே ராஜு  டாக்ஸி டிரைவர் கிட்ட , சார் நீங்க வேற வழியா போங்கன்னு சொல்ல , அதுக்கு அவரு "அதெல்லாம் ஒண்ணும்  இல்ல சார், இப்போ நா அங்கிருந்துதான் வரேன் சார் சவாரி விட்டுட்டு" அப்பிடின்னான். டாக்ஸி airport  நோக்கி சென்றது. இரவு மணி 11.30 இருக்கும். ஏர்போர்ட் நெருங்க நெருங்க செம்ம டிராபிக். இன்ச் இன்ச் தா வண்டிகள் நகர்ந்தது. பொதுவா ராஜு வீட்லேருந்து ஏர்போர்டைர்போர்ட்க்கு போவதற்கு அதிக பட்சம் 45 நிமிஷம்தான்  ஆகும். இன்னிக்குனு பார்த்து 1.30 ஆகியும் வண்டி இன்னும் ஏர்போர்ட் கண்ணிலேயே காணல. ராஜு டாக்ஸி டிரைவரிடம் , "நான் தான் அப்போவே சொன்னேனே, இந்த ரூட் வேண்டாம்னு, இப்போ பாருங்க எவ்வளவு ட்ராபிக்  இந்த ராத்திரில .." அப்பிடின்னு புலம்ப  ஆரம்பித்தான் மெள்ள. அதற்கு  டிரைவர் சார், நீங்க ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதிங்க சார் னு சொல்லி, கண் இமைக்கும் நேரத்தில, டாக்ஸியை சும்மா சடார்னு லேபிட் சைடில் திருப்பி போக ஆரம்பித்தான். இந்த பக்கம்  போனா  ஈஸி  சார், டிராபிக் இருக்காதுன்னு சொல்லிக்கொண்டே இருக்கிற சந்து போந்து எல்லாம்வற்றிலும் வண்டியை திருப்பி, "பல்லாவரம் by நைட்" பூரா காண்பித்தான். ஒரு மாதிரி டாக்ஸி ஏர்போர்ட் பக்கம் மெயின் ரோடுக்கு  வந்தது. ராஜூக்கு பெரு மூச்சு அப்போ தான்  வந்தது. மீண்டும்  ராஜு முகத்தில் குஷி. டாக்ஸி விமான புறப்பாடு கேட் கிட்ட நின்றது. ராஜு luggage  எல்லாம் ஒழுங்கா இறக்கி டாக்ஸி டிரைவர்யை அனுப்புவிட்டு, மனைவி கிட்ட baggage பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு, தான் ட்ராலி எடுக்க சென்றான். நல்ல வேளையாக ஒரு ட்ராலி பக்கத்திலேயே இருக்க அதில் luggageயை தூக்கி வைத்தான். ட்ராலி தள்ளலாம்னு ட்ரை பண்ணும் பொது, ட்ராலி நாலா பக்கமும் சென்றது ..இது என்னடா கஷ்ட காலம் னு பார்த்தால் , ட்ராலியில் வீல் நான்கும் ஒவொரு பக்கமும் சென்றது..இதெல்லாம் வேலைக்கு  ஆகாதுன்னு சொல்லி அவர்களுடைய ட்ராலிbag யை அவர்களே இழுத்து கொண்டு சென்று நுழை வாயில் செக்யூரிட்டி கிட்ட வந்தார்கள். அவனிடம் பாஸ்போர்ட், டிக்கெட் காண்பித்தால்தான் உள்ளே போக முடியும். ராஜு உடனே முன் ஜாக்கிரதையாக தன்னுடைய பல பாக்கெட்டுகள் கொண்ட ஜிப் பைக்கில் கை விட்டு வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எடுக்கலாம்னு ஒவொரு ஜிப்பாக திறந்து  பார்க்கும் நேரத்திற்குள் செக்யூரிட்டி கிட்ட ராஜு வந்தான்.  அவன் ஹிந்தியில் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்க, ராஜு தனக்கு தெரிந்த 'ஏக் gau மெய்ன் ஏக் கிஸ்ஸான்  ரகு தாத்தா" ஹிந்தில ஏதோ சொல்ல போக அந்த செக்யூரிட்டி கடுப்பாகி ராஜூவை ஓரம் கட்டினான். ராஜு கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டான். இப்போது HOD  தலையிட வேண்டிய கட்டம். உடனே ராஜு, "நான் தான் வச்சிருக்கேன், எனக்கு தெரியும் எந்த பொக்கெட்"ன்னு சொல்லி மீண்டும் ஒவொரு ஜிப்பும் ஓப்பன் ஆகியது.  அவன் படுகிற அவஸ்த்தையை பார்த்த  மனைவி  சும்மா அனாவசியமா அந்த baga  பிடுங்கி  முதல் பாக்கெட் ஓபன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் கைல எடுத்து ராஜூவை ஒரு கடுப்பு பார்வை பார்த்து, செக்யூரிட்டியிடம்  , பாமா விஜயம் சௌகார் ஜானகி விஷாரத் ஹிந்தி பேசுற  மாதிரி அலட்சியமாக  ஹிந்தில ஏதோ பேசபோக  உடனே அந்த, செக்யூரிட்டி ராஜூவை பார்த்து கேவலமா சிரித்துக்கொண்டே ஒரு salute அடித்து அவர்களை உள்ளே விட்டான். ராஜுவுக்கு தெரியும் தன் ஹிந்தி  திருத்தணி தாண்டாதுன்னு ஆனாக்க இப்போ தான் புரிஞ்சிது சென்னை ஏர்போர்ட் கூட தாண்டதுன்னு ...!! ஏனென்றால் ராஜு இந்தி prathmik எக்ஸாம்ல  fail .!!எப்பிடியோ உள்ளே வந்தாச்சு, வண்ண ஒளி மயம். ராஜு அந்த tour மேனேஜர் சொன்ன கேட் 3 கிட்டவந்து ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணும்போது ராஜுவின் மொபைல் அலறியது.  "சார், எங்கே இருக்கீங்க, நாங்க எல்லாம் கேட் 3 கிட்ட உங்களுக்காக வெயிட் பண்றோம்னு"  சொல்ல , ராஜு தானும் கேட் 3 கிட்ட தான் இருப்பதாகவும், மேனேஜர்கிட்ட, "நீங்க   எங்கே இருக்கீங்க"ன்னு கேட்டான். "கேட் 3 பக்கத்தில ஒரு காபி ஷாப் இருக்கு பாருங்க, அங்க தான் நிக்கிறோம்"னு சொல்லவே ராஜு கேட் 3 பக்கம் நோட்டம் விட, ஒரு காபி ஷாப்பையும் காணவில்லை. ராஜு மீண்டும் மேனேஜரை போனில், " சார், எங்கே இருக்கீங்க,? இங்க ஒரு காபி ஷாப் கூட இல்லையே" ன்னு கேட்க அவரு அதே பதிலா சொல்ல ராஜுக்கு கொஞ்சம் confuse ஆகியது. இந்த போன் சமாச்சாரத்தை கேட்ட மனைவி, நீங்க உள்ளே கேட் 3 கிட்ட இருக்கேனு சொல்லுங்க அப்படினு சொல்ல ராஜுவிற்கு, ஆமா இல்ல ,,மறுபடியும் மனஜேர்க்கு, " சார்,, நாங்க கேட் 3 உள்ள இருக்கோம்"னு சொல்ல மேனேஜர்  கொஞ்சம் சூடாக, "உங்கள வெளி பக்கம் கேட் 3 பக்கத்தில இருக்கிற  காபி ஷாப் கிட்ட நிக்கணும்னு  சொன்னேனே சார்,,பரவ இல்ல நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு departure கேட் கிட்ட இருங்க"னு சொல்லி " ஓகே சார், சி யூ தேர்" ன்னுசொல்லி போன் அடங்கியது. அடுத்த கட்டம், செக் இன் பண்ணனும். அங்கேயும் கொஞ்சம் சிக்கல் . வேற ஒண் ணும்  இல்ல. சீட் நம்பர் அடுத்து அடுத்து  கிடைக்கல. ஏன்னா குரூப் டிக்கெட்டாம், நீங்களே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க கவுண்டர் ல இருக்கிற ஸ்ரீலங்கன் கண்மணிகள். ராஜுவும்,  "ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நம்ப ஆளுங்க தான் ..மாத்தி உக்காந்துக்கலாம்"ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு.  இரவு  மணி 2.30, ராஜுவிற்கு பசி அடிவயத்தை கிள்ளியது. சரி, ஏதாவது சாப்பிடலாம்னா, இந்த சமயத்தில ஏதாவது தின்னு வயறு அப்புறம் கட முட ஆச்சுன்னா ..ஐயோ சாமி வேண்டப்பா அப்பிடின்னு சமாதான படுத்திக்கொண்டான். 
ராஜு நிறைய வெளிநாடு பயணம் சென்றிருந்ததால் ஒண்ணும் டென்ஷன் இல்லாம  இருந்தான். விடிகாலை 3.35கு flight ஆனதால் தூக்கம் கெட்டது . மேனேஜர்  குரூப்புடன் வரும் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். சிறுவர் முதல் ராஜூவை விட சீனியர் வரை பல தரப்பட்ட நண்பர்கள் ஆனார்கள். flight போர்டிங் அனௌன்ஸ்மென்ட் வரவே, எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு வரிசையில் முன்னேறினார்கள். விமானம் உள்ளே கையை கூப்பியபடியே, Ayobhavan என சொல்லி விமான பணிப்பெண்கள் அவர்கள் ஸ்ரீலங்கன் நாட்டு தேசிய உடையுடன் வரவேற்றனர். ராஜுவிற்கு முன்னாடி போய்க்கொண்டிருந்த ஒரு சக குரூப் ஆளு, என்ன இவங்க நாம கட்டுற கண்டாங்கி சேலை மாதிரி இருக்குதுனு மெல்ல முணு முணுத்தாங்க. குரூப் மெம்பெர்ஸ் எல்லோருக்கும் சீட் நம்பர்ஸ் தாறு மாறாக வரவே, விமானத்துக்குள் ஒரே அமளி தான். பணி பெண்கள் பார்த்தாங்க. இவங்க சண்டை ஓயாது போல. விமானம் புறப்பட போவுது , கொஞ்ச நேரம் பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லி எல்லோரையும் அமைதி படுத்தினாங்க. அதிர்ஷ்டவசமாக ராஜு ஒரு சக பாசெஞ்சுருடன் லாவகமாக பேசி தனக்கும் மனைவிக்கும் பக்கத்து சீட் கிடைக்க சந்தோசமாக உட்கார்ந்து கொண்டான். ராஜுவிற்கு தூக்கம் ஒரு பக்கம், பசி ஒரு பக்கம். விமானம் வானத்தில் மேலே பறந்தது. மீண்டும் ஒரே அமளி. சீட் மாற்றி உட்கார தான். இப்பொழுது  பணி பெண்கள், breakfast கொடுக்கப்போகிறோம் சற்று சீட்டில் அமைதியாக உட்காரவும் சொல்லவே மீண்டும் silent  ஆனார்கள். இந்த சிற்றுண்டி சமாச்சாரம் கொஞ்சமும் எதிர்பார்க்காதது என்றால் நெடுந்தூரம் போகும் பயணம் இல்லவே. ராஜுக்கு கொஞ்சம் உயிர் வந்தது. ஜில்லுன்னு ஒரு காற்று மாதிரி, சில்லுன்னு  ஒரு ஸாண்டவிச் வந்தது. எல்லோருக்கும் பசி. ஒரு பத்து நிமிஷம் பேச்சு மூச்சே இல்ல. எல்லார் கவனமும் ஸாண்டவிச் தின்பதிலேயே தான். ஒரு மாதிரி அந்த கடன் முடிந்தவுடன், மீண்டும் இடத்திற்கு போட்டி ஆரம்பித்தார்கள். ஒரு 5 நிமிஷம் இருக்கும். மீண்டும் அறிவிப்பு. விமானம் லாண்டிங் ஆக  போகுது, தங்கள் இருக்கையில் அமருமாறு..!! மொத்த பயண நேரமே 55 நிமிஷம் தான். அதுக்கு தான் இவ்வளவு அமர்க்களம். எல்லோர் கண்ணும் ரத்த சிவப்பாக இருந்தது சரியாய் தூக்கம் இல்லாமல். விமானம் ஸ்ரீலங்கா பண்டாரநாயகா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இறங்கி  நின்றது. மறுபடியும் இறங்க வேண்டிய அமளி . கடைசிவரை யாரும் அவங்க சீட்ல உட்காரலை.

ஹையா!! , ராஜிவிற்கு ஒரே குஷி..மனைவி கையை அன்புடன் பிடித்துக்கொண்டு இமிகிரேஷன் கவுண்டர்க்கு சென்றான். மேனேஜர் எல்லோருக்கும் அன்புடன் instructions கொடுத்துக்கொண்டே வந்தார். என்ன ஆச்சர்யம். இந்த இமிகிரேஷன் ஒரு தொல்லையும் இல்லாமல் 10 நிமிடங்களில் முடிந்து baggae எடுக்க முனைந்தான். அந்த ஹாலில் நெறய டூட்டி பிரீ கடைகள் ஆசை காட்டின . அங்கேயம் டூட்டி பிரீ டாஸ்மாக் கடைக்கு மாத்திரம் செம்ம கும்பல். ஒன்று வாங்கினால் இனொன்று free  என்று போட்டிருந்தது. அதான்  ஒரே மக்கள் கூட்டம் ஈ மாதிரி. மற்ற கடைகள் எல்லாம் தூங்கி வழிந்தது.மேனேஜர் நம்ம ஆளுங்கள பார்த்து சிரித்துக்கொண்டே , "இப்போ எதையும் வாங்காதீங்க , திரும்பி return  ஆகும் போது நிதானமா வாங்கிக்கலாம்"னு சொல்லவே, சில மக்கள் அறுந்த முகத்துடன் வெளியேறினார்கள். 
இளம் காலை . சில்லென்ற மிதமான ஸ்ரீலங்கா காற்று. எங்களை வரவேற்க, ராஜ பக்க்ஷே வருவாரோன்னு எல்லோரும் தமாஷாக பேசிக்கொண்டிருக்கும் போது , சிரித்த முகத்துடன், முத்தையா முரளிதரன் ஜாடையில் இனிய முகத்துடன், "வணக்கம்...ஆயோபாவன்" ன்னு எங்களுடன்  ஸ்ரீலங்காவை சுற்றி காண்பிக்க வேண்டி வந்தவர் , பெயர் நளின் குணசேகரா .அழகான ஸ்ரீலங்கா பெயர். கொச்சை தமிழும் மிச்சம் ஆங்கிலமும் பேச முயற்சித்தார். எல்லோரையும் சொகுசு பஸ்சில் உட்கார வைக்க வண்டி புறப்பட்டது. ஒரு 5 நிமிஷம் இருக்கும், பஸ் மெயின் ரோடு கூட வந்து இருக்காது. நளின் கையில் மைக் வைத்துக்கொண்டு வெல்கம் டு ஸ்ரீலங்கா என்று சொல்ல திரும்பினார் . பஸ்சில் பேச்சு மூச்சே இல்ல. எல்லோரும், ஒருவர் மேல சாய்ந்துகொண்டும், பின்னாடி சாய்ந்துகொண்டும் ஒரே " கொர் ..கொர் ..." தூங்கி விட்டார்கள். ராஜு வும் அப்படியே மனைவியின் மீது சயனிச்சான். 

ஸ்ரீலங்கா ஒரு ரம்மியமான  கேரளா.  வளைந்து வளைந்து சென்றது அகலமில்லாத ரோடு . முதல் ஹால்ட் breakfast. ஒரு இந்தியன் ஹோடேலின்முன் பஸ் நின்றது. பஸ்ஸில் வந்த பாதி பேர் அவசரம் அவசரமாக வாஷ் ரூம்மை நோக்கி ஓடினார்கள். மற்றவர்கள் பார்க்க அருமையாக இருந்த கல் இட்லி,  தடியான தோசை மற்றும் சின்ன பாறாங்கல் போல் தோற்றமளித்த வடை போன்ற ஒரு வஸ்து, சாம்பார் மாதிரி ஒரு சைடு டிஷ், சிலோன் பரோட்டா  வைத்திருந்தாலும், மக்கள் பசியினால் ஒரு கமெண்டும் அடிக்காமல் வயிறார சாப்பிட்டார்கள். நளின் எல்லோரிடமும் அன்றைய புரோக்ராம் சொல்லிக்கொண்டே போனாரு. 
 
அன்றைய ப்ரோக்ராம் முடிந்த பிறகுதான் ஹோட்டல் செக் இன் என்று tour மேனேஜர் கூறவே, எல்லோரும் ரொம்பவும் களைத்து போயிவிட்டார்கள். மேனேஜர், இன்றைக்கு மாத்திரம் தான் இந்த மாதிரி, மற்ற நாட்களில் இந்த மாதிரி இருக்காது, ஏனென்றால், நம்முடைய ஹோட்டல்  கடைசியில் இருப்பதாலும், நம்ம பார்க்க வேண்டிய இடங்கள் முன்னாடி இருப்பதாலும் இந்த ஏற்பாடு  என்று சமாதானம் 
சொன்னாரு. ஸ்ரீலங்காவில் நாம் பார்க்கவேண்டிய ஒவொரு இடமும் வெகு தூரத்தில் இருப்பதால் பிரயாண டைம் கொஞ்சம் ஜாஸ்தி எடுக்கும். போகும் வழியில், எழில் கொஞ்சும் மலை பிரதேசம். அங்கு உள்ள டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி பார்த்துவிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு பஸ்  ஒரு ஹோட்டல் முன் நின்றது. வெகு விமரிசையான மதிய உணவு. சூப்பர் ஸெல்ப் சர்விங் மெனு . கூட  வந்த ஒரு தம்பதியினர்தான் கொண்டுவந்திருந்த கை பையில் யாருக்கும் தெரியாமல்  பிரட், ஜாம், bun , பழங்கள் போன்றவற்றை அமுக்கி வைத்துக்கொண்டார்கள். இதை ராஜு கவனிக்கவே, ரொம்பவும் சாமர்த்தியமாக நீங்க கூட எடுத்துக்கோங்க சார், வழியில் சாப்பிடலாம்னு தன் அல்ப்ப தனத்தை வெளிப்படுத்தினாங்க. 
அவங்களை பார்த்த வேறு பேமிலி, தாங்களும் எடுத்து வைத்து கொண்டார்கள் பகிரங்கமாக. ஹோட்டல் ஆட்கள் அவங்களை கண்டும் கண்டுக்காம இருந்தார்கள். 
மற்ற நன்கு நாட்களில் ரம்போட நீர் விழுச்சி, யானைகள் சரணாலயம்  , ஆமைகள் வளர்ப்பு, புத்தர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில், ஆஞ்சநேயர் கோவில்,  ஹெர்பல் கார்டன், சீதா அசோகா வன வாசம் ,கொழும்பு ஷாப்பிங் இப்பிடி பல முக்கியமான இடங்களை மிகவும் சிரத்தையுடன் ஸ்ரீலங்கா நண்பர் பொறுமையாக காண்பித்து அந்தந்த இடங்களின் பெருமைகளை பற்றியும் விலா  வாரியாக விளக்கினார். இதுல கதிர்காமம் முருகன் கோவிலை பற்றி இங்கே சுவாரசியமான தகவல் சொல்லியே ஆகணும். அந்த கோவிலுக்கு சென்றிந்தபோது, ஸ்வாமியின் சன்னதிக்கு திரை போட்டிருந்தது. அர்ச்சனை செய்யும்  குருக்கள் உற்சவ மூர்த்தியை விட சிறிய சைஸில் இருந்தார்!! அவர் கூறிய வரலாறு என்னவென்றால், இந்த முருகன் சந்நிதி விசாக மாதம்  செவ்வாய் கிழமை மட்டும்  தான் திரை விலக்கி தீபாராதனை நடைபெறும் என்று  சொன்னார்.  அதேமாதிரி புத்தர் கோவிலில் இருக்கும்  மகா புத்தரின் பல் பக்தர்களின் பார்வைக்கு மாதம் ஒரு முறை தான் தெரியும் என சொன்னார்கள்.
இப்பிடியாக, மேலும் பல சுவாரசியமான விஷயங்களை ராஜு அண்ட் கம்பெனி  பார்த்து ரசித்தார்கள். . கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடு  என ஸ்ரீலங்காவை  எல்லோரும் ஒரு மனதாக  புகழ்ந்தார்கள். சும்மா சொல்ல  கூடாது. ஸ்ரீலங்கா மிகவும் சுத்தமாகவும் , சுகாதாரமானதாவும், toursit friendly யாகவும் இருக்கிறது. வாகனங்கள் காதை பிளக்கும் அளவுக்கு ஒலி எழுப்பவில்லை. ராஜுவிற்கும் அவன் மனைவிக்கும் இவ்வளவு சின்ன நாடு, எப்பிடி வைத்திருக்காங்க ...ஹும் ...நம்ம சென்னையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பிடின்னு மனசு வேதனை பட்டாங்க . விமானம் சிங்கார சென்னை வந்து அடைந்த பொழுது முதல் பிரச்சினை lauggage சமயத்திற்கு வராது, இமிகிரேஷன்ல ஒரேடியா வரிசை, டாக்ஸி பிடிக்கும் படலம் , அப்புறம் டிராபிக் ஜாம் , noise  pollution  இப்பிடிபட்ட பிரச்சினைகள்  ராஜுவின் இனிமையான ஸ்ரீலங்கா பயண அனுபவங்களில் அடிபட்டு போனது. !!!.
                                                     *********************
                                               - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்   


















******************************************************************************




Saturday, September 22, 2018

LANKA JUMP

L A N K A    J U M P

ராஜுவிற்கு வெளிநாட்டு பயண மோகம் கொஞ்சம் ஓவராகவே உண்டு . எப்பிடியாவது பிளான் போட்டு வருஷத்துக்கு ஒரு தடவையாவது ஒரு சின்ன வெளிநாட்டு பயணமாவது  போட்டுடுவான். இந்த வருஷம் அதற்கு உண்டான முஸ்தீபில் இறங்க ஆரம்பித்தான். மொதல்ல எந்த இடம் போகலம்னு முடிவு பண்ண ஆரம்பித்தான், வீட்ல suggestion கேட்டா, வேற வேலை இல்ல என்பாங்க. அதனால இப்போ எதுவும் சொல்லாம, silenட்டா  homework பண்ண ஆரம்பித்தான்.
என்னோவோ தெரில ஸ்ரீலங்கா கண்டிப்பா போகவேண்டிய இடம்ன்னு ஒரு பக்க்ஷி வந்து ராஜுவுக்கு சொல்லவே, முதல் கட்டமா ஊர்ல  இருக்கிற tours அண்ட் travels கம்பெனில எல்லாம் ஆன்லைன்ல register  பண்ண ஆரம்பித்தான். கேட்கணுமா, ஊர்ல இருக்கிற எல்லா  மன்னார் அண்ட் கோ travel கம்பெனி  காரனுங்க சும்மா சரவெடி மாதிரி ஒரேடியா ராஜுவுக்கு  போன் மேல போன். ராஜுவுக்கு ஒரே குஷி. அட, எவ்வளவு ரெஸ்பான்ஸ். அவனவன் சார் எப்போ போறீங்க, எவ்வளவு பேரூ  , எங்கே போகணும்  சொல்லுங்க..குரூப் tour  வேணுமா? customise பண்ணனுமா அப்பிடின்னு சரமாரிய கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டானுக . ராஜு திணறி போயட்டான். அவன் இன்னும் பட்ஜெட் போடல. என்ன, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு முப்பதாயிரம் ஆகப்போகுது அப்பிடீன்னுனு மனசுல தன் பேங்க் பாலன்ஸ் எவ்வளவு இருக்குனு கணக்கு போட்டான். சரி, எப்பிடியாவது HOD மசிய வைக்கணும் அதுதான் ஒரு பெரிய டாஸ்க்.  Travel ஏஜெண்டுகிட்ட தான் என்னோவோ அமெரிக்காவோ, ஐரோப்பா tour போற மாதிரி பேச போக அவங்க , அடேடே ஒரு நல்ல பார்ட்டி சிக்கிகிச்சுடானு நினைச்சு, சார்.., நாங்க  உங்க வீட்டுக்கே வந்து tour package டிஸ்கஸ் பண்றோம், நீங்க எப்போ  பிரீனு சொல்லுங்கன்னான். HOD  permission இல்லாம எந்த குப்புசாமியும் வீட்ல காலடி எடுத்து வைக்க முடியாது. . ஒரு நல்ல நாள் நேரம் காலம் பார்த்து விஷயத்தை மெள்ள அவுத்துவிட்டான். சும்மா casualஆ  சொல்ற மாதிரி எங்கேயோ பார்த்து, கொண்டு தன்னோட friend ஒருத்தன் இப்போதான் ஸ்ரீலங்கா போட்டுவந்ததாக பீடிகை போட்டு வெத்தலயை  மெள்ள மடிக்க ஆரம்பிச்சான். "ரொம்ப சீப் ட்ரிப் தான்... பாமிலியோட போய்ட்டுவந்து pics காண்பிச்சான். சூப்பரா இருக்கு" அப்பிடின்னு சொல்லி தனக்கு வாட்ஸாப்ப்ல வந்த போட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ண  ஆரம்பித்தான். அவங்களும் அத சுவாரசியமாக பார்க்கவே ராஜுவுக்கு கொஞ்சம்  தெம்பு பிறந்தது." எல்லாம் நல்லாவே இருக்கு ஆனா எவ்வளவு ஆகுமோ, நம்மளுக்கு இப்போ போக சௌகர்யப்படுமான்னு தெரிலையே" அப்பிடின்னு அவங்க சொல்லவே  , தன்  ஆசையைபடு  குழிலே தள்ளிவிடுவாங்களோனு கொஞ்சம் பயந்தான். மீண்டும் சுதாரிச்சிக்கொண்டு  "அதெல்லாம் ஒண்ணும்  பயப்படாதே, ...நான் எல்லாம் save பண்ணிவச்சிருக்கேன், comfortableஆ போய்ட்டுவரலாம், நம்ப என்ன shoppingah பண்ணப்போறோம்" அப்பிடின்னு சொல்லி ஒரு முத்தாய்ப்பு வச்சான் for  the time being. "நாளைக்கு சண்டே, வேணும்னா அந்த tour மேனேஜர்யே வர சொல்றேன்..என்ன சொல்றேனு" அவங்க வாயிலேந்து சரி னு வார்த்தையை திணிச்சு வரவழைக்க ட்ரை பண்ணி அதில வெற்றியும் கண்டான்.
ஞாயிற்று கிழமை  வந்ததது. கரெக்டா ஈட்டிகாரன் மாதிரி சொன்ன நேரத்துக்கு ஒரு பெரிய குட் மார்னிங்கோட tour மேனேஜர் வந்தான். அவனுக்கு நல்ல experience போல. வந்த ஒடனேயே வீட்ல யாரு ரூலிங் பார்ட்டினு புரிஞ்சு போச்சு . உடனே டக்குனு ஒரு காம்ப்ளிமென்ட் HOD கைல கொடுத்து "குட் மார்னிங் , மேடம்" ன்னு பெரிய கும்பிடு போட்டான். நம்ப ராஜுவிற்கு , வேலை ஈஸியாக போகவே, ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு, தன் wifeஐ அசத்தினான். வந்த மேனேஜர், இவங்க இதுதான் முதல் தடவை வெளிநாடு போற பார்ட்டி போலன்னு நினைச்சுகிட்டு "சார்..பாஸ்போர்ட் இருக்குங்களானு" ஏடா  கூடமா ஒரு கேள்வியை கேட்டான். இது,,இதுக்கு... தான் காத்திருந்தவன் போல, ராஜு குபீர்னு களத்தில் இறங்கி, தன் வெளிநாட்டு பயண experienceஐ பத்தி ஒரு சின்ன பிரசங்கமே செய்ய வந்த மேனேஜர், "சாரி சார்..இது நாங்க ரெகுலரா செக் பண்ற routine அப்படினான்". அதோட விட்டானா ராஜு.."நாங்க வருஷா வருஷம் வெளிநாட்டுக்கு போவோம். எங்க பசங்க எல்லோரும் வெளிநாட்ல தா இருகாங்க. போன வருஷம் தான் Europe tour  போயிட் டு வந்தோம். ரொம்ப சூப்பரான  ட்ராவல்  மேனேஜர், ரொம்ப எகானாமிக்கால customise பண்ணி கொடுத்தாரு" அப்பிடின்னு கல்யாண பரிசு டணால் தங்கவேலு மாதிரி ஒரு உடான்ஸ் விட்டான் . "இந்த வருஷம் neighbouring லொகேஷன்க்கு போகலாம்னு பிளான்", அப்பிடினான். வந்த மனஜேர்க்கு கொஞ்சம் முகம் சுவாசியமா இல்ல மாதிரி தெரிஞ்சுது, வெறும் சின்ன பட்ஜெட் பார்ட்டி காசு அவ்வளவா பெயராதுன்னு  புரிஞ்சு  போச்சு அவருக்கு. இருந்தாலும்  வந்த பிசினெஸ்ஸை எப்பிடியும் விடறதா  இல்ல. அண்டை நாடுகளான  துபாய், மலேஷியா,சிங்கப்பூர், maldives பத்தி  பேச ஆரம்பித்தாரு. உடனே நம்ப  பார்ட்டி, "அந்த லொகேஷன்ஸ் எல்லாம் நெறய தடவை போயிருக்கோம்!!..., கொஞ்சம் ஸ்ரீலங்காவை பத்தி சொல்லுங்க" ன்னு ஆரம்பித்தான். "ஸ்ரீலங்கா, ரொம்ப exoitic லொகேஷன் சார், ஒரு 7days  6 nights பட்ஜெட்  இருக்கு சார், ரொம்ப  எகனாமிக்கல் பேக்கஜ் சார்"ன்னு  சொல்லவே, ராஜு எவ்வளவு ஆகும்ன்னு கேட்டான். அவருஉடனே கால்குலேட்டர் சகிதம் ஒரு 5 நிமிஷம் என்னவோ கூடி கழிச்சு 60000 ஆகும் சார் per pax  சார்னு ரொம்ப அவங்க technical பாஷைல பேசினான் . ராஜு ஒடனே, இது என்னடா பெரிய கஷ்டத்தில கொண்டுபோய் விடும் போல இருக்கே.."சார், இது ரொம்ப costlyaga  இருக்கே, என்  friend போன மாசம் போயிட் டு வந்தாரு..., ரொம்ப சீப்  காஸ்ட் சொன்னாரே..இருங்க அவரையே கேக்குறேன்னு"  போன் பேசறதுக்காக போன்னை எடுத்தான்.உடனே மேனேஜர் கொஞ்சம் டென்ஷன் ஆகி, "சார், நான் உங்களக்கு சீப் ஆக ஒர்க் அவுட் பண்ணி தரேன் சார், நீங்க ஒண்ணும் பேச வேணாம் சார்னு" காலில் விழாத குறைதான். ராஜு ரொம்ப கெத்தா HODya ரொம்ப பெருமையா பார்த்தான். உடனே அவங்க இவளவு காஸ்ட் லினா  அப்புறம் பார்த்துக்கலாம் னு முக ஜாடை சொல்லவே ராஜு எங்க பட்ஜெட் 60-65 வரைதான் for  டூ pax  சொல்லின்னு எதிர் பாட்டு  பாடி  நிப்பாட்டினான். மேனேஜர், "அதெல்லாம் ஒண்ணும்  problem இல்ல சார், accomodationல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் சார்"ன்னு , ஒரு வேற ரூட் சொல்லவே, ராஜுக்கு நல்ல புரிஞ்சுது அவங்க மார்க்கெட்டிங் உத்தி. இன்னும் ஒரு வழி இருக்கு சார், நம்ப  ப்ரோக்ராமை 5 days  அண்ட் 4 nights  மாத்தி , மீண்டும் கால்குலேட்டர்  மூழ்கினார் . கடைசியா, "சார் உங்களுக்குன்னு என்னால முடிஞ்ச அளவு discount கொடுக்கிறேன் சார், யார் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணாதிங்கனு சொல்லி, ஒரு 70க்கு வந்து நின்றாரு .. ஒருத்தருக்கா??!! அப்பிடின்னு ராஜு கேட்க, "இல்ல சார்.., நீங்க வேற,..ரெண்டு பேருக்கும் சேர்த்து தா சார்". உடனே ராஜும், மேனேஜர் பார்த்து cheapa கேட்டேன் என்றதுக்காக ரொம்ப சீப் ஹோட்டல் எல்லாம் போடாதீங்கன்னு அல்ப சந்தேகத்தை ரொம்ப நாசூக்கா கேட்டான். "சார்...என்ன சார் நீங்க,,,அப்பிடியெல்லாம் ஒண்ணும்  இல்ல.. ஒரு நல்ல குரூப் தீ நகர்லெந்து வேற வராங்க,,உங்களுக்கு நல்ல கம்பெனியா இருக்கும் சார்..அதா வேற ஒண்ணும் இல்ல" அப்பிடினான்.. கடைசியா  மேடம் interfere பண்ணி , இத பாருங்க, மொத்தமா ரெண்டுபேருக்கும் சேர்த்து 65க்கு finalise பண்ணுங்கன்னு சொல்லி இடத்தை விட்டு கொஞ்சம் பெயரவே, மேனேஜர் உஷாரா , "சரிங்க மேடம், உங்களுக்காக லேடீஸ் first"  ன்னு ஏதோ உளறி டீல் பைனலைஸ் பண்ணினான் . ராஜுவிற்கு உள்ளூர தன் கையால ஆகாத தனத்தை நொந்து கொண்டான் , இருந்தாலும் மேனேஜர் கொஞ்சம் இளிச்ச வாயன் போல..எப்பிடியோ சாமி வரம் கொடுத்தா சரி  ..நமக்கு லாபம் தான் ன்னு சந்தோஷபட்டான்.  "ஓகே, thank you சார்.."னு சொல்லி ஒரு கணிசமான amount அட்வான்ஸ் உருவி கொண்டு , உங்களுக்கு முந்திநாள் ஈமெயில், tour ப்ரோக்ராம், எத்தனை மணிக்கு ஏர்போர்ட் ரிப்போர்டிங், எங்க மீட் பண்ணனும்  என்கிற எல்ல விஷயமும் தெரிய படுத்துவோம் அது வரைக்கும் chilaxனு சொல்லி  உ டனே மின்னல் வேகத்தில மறைந்தான். "இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. அதுக்குள்ள என்ன அப்பிடி அவசரம். அவங்களுக்கு பிசினஸ் வேணும்.அதுக்காக ந மள சுத்தி சுத்தி வராங்க. நிதான இன்னும் நாலு பேரை கேட்டு முடிவு பண்ணி இருக்கலாம்.உங்களுக்கு எப்போவோமே அவசரம்" னு HOD  கடுப்பாக அலுத்து கொண்டாங்க.   இ தெல்லாம் ராஜு தினமும் கேட்டு பழகி போன HOD அர்சசனைகள் !!.

ஸ்ரீலங்காவிற்கு போக வேண்டிய நாளும் வந்தது. அகால வேளை 3.30 மணிக்கு flight.  கால் டாக்ஸிக்கு போன் பண்ணி pickup டைம் சொல்லியாச்சு. மேனேஜர் கிட்டேஇருந்து ஈவினிங் வரை ஒரு மெசேஜ்ம் வரல. ராஜுவின் முகத்தில ஈ அடாத குறைதான். "இவங்களெல்லாம் இப்பிடித்தான் காசு கைல வரவரைக்கும் நம்மளுக்கு டான்ஸ் ஆடுவானுங்க , கைல காசு வந்த உடனே அவங்க போக்கே மாறிடும்...அயோகியான்கள்" என silent ஆ புலம்ப ஆரம்பித்தான். "இன்னும் ஒன் hour வெயிட் பண்ணி பார்ப்போம்... அவ்வளவு  guests கெல்லாம் சொல்லணும் இல்ல. நம்ப தான் frequent ட்ராவெல்லேர் ஆச்சே"ன்னு மனைவியைசமாதானம் பண்ணினான். "பரவாஇல்ல, ஏர்போர்ட் ல போய் அவனை கண்டிக்கிறேன்"ன்னு சமாதான பேசி HOD  டென்ஷன்நை குறைக்க பார்த்தான். "சரி, எதுக்கும் நீ ஒரு தரம் டிக்கெட், பாஸ்போர்ட், விசா சமாச்சாரங்களையெல்லாம் பார்த்து செக் பண்ணு , நா ஏற்கனவே பார்த்துட்டேன். ஒரு டபுள் செக்" தான்ன்னு சொல்லி எல்லா  டாக்குமெண்ட்ஸ் கொடுத்தான். இப்போ ராஜு கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சகுனி  தருணம் வந்தது. HOD ,  ஒவொரு டாக்குமெண்ட்யா  பொறுமையா செக் பண்ணி  பக்கத்தில வச்சிக்கிட்டே இருந்தாங்க. டிக்கெட் பார்க்கும் போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம்  எடுத்தாங்க. டிக்கெட்டை ஒரு நாலு தடவை செக் பண்ணி, மறுபடியும் வீட்டு காலெண்டரையும் மாறி மாறி பார்த்து, "என்னங்க.. இங்க வாங்க"ன்னு ஒரு சவுண்ட் பலமா விட்டாங்க. கொஞ்சம் இரு, டாக்ஸி reconfirm பண்ணிட்டு வரேன் அப்பிடினான். உடனே, "அந்த கூத்து எல்லாம் ஒண்ணும்  வேண்டாம்.. , எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்னு சொன்னா மட்டும் மூக்குக்கு மேல கோவம் வரும்..இந்த டிக்கெட்டை சரியாய் பார்த்திங்களா, இன்னிக்கி என்ன தேதி?, ட்ராவல் தேதி 15 தானே போட்டிருக்கு இன்னிக்கி 14 தானே அப்பிடின்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க  . ராஜு டிக்கெட்டை லபக்குனு பிடுங்கி "என்ன உளறரே.. சரியாய் பாரு, இன்னிக்கி 15 தானே" அப்பிடின்னு ஒரே அடி அடிதான். அதே  சமயத்தில், அடி  வயிற்றில் சுரீர்னு ஒரு ஷாக் அடித்த மாதிரி feel பண்ணினான். ஒரு வேளை  சொதப்பிட்டோமோ?  அட கஷ்டகாலமே , இப்பிடி ஒரு நிலைமை நமக்கு ஏன்தான் வருதோன்னு ரொம்ப அசடு வழிய நிலைமையை  எப்பிடி சமாளிக்கலாம்னு பார்த்தான். எப்பிடியோ சாரி சொல்லி, சரி கட்டினான் . நல்ல வேளை, ஏர்போர்ட்க்கு போய்  அவமான பட்டு திருமபாமா இருந்தோமேன்னு உள்ளுக்குள்ள ஒரு அல்ப சந்தோசம்.  HOD பார்க்கவே ரொம்ப கூச்சமாக இருந்தது..இருந்தாலும் ஆண் வர்க்கமாயிற்றே. "ஏதோ முதல் தடவை இப்பிடி ஆச்சு.., நம்பளும் தான் எவ்வளவு ட்ரிப் போயிருக்கிறோம், இப்பிடி நடந்ததுண்டா" அப்பிடின்னு ஒரே சமாளிபிகேஷன் தான். "நான் கூட ஏன் இப்பிடி travel மேனேஜர் போன் பண்ணலையேன்னு  டவுட்... அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாங்களேனு கூட யோசிச்சேன்" அப்பிடின்னு ரொம்ப பிராக்கியர் மாதிரி பேசினான்.. மேனேஜர் எப்பிடி பண்ணுவான்?..தப்பு தன்   பேர்ல வச்சிக்கிட்டு அவனை போட்டு கன்னா  பின்னான்னு பேசிட்டோமேன்னு ரொம்ப வறுத்தப்பட்டான்.

மறுநாள் மேனேஜர் போன் பண்ணி பயண ஆயுதங்களுக்கான instructions முறையா கொடுக்க, ராஜு , "நாங்க கரெக்டா வந்துருவோம், நீங்க ஒர்ரி பண்ணிக்காதீங்க.." ன்னு சொல்லி ஒரே கண்ணால அசட்டு சிரிப்புடன் மனைவியை பார்த்தான். "கம் ஆன்... லெட்ஸ் என்ஜோய்..." னு சொல்லி பொண்டாட்டிய  அணைச்சிகிட்டு ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தான். மற்றபடி ஸ்ரீலங்கா ட்ரிப் எப்பிடி எல்லாம்  சுவாரசியமா இருந்தது என்கிற கதை அடுத்து வரும் வரை காத்திருங்கள்....

                                                                         - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
இதோ அந்த  L A   N K A  J U M P ட்ரைலர் pictures பாருங்க  :::>>


 
 
Add caption











                                                                                 

*********************************************************************************















Thursday, August 30, 2018

மேட்னி மோகம் !!!!!

 மேட்னி  மோகம்  !!!  

ராஜு  ரொம்ப வருஷமாக வெளி ஊர்ல  வேலை பார்த்துவந்தான். சென்னை வாசி தான், அனால்  வேலை நிமித்தம் காரணமாக ஊர் ஊராய் ட்ரான்ஸபெர்  பயணம். கடைசியா retire அன பிறகுதான் சென்னை வரும் சான்ஸ்  கிடைச்சுது. ரொம்ப ஆர்வத்தோட... அப்பாடா இனி எந்த ஊருக்கும்  போய் அலையை வேண்டாம் என சந்தோஷப்பட்டான் .  எப்போதோ வாங்கி போட்ட கிரௌண்ட்ல வீடு கட்டலாம்னு பிளான் போட்டு, வீடு முடியற வரைக்கும் வேற எங்கேயாவது வாடகைக்கு தான் போகணும். அதனால சண்டே அன்னிக்கு ஒரு ஏஜென்ட், பைக் சகிதம் காலையிலேயே  புறப்பட்டாச்சு. ராஜு விற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்ன இருந்தாலும் சென்னை சென்னை தாண்டா  அப்பிடின்னு மனசு சொல்லிச்சு. என்ன சுறு சுறுப்பான மக்கள். கொல்கத்தாவிற்கு போனால் மக்கள் ரொம்ப மச மச நிதானமா ஒரு கவலையும் இல்லாம இருப்பாங்க. பெங்களூரு போனக்க அது அதுக்கு மேல தூங்கு மூஞ்சி  ஊரு. டெல்லி சொல்லவே வேண்டாம். ஒரே  சொசைட்டி, பாலிடிக்ஸ் தான். மும்பையா ..கேட்கவே  வேண்டாம். நிக்கருத்துக்கே எடம் கிடையாது. எல்லாரும் எங்கேயோ அவசரமா காசுக்காக ஓடுவாங்க. இப்பிடியாக இருக்க, ராஜு வின் பைக் கோடம்பாக்கம் வழிய சென்று பழைய ராம் தியேட்டர் இருந்த இடத்தை தண்டி சென்றது. ஆனால் ராஜு வின் மனம் ராம் theatre யை சுற்றி சுற்றி  வந்தது.  அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்தது..அது என்ன தான் ராஜூவே சொல்றான் கேளுங்க... 

இப்போ சொல்லப்போற சுவாரசியமான நிகழ்வுகள் கிட்ட தட்ட 40 வருடங்கள் முன்னாடி இருக்கும். இந்த மறக்கமுடியாத நாட்களை பத்தி த்தான் இப்போ ராஜு பேச போறான். அந்த காலத்தில சினிமாக்கு போறது என்பது ஒரு பெரிய luxuryயோடு  இல்லாம ஒரு பெரிய ப்ரொஜெக்ட்டும் கூட. அமாம், சும்மா வீட்டுக்கு தெரியாமையோ இல்லேன்னா வேற யார் கூடயோ  அவ்வளவு ஈஸியா போகமுடியாது. பாக்கெட் மணி எல்லாம் அப்போ கிடையாது. மொத்தமா குடும்பதோட தா போவோங்க . ரொம்பவும் ஜாலியாக இருக்கும். . உதாரணத்திற்கு முக்கியமா சில  படங்களுக்கு போன சூப்பரான அனுபவங்கள்  மட்டும் இப்போ பாக்கலாம் . மத்த எல்லா சினிமாகளுக்கு போயிட் டு வந்த அனுபவம் ஏற குறைய அதே மாடல் தான்.!!  

முதல் படம் பிரபல மாஜி நடிகை கே .ஆர். விஜயாவின்  முதல் படமான கற்பகம். இந்த படத்திற்கு கட்டாயமாக போகவேண்டிய காரணம்  ஒண்ணு இருக்கு. இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜுவின் பெரிய அம்மாவின் சொந்தக் காரர். இந்த படத்தி சில காட்சிகள் தயாரிப்பாளரின் சொந்த ஊரில் படமாக்க பட்டதால் அந்த ஊரை சினிமாவில் பார்க்க வேண்டிய கண்டிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தயாரிப்பாளரின் சொந்த காரர் குடும்பம் என்பதால் எல்லோருக்கும் சேர்த்து ஒரு 6 பேருக்கு பிரீ பாஸ் கொடுக்கப்பட்டது. ராஜுவின் மொத்த மக்களுக்கும் இந்த ஆறு  பேரு பாஸ்  சரியான ரேஷன் மாதிரி. சரி..எப்பிடியோ தியேட்டருக்கு போய்  சமாளிக்கலாம் என்று பெரியம்மா சொல்ல மறுநாள் மதியம் மேட்னி காட்சி போவதாக ஏற்பாடு. இப்போ தலையாய பிரச்சினை யார் எல்லாம் சினிமாபோக போகிறார்கள் என்பது. என் பெரியம்மா கூட பிறந்த சகோதரிகள், அவர்கள் பேமிலி எல்லாம் சேர்த்தால் குறைஞ்ச பட்சம் பத்து உருபடிக்கு  மேல் தேறும். ஒரு மாதிரி குடும்பத்திற்கு ரெண்டு பசங்க  பேரு  வீதம் பிளஸ் பாட்டி , பெரியம்மா, சித்தி, ராஜுவின் அம்மா எல்லாம் சேர்த்து 8 பெரு செலெக்ட் ஆனாங்க . விட்டு போனவர்களை அடுத்த தடவை கூடி போவதாக ஒரு அட்ஜஸ்ட்மென்ட் செய்தாங்க. இந்த கும்பலில் ஒரே ஒரு சின்ன பையன் மட்டும் இருந்தான். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம்  பெரியவர்கள். அந்த சின்ன பையனுக்கு சினிமா இது தான் முதல் தடவை போல . முதலிலேயே  ஒரு கண்டிஷன். அதாவது அந்த சின்ன பையன் படம் பார்க்கும் போது அழுதால் யாராவது பசங்கதான் அவனை வெளியில் அழைத்துக்கொண்டு போகணும். இந்த  கண்டிஷன்க்கு பசங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு வேற வழி  இல்லாம ஒப்புக்கொண்டனர். காலைலேருந்தே படம் நடுவே சாப்பிட வேண்டிய ஐட்டம்  எல்லாம் பிளாட்டிக் கவர்ல  ரெடி. படம் 3.30 மணிக்கு. ஒரு மணிக்கே நொறுக்கு தீனி  bag சகிதம்  பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தாச்சு. சரியான உச்சி சென்னை வெயில், கேட்கணுமா ..செம்ம சூடு..12 or 12B நம்பர்  தான் ராம் தியேட்டர்  போக வேண்டிய பஸ். ஒரு வழியாக 2 மணிக்கே தியேட்டர் வந்தாச்சு . ஏன்னா எக்ஸ்ட்ரா  உருபிடிகளுக்கு மீதி பாஸ் வாங்கணும். பெரியம்மா தான் போய்  மேனேஜரை பார்த்து ஏற்பாடு பண்றேன்னு சொல்லி போனாங்க.  பெரியம்மா அந்த காலத்து கான்வென்ட் . இங்கிலிஷ் சும்மா வாயிலே குயின் எலிசபெத் கணக்கில வரும். அந்த மேனேஜர் கிட்ட போய்  தாட் பூட் ன்னு இங்கிலிஷ்ல பேச போய் அவன் ஒரேடியா வெல வெலத்து  போய் ஒரு டிக்கெட் எஸ்ட்ராவே கொடுத்தான். நல்ல வேளை அந்த குட்டி பயலை மடியில உட்கார வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒருவழியாக  2.45 க்கு  உள்ளே போய் உட்கார்ந்து ஆகிவிட்டது.  இந்த பாஸ்க்கு  ஏஸி  ரூம் வசதி  இருந்தது. உரக்க சினிமா பாடல்கள் பாட குஷி கிளம்பியது. அரங்கு திரை கலர் லைட் சகிதம் தூக்கியது. உடனே சின்னவன், அம்மா எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு சிணுங்க ஆரம்பித்தான். பாவம் முதல் தியேட்டர் அனுபவம் இல்லையா. மொதல்ல விளம்பர ஸ்லைடுகள், அப்புறமா பிஹாரில் வெள்ளம் நியூஸ் ரீல் முடிய 15 நிமிடம் ஆச்சு. மக்கள் பொறுமை இல்லாம விசில் அடிச்சு படத்தை போடுங்கனு ஒரே ரகளை. ஒரு வழியா படம் ஆரம்பிக்க  எல்லாரும் ஒரு மாதிரியா செட்டில் ஆகி படத்தோட ஐக்கியம் ஆகிட்டாங்க. இந்த சமயம் பார்த்து நம்ப பயல், அம்மா... பசிக்குதுனு சொல்லவே, உடனே பாட்டி கை பையில்  இருந்த முறுக்கு எல்லோருக்கும் விநியோகம் ஆனது.  படம் சுவாரஸ்யத்தில் கடிக்கவே முடியாத முறுக்கு சும்மா அல்வா மாதிரி கரைந்தது. அடுத்த 15 நிமிடம் தான் ஆகி இருக்கும். மீண்டும் சிணுங்கல். இப்போ என்னடா ன்னு கேட்டா, மூச்சா வரதுன்னு சொல்லவே, பெரியம்மா மற்ற பசங்களை பார்த்து, ஏற்கனவே போட்ட அக்ரீமெண்ட் பிரகாரம் யாராவது இவனை வெளியில் அழைச்சுண்டு போங்கடானு சொல்லவே, அவனவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். வேற வழி இல்லாமல் ஒரு பையன் அவனை வெளியே கொண்டு போய் விட்டு வந்தான். இப்போ மீண்டும் பிளாஸ்டிக் கவர் பிரிக்கும் சவுண்ட். பாட்டி  அடுத்த ரவுண்டு ஸ்னாக் பேரன்களுக்கு ரெடி பண்ராங்க. பின்னாடி சீட்டில் இருப்பவர்கள் இந்த சப்தம் தாங்க  முடியாமல் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்க  பாட்டி  அப்பிடின்னு கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே வேற வழி இல்லாம பிளாஸ்டிக் சப்தம் நின்றது. அடுத்த கட்டமான இண்டெர்வெல்  வந்தது. அவளவுதான் பாட்டி official லா தன் ஸ்னாக்க்டீரியாவை பிரிக்க ஆரம்பிச்சாங்க. என்ன என்னமோ நொறுக்கு தீனிகள்  உள்ளே போனது. மீண்டும் திரை தூக்கல். இண்டெர்வெல்க்கு அப்புறம் தான் கதை சுவாரசியம். பயலுக்கு  ஒரு மாதிரி ஸ்னாக்ஸ் மேல ஸ்னாக்ஸ்...  வயிறு நிறைய அடைச்சாச்சு. அப்பாடா , இனி படம் நிம்மதியா பார்க்கலாம். கொஞ்ச நேரத்தில இவங்க ஆர்வமா வெயிட் பண்ணிட்டிருக்கிற ஊரு காட்சி  வந்தது. எல்லோரும் ரொம்ப ஆவலாய் மகிழ்ச்சியுடன் பார்க்க, அந்த பொடி பயல் மட்டும் சுகமா தூங்கிட்டான்!!. படம் மேலும் மேலும் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில, பயல் சடார்னு எழுந்து ஒரே அழுகை. யாருக்கும் ஒண்ணுமே புரியல. என்ன பிரச்சினைனு  பார்த்தா, பாட்டி ஆசையாய் கொடுத்த ஐட்டம்ஸ் எல்லாம் வயிற்றில் கட முடா செய்ய ஆரம்பிடிச்சு  போல. அம்மா, எனக்கு அவசரமா வருதுன்னு பயல் ரெண்டு விரலையும் காண்பித்தான். எல்லோர் வயிற்றிலும் புளியை கரைக்க, அடுத்த வெளியே போகவேண்டிய  பலி ஆடு யாருனு பார்க்க,  ராஜு மரியாதையாக எழுந்து பயலை கூட்டிக்கொண்டு வெளியே வேகமாக வெளியேறினான். ராஜுக்கு மனசெல்லாம் படத்திலேயே தான். வெளியே போய் அந்த பய பாத் ரூம்ல அடிச்ச கூத்தும், ராஜு பட்ட கஷ்டமும் இங்கேய விலா வாரியா  விவரிக்க கூடிய விஷயம் இல்லை. ஒரு மாதிரி வேகமாக முக்கிய கட்சிக்காக உள் ளே வந்த ராஜுக்கு "மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா" என்கிற situation song  வேற...ராஜுவுக்கு ரொம்ப வெறுப்பு. இனிமே இந்த பார்ட்டி கூட சினிமா வரவேகூடாதுனு ஒரு முடிவுக்கு வந்தான். போறா  குறைக்கு பெரியம்மா , அப்பிடி ஒண்ணும் நடக்கலனு சொல்லி, விட்டு போன கதையை சொல்ல ஆரம்பித்தாள். இந்த  ஒரு அனுபவம் ராஜுவிற்கு இப்போது ராம் தியேட்டர் கிட்ட வரும்போது வந்தது.  நினைவலைகளை மிகவும் ரசித்தான்.

பெரியம்மா தான் அந்த கூத்து அடிச்சாங்கன்னா , ராஜுவின் அத்தை, குடும்பத்தோடு டெல்லி யிலிருந்து சென்னை வந்து அடிச்ச கூத்து இன்னும் சுவாரசியமானது.. இவங்க எப்போ வந்தாலும் குறைஞ்ச பட்சம் மூன்று  ஐட்டம்ஸ் உண்டு. ஒண்ணு மரீனா பீச்...ரெண்டாவது அங்கே ரீட்டா குச்சி ஐஸ் கிரீம் பிளஸ் மாங்கா பத்தை . ஆகா, என்ன ஆனந்தமான நாட்கள். அப்புறம் மூன்றாவது கண்டிப்பாக மேட்னி சினிமா உண்டு. அத்தை குடும்பத்தார்  கொஞ்சம் எமோஷனல் பார்ட்டி. சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகிடுவாங்க. அந்த விஷயம் சந்தோஷமாக இருக்கலாம் இல்லேன்னா வருத்தமாக கூட இருக்கலாம். அல்ப ரீட்டா ஐஸ் கிரீம்க்கு ரொம்ப சந்தோஷ படுவாங்க. அடுத்து வருவது  சீரியஸ் எமோஷனல் situation . வேற ஒண்ணுமே இல்ல. இவங்களை கூட்டிகிட்டு சன் தியேட்டர்ல "நெஞ்சில் ஒரு ஆலயம் " படம், அப்புறம் பாச மலர், நீர் குமிழி போன்ற டென்ஷன் படங்களுக்கு சேர்ந்து  குமபலாக  போயி  அழுததெல்லாம் சொல்ணும்னா  வேற  "மேட்னி மோகம்  பார்ட் 2" தான் எழுதணும். இப்போ நினைச்சாலும் வயிரு வலிக்க சிரிப்பு வரும் ராஜுவுக்கு. 

இப்பிடியாக, ராஜு சண்டே வீடு தேடும் படலம் கை கூடாம ஆனால் மலரும் நினைவுகளோடு வீடு திரும்பினான். என்ன இருந்தாலும் இந்த சிங்கார சென்னை, வந்தாரை மகிழ வைக்கும் நகரமாக இன்று வரை இருந்துதான் வருகிறது.

                                                                                 - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
******************************************************************************







வினை (தொகை)கள்


                        வினை(தொகை)கள் 




என்னடா இது ரொம்ப நாளாக ராஜூகிட்ட இருந்து ஒருகப்ஸாவும் வரலயேன்னு ரொம்ப கவலையா இருந்திங்களோ ?? !!! காரணம் என்னனா ராஜு இப்போ எல்லாம் வேற டைம்Passla பிஸியா இருக்கான். அதுஎன்னனு விலாவாரியா கேட்போம்.

அது வேற ஒண்ணும்  இல்ல. ராஜுவிற்கு எதேர்ச்சியாக ஒரு வெப்சைட்ல தையல் மெஷின் விற்பனைக்கு வந்ததை பார்த்து ஒரு விபரீத ஆசை வந்தது. Balconyகார்டன் oru பக்கம் இருக்க, தையல் கற்றுக்கொண்டால் மீதி நேரத்தில உருப்படியா ஏதாவது செய்யலாமேன்னு ஒரு ஐடியா தோணியது. வழக்கம்போல்,  வீட்டு பாஸ்க்கு சொல்லாம surpriseஆ ரொம்ப புத்திசாலித்தனமா கொறஞ்ச விலைக்கு தையல் மெஷின் வாங்கி வந்துட்டான் . ராஜுவின் பாஸ் ஒரு மாதிரி இது என்ன புது பொண்டாட்டின்னு கிண்டலாககேட்டாள். ஏற்கனவே ரொம்ப வருஷமா சும்மா இருந்த மெஷின் போன வருஷம் தான் அடி  மாட்டு விலைக்கு கொடுத்தோம்,இப்போ என்ன இதுக்கு அவசரம்ன்னு கேட்க, இல்ல...  இது லேட்டஸ்ட் மாடல்,ரொம்ப சீப்பாகவாங்கியதாக சொல்ல, அப்போவே பாஸ்க்கு புரிஞ்சு போச்சு. ஏதோ மழுப்பல்ன்னு. anyways கதைக்குள்ள போகலாம் வாங்க...






வீட்டுக்கு வந்த புதிய விருந்தாளி ஒரு எலக்ட்ரிகல் மெசின். அத எப்பிடி யூஸ் பண்ணறது அப்பிடின்னு யோசிச்சிண்டிருந்தான். உடனே,கமாண்டர் இன் chief, ராஜூவை பார்த்து நீங்க கையும் காலையும் வச்சுக்கிட்டு ஏதாவது ஏடா கூடமா செய்யாதீங்க அப்படினு சொல்லவே. ராஜு தன் மொபைலில் YOUTUBEல டைலரிங் டுடோரியல் பாக்க போனான்.கூடவே இந்த மிஷினை வித்தவர் சொன்ன ஐடியா நியாபகம் வரவே,மெஷின் வாங்கின கடைக்கு போன் போட்டு ஒரு டெமோ செஷன் fix பண்ணி ரொம்ப பெருமையா பார்த்தான். டெமோ அப்பாயிண்ட்மெண்ட் ரெண்டு நாள் ஆகும். அதுவரை புது பொண்டாட்டிய சுத்தி சுத்தி வந்தான். டெமோ மாஸ்டர் கரெக்டா வந்தார். மெஷினை பார்த்து எவ்வளவுக்கு சார் வாங்கினீங்கன்னு வந்தது வராததுமாய் இடம் பொருள் ஏவல் தெரியாம கேட்டார். ராஜு ஒரு மாதிரி சசுதாரித்துக்கொண்டு, close friendது, விலைக்கு வந்து இருக்கு, வாங்கலாமான்னு  கேட்டான். மெஷின் கண்டிஷன் எப்பிடி  இருக்குனு சொல்லுங்க என்றான் . அவர் மெஷினை ஒட்டி பார்த்துட்டு கொஞ்சம் சர்வீஸ்  பண்ணனும், நானே பண்ணுவேன்,500 ரூபாதான்  ஆகும், கடைல கொடுத்தா  1000 ஆகும்னு சொன்னரு. ராஜு HOD approval வாங்கி சரி நீங்களே சர்வீஸ் நீங்களே செய்யுங்கன்னு சொன்னான். டெமோ மாஸ்டர் தனக்கு அன்னைக்கு ஒரு மீனு மாட்சின்னு சந்தோச பட்டு மெஷின் சூப்பரா  இருக்கு சார்ன்னு சொல்லி வாங்கக்கூடிய விலையை சொன்னாரு. அந்த தொகையும் தான் கொடுத்த தொகையை விட கொஞ்சம்தான்  கம்மியாக இருந்ததால ராஜு மீண்டும் ஒரு பெரு மூச்சு  விட்டான். அப்பாடி பரீட்சை பாஸ். டெமோ செஷன் ரொம்ப smoothaga போனது. மாஸ்டர் ரொம்ப சிம்பிளா ஸ்ட்ரெயிட்ட running ஸ்டிட்ச் சொல்லி கொடுத்து மற்றபடி எப்பிடி ஊசில நூல் கோக்கணும்னு ரொம்ப லாவகமா  காண்பிக்கவே யானைக்கு ஏர்றம் குதிரைக்கு குர்ரம் போல அப்பிடின்னு மனசுல நினைசக்கிட்டான். மறக்காம மாஸ்டர் போன் நம்பர் வாங்கி கொண்டான்.  

அப்பாடி , இனி நாம்பளே தைக்கலாம்னு சந்தோசம். யூ டூப்பில் பார்த்த DIY  (Do  It Yourself ) எல்லா டுட்டோரிலும் ரொம்ப ஈஸியாக இருந்தது. சரி, இனி கோதாவில் இறங்க வேண்டியது தான். மொதல்ல ஒரு வேஸ்ட் கெர்ச்சிப் துணி எடுத்து ஸ்டிச் பண்ணலாமேன்னு துணிய தைக்கிறதுக்கு ஆயுதமானான். இப்போ தா வந்தது மதுரைக்கு  வந்த சோதனை. நூலை கண்டிலிருந்து இழுத்து பல ரூட் குள்ள போயி  கடைசியில ஊசி முனை கிட்ட வரணும். அதுவே ஒரு challenging  வேலை. இப்போ ஊசியில் நூலை நுழைக்கும் படலம். நூல் நுனி கூர்மையாக இல்லாததால், நூலை நுழைக்க ரொம்ப பிரம பிரயத்தனம் பட்டான். வேறவழி  இல்லாம பொண்டாட்டியை  ஒரு ஹெல்ப் பார்வை. அவங்க அலட்சியமா டூல்  பாக்ஸ்லேந்து ஒரு item (அது பேரு kneedle threader, ராஜு  மாதிரி, சோப்லாங்கிகளுக்குன்னு கண்டு பிடிச்சாங்க போல) எடுத்து, அத ஊசி ஓட்டைக்குள்ள நுழைச்சு நூலை கோத்து வாங்கி அனாவசியமா நூலை ஊசிக்குள்ள கோத்துக்கொடுத்தாங்க. ச்ச, இது எனக்கு தெரியாம போச்சேன்னு அசடு வழிய, இது எனக்கு தெரியாதா..நீ என்னமோ அப்பிடியே  நூலை கோப்பியோனு நினைச்சேன்னு சமாளிக்கிறதுக்குள்ள, படக்குனு நூலை ஊசிலேந்து உருவி எடுத்து ராஜு கைல அந்த வஸ்துவை கொடுத்து, இப்போ உங்க turn அப்பிடின்னு சொன்னா.ராஜுவும்  ரொம்ப வீறாப்பா , அந்த வஸ்துவின் நுனியை ஊசி முனையில் நுழைக்க ட்ரை பண்ண போக, அதன் நுனியிலுள்ள சின்ன ஒயர் மொளுக்ன்னு உடைந்து வாயே பிளந்து கொண்டு சிரித்தது !. ராஜுவின் முகம் ரொம்ப விகாரமா போக, சகதர்மினி  பரவா  இல்ல..., நீங்க, அது இல்லாம  பழகிக்கோங்கன்னு சொன்னா. அய்யோயோ, இது அதைவிட ரொம்ப கஷ்டமான பரீட்சை ஆச்சே, எப்பிடி சமாளிக்கப்போறோம்னு மனசு கிடந்தது அடித்துக்கொண்டது. இதோ பாருங்க, நான் கோத்து காண்பிக்கிறேன் சொல்லி மீண்டும் வெற்றிகரமா நூலை ஊசில கோத்து கொடுத்தாங்க. உடனே, ராஜு அப்புறமா நான்  ட்ரை பண்றேன் சொல்லி சமாளிச்சான். இப்போ அடுத்த கட்டம், trial ஓட்டம். ராஜு, சாமிக்கு வேண்டிக்கிட்டு தன்  காலை பெடல்  மேல் வைத்து லேசா ஒரு அழுத்து அழுத்த, மிஷின் சும்மா தண்ணி  போட்ட ரேஸ் குதிரையாக கோணல் மாணலாக தையல் போட்டது. ராஜு ஒரு நிமிஷம் வெலவெலத்து போனான். அம்மாடி, இதுல நெறைய சூட்சமம் இருக்கு டோய்ன்னு புரிஞ்சுகொண்டான். நூல் தான் சரி இல்ல போலிருக்கு..அப்பிடின்னு நூல் மேல பழியை போட்டு திரும்பி பார்க்கிற நேரத்திலே, தான் நினைத்தது அவன் மனைவிக்கு மூக்கிலே வேர்த்தது போல...ஆட தெரியாத நாட்டியக்காரி மித்தம் கோணலாக இருக்குனு சொன்னாளாம் அப்பிடின்னு முணுத்துக்கொண்டே  மொதல்ல அப்பிடித்தான் இருக்கும், டெய்லி கொஞ்சம் ப்ராக்டிஸ்  பண்ணுங்க சரி ஆகிடும் அப்படின்னு  அசரீரி மாதிரி சொன்னா. ராஜுவிற்கு பகிர்ன்னு இருந்தது.
ஆனாக்க ராஜு மனசை தேத்திக்கிட்டு விடா கொண்டனாக தினமும் கிரமசித்தயாக தினமும் பொறுமையா கற்றுக்கொண்டு, யு Tubeய மானசீக குருவாக கொண்டு சின்ன சின்ன, ஈஸியாக வரக்கூடிய items தைக்க ஆரம்பித்தான். இந்த மெஷின் வாங்கின வினை (தொகை)களை தினமும் தனக்கு வேண்டியவர்களுடன் வாட்ஸாப்ப் மூலம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தான். 


- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்