Monday, August 5, 2019

மொறு மொறு கொசுறு

                                                                 மொறு மொறு  கொசுறு

இந்த கதையில் ராஜு வாழக்கையில் சந்தித்த ஒரு வித்தியாசமான கேரக்டர். அவங்க எப்படி  வித்யாசமானவங்கன்னு பார்க்கலாமா. இவங்க பெயர்  கோகிலா. இவங்க மற்ற பெண்களைப்போலவே தான் இருப்பாங்க. ஆனால் ஒரு  தமாஷான  அல்லது விதியாசமான  குணாதிசியத்தை கொண்டவங்க. கோகிலாவுக்கு  ஓரளவுக்கு தான் படிப்பு.  ஆனால் ஸ்ட்ரீட் ஸ்மார்ட், எந்த வேலை கொடுத்தாலும் பம்பரமாக சுழன்று செய்வாங்க, வீட்டு வேலையிலிருந்து வெளி வேலை வரை, assaultஆக  செய்வாங்க. ரொம்பவும் பேச்சு சாமர்த்தியம், கடைக்கு  போனால் பேரம் பண்ணாமல் ஒரு சாமானும் வாங்கமாட்டாங்க.

இதிலென்ன  வித்தியாசம் இருக்குனு தோணும். மேட்டர் வெறும் பேரம் பண்ணைகூடிய  ஷாப்பிங் இல்ல. இவங்களுக்கு ஸ்னாக்ஸ் கடைக்கு போகிறது என்றால்  ரொம்பப்பிடிக்கும்.  நம  நமனு  கை  அரிக்கும். நாக்கிலே  ஜொள்ளு ஊரும். அதை குறித்து ஒரு சம்பவத்தை பாக்கலாமா. ஒரு சமயம் ஸ்ரீனிவாசா போளி ஸ்டாலுக்கு போய் இருந்தாங்க. அங்கே சரியான கும்பல் நெறிச்சி தள்ளியது  . இவங்க  பந்தாவாக கும்பலை தள்ளிக்கொண்டு முன்னாடி போய் நின்னாங்க.
அங்க இருக்கிற கர கர மொற மொற  பண்டங்களையெல்லாம் பொறுமையா ஒரு நோட்டம் விட்டாங்க . சரி , இனிக்கிக்கு ஒரு கை  பார்க்க வேண்டியது தான்னு வயிறு சொல்லியது. அவங்க பக்கத்தில ஒரு பெரிய கடாயில வெங்காய தூள் பகோடா கம கமான்னு  ரெடி ஆகிக்கொண்டிருந்தது. அந்த பக்கோடாவை மாஸ்டர் லாவகமாக பக்கத்திலிருந்த எண்ணெய் வடிகட்டியில் போட்டுக்கொண்டிருந்தாரு .உடனே நம்ப கொசுறு  கோகிலா, "இந்தாங்க, கொஞ்சம் கொசுறு கொடுங்க, சரியா வெந்துருக்கானு பாக்குறேன், நெறய வாங்க வேண்டி இருக்குது"னு  கைய நீட்டினாங்க. அதுக்கு மாஸ்டர் அவங்களை  ஏற இறங்க ஒரு முறை பார்த்துவி ட்டு, "எல்லாம் கண்டிஷனா தா இருக்கும். நீங்க வேண்டுமானா சாம்பிள் பாருங்க"ன்னு அந்த ஜாலி கரண்டியிலிருந்து ஒரு 50 கிராம் சுட சுட பக்கோடாவை கோகிலா கையில கொடுத்தாரு. கோகிலாவிற்கு பழம் நழுவி பாலில்  விழுந்து அங்கிருந்து வாயில் விழுந்த கதையாய் ஆனது . கோகிலா உடனே, " போறும்ப்பா, கொஞ்சம் போதும், ஒரே எண்ணெய்" அப்பிடின்னு சொல்லிக்கொண்டே அத்தனை பக்கோடாவையும் பக்கத்திலிருந்த நியூஸ் பேப்பரில் வாங்கிகொண்டாங்க. சரி, இவங்க சாப்பிட்டு டேஸ்ட் எப்பிடி இருக்குனு சொல்ல போறாங்கன்னு  கோகிலா முகத்தையே  பார்த்து கொண்டிருக்க, நம்ப ஆளு அந்த பக்கோடாவை சமர்த்தியமா  பொட்டலாமா மடிச்சு,  கையோடு கொண்டு வந்திருந்த பையில பத்திரமா வச்சிக்கிட்டாங்க. "இல்ல, வயிறு, ஒரு மாதிரி இருக்கு, அதான் சாப்பிடலன்னு"  ஒரு சமாளிப்பு . மாஸ்டர் ஒரு மாதிரி அவங்கள பாக்கிறதுக்குள்ள, கோகிலா கவுண்ட்டர் பக்கம் வேகமாக போனாங்க. இன்னிக்கி கொஞ்சம் சிப்ஸ் வாங்கலாம்னு ஒரு ஐடியா தோணவே, கடை காரரை பார்த்து, "இந்த வாழைக்காய் சிப்ஸ் உப்பு போட்டதா? இல்ல காராமா ?"னு கேக்கவே, அவரும்ன கொஞ்சம் சிப்ஸ் கையில் கொடுத்து, "உப்பு போட்டதுதான் பாருங்க"ன்னு காண்பிக்கவே, "கொஞ்சம் சாம்பிள் கொடுங்க பாக்கலாம்"னு கேட்டாங்க.
salted  சிப்ஸ் இவங்க கைக்கு இடம்மாறியது. அதை வாயில் போட்டுகொண்டு, "ரொம்ப உப்பாக இருக்கு, கொஞ்சம் காரம் போட்டது கொடுங்க எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்?"னு கேட்டாங்க.  மீணடும் சிப்ஸ் கை  மாற்றம். கொஞ்சம் வாயில் போட்டு கொண்டு, "பரவாஇல்லை   , சூடா  இல்லயே ..?இன்னிக்கி போட்டதா"னு கேட்டாங்க. அந்த பையன் இவங்கள கொஞ்சம் உஷாரா பார்த்து, "மதியம் தான் போட்டது, இன்னும் சூடு கூட ஆறலை பாருங்க"ன்னு சொல்லி, மேலும் கொஞ்சம் கார சிப்ஸ் கைல கொடுத்தான். அட, இது நம்ப கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லையே என்று மனசுக்குள் ஒரு அல்ப சந்தோசம். "எவ்வளவுங்க  வேணும், ஒரு கிலோவா ரெண்டுங்களா" என்று கேக்கவே, கோகிலா உடனே சுதாரித்துக்கொண்டு. " இப்போ ஒரு 100 கிராம் கொடுங்க, வீட்ல கேட்டுட்டு மேல வாங்கிக்கிறேன்"னு சொல்லி நிலைமை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. அவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே 100 கிராம் சிப்ஸ் எடை போட போனான். கோகிலா சும்மா இருப்பாங்களா , ..100 கிராம் சிப்ஸ், 100 கிலோ மாதிரி நினைச்சுகிட்டு எடை சரியாய் இருக்கானு பார்த்துக்கொண்டே இருக்கையில் அவன் சரியாய் 100 கிராம் அளந்து போட, கோகிலா அவனை இடை மறித்து, "இன்னும் ரெண்டு கொசுறு போடுங்க... எல்லாம் பொடிஞ்சு இருக்கு" அப்பிடினாங்க. "40 ரூபாய் கொடுங்க சில்லறையா, இல்லேன்னா ஒரு பத்து ரூபாய்க்கு பர்பி வாங்கிக்கோங்க" அப்பிடினான். "50 ரூபாய் மொத்தம் ஆகிடும். என்கிட்ட வேற சிலரை இல்லை". கோகிலா ரொம்ப சாமர்த்தியமா , "என்கிட்ட 500 ரூபாய் தா இருக்கு, வேற இல்லையே, என்ன செய்ய, சிப்ஸ் திருப்பி எடுத்துக்கோங்க" ன்னு ஒரு அலட்சிய பார்வையோடு சொல்லவே, அதற்கு, "நீங்க சில்லறை மாற்றி  திரும்பி போகும் போது  கொடுங்க"ன்னு அவங்களை கழட்டி விட பார்த்தான். நஷ்டம் வெறும்  100 கிராம் மட்டும் தான்னு அவன் கணக்கு , இல்லேன்னா  இந்த அம்மா free   சாம்பிள்லேய கடையே காலி பண்ணிடு வாங்க போலன்னு. கோகிலா மனதில் ஒரேடியா  வெற்றிப்புன்னகை . இன்னிக்கி யார் முகத்தில முழிச்சமோ   ..நல்ல லாபம். சரி, நேர வீட்டுக்கு நடையை கட்ட வேண்டியது தா நினைத்துக்கொண்டே நகரும் போது தாகம் தொண்டையை வறட்டவே , ஏதாவது கலர் இல்ல சர்பத் குடிக்கலாம்னு ஐடியா தோன்றியது. சொல்லி வெச்ச மாதிரி கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில் இளநீரும் மற்றும் தேங்க பூவும் ஒருத்தர் கூவி கொண்டிருந்தாரு. கோகிலாவிற்கு அதை கண்டதும், அவங்களுடைய விபரீத ஆசை மீண்டும் காஞ்சனா 3 டான்ஸ் ஆடியது. தானாகவே அந்த கடை காரனிடம் தன உடல் பொருள் ஆவி எல்லாம் தள்ளிக்கொண்டு போனது..
ஒரு விதமான மோகத்தில் கட்டுண்டவள்  போல சென்றாள் . தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்னு சொல்றபோல, அவங்க மனம் அநத தேங்காய் பூவின் மீது ஆசை  விழுந்தது. வழக்கம்போல் அவனிடம் சென்று,  "இளநீர் எப்பிடிப்பா?" னு கேட்டுக்கொண்டே, "அது என்னப்பா வெள்ளையா இருக்கே, தேங்க மேல" னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டாள். அவன் இதுக்கு தான்  காத்திருந்த மாதிரி, "அது தேங்க பூம்மா, ரொம்ப ருசியா இனிப்பா  இருக்கும்"னு சொல்லிக்கொண்டே இளநீர்ரை வெட்ட போனான். "ஒ, அப்பிடியா நான் சாப்பிட்டதே இல்லை" என தன்  அடுத்த ப்ரொஜெக்ட்க்கு ஒரு முஸ்தீபு போட்டாள். "அப்போ கொஞ்சம் வெட்டி  கொடு.. சாப்பிட்டு பாக்கலாம், உடம்புக்கு நல்லதுன்னு வேற சொல்றிங்க."..இத கேட்டு தனக்கு, ஓஹோ ரெண்டு வியாபாரம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்  டோய் இன்னிக்கி என மனசுக்குள்ள சந்தோஷ பட்டு ஒரு கீத்து தேங்காய்  பத்தை மாதிரி நறுக்கி கொடுத்தான். அதை சாப்பிட்டுவிட்டு , "அடே டே , ரொம்ப நல்ல இருக்கே, இளநீர் வெட்ட வேண்டாம் , தேங்காய் பூவே வாங்கலாம்னு நினைக்கிறன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கைப்பையிலிருந்த மொபைல் போனை கையில் எடுத்தது, "இருப்பா , கொஞ்சம் வீட்ல கேக்குறேன், எவ்வளவு வேணும்னு" அப்பிடின்னு சொல்லி, கொஞ்சம் தள்ளி போய் பேசுகிற  மாதிரி பாசாங்கு செய்துட்டு இருந்தாங்க. இதறக்கிடையில், கடைக்கு வியாபாரம் பெருகவே, அவனது கவனம் வேறு பக்கம் திரும்பியது. இது தான் சாக்கு என்று  அங்கிருந்து கோகிலா நழுவினாள். இவ்வாறாக கோகிலாவின் வாழ்க்கை  கொசுறும் வயிறுமாக நகர்ந்தது..

காலப்போக்கில் , கோகிலாவிற்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியது. அவர்கள் பெற்றோர்களுக்கு அவளுடைய அந்த கொசுறு வியாதி கொஞ்சம் கூட தெரியாது. மாப்பிள்ளை மனோகருக்கு தங்கள் பெண்ணின் பெருமைகளை விலா  வாரியாக சொல்ல, பிள்ளை வீட்டார், எங்களுக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம் நல்லா குடும்பத்தை  சாத்தியமாக நடத்துறே பெண்ணே வேண்டும் என்று சொன்னார்கள்..ஆஹா, ஜாடிக்கு ஏத்த மூடி சரியாய் , என கோகிலா மனதுக்குள் சந்தோச பட்டாள். காசிக்கு போனாலும் கர்மம் விடாது போல, கல்யாணம் ஆகியும் அவளுடைய அந்த கொசுறு புத்தி கொஞ்சம் கூட மாறவே இல்லை. மனோகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அந்த மனோ வியாதி பு ரிந்தது. இருந்தாலும் கண்டுக்காம விட்டுடான். எதிர்பார்த்த மாதிரி, சரியாய் ஒரு வருடம் கழித்து கோகிலா பிரசவம்..ஆஸ்பத்திரியில் குறுக்கும் நெடுக்குமாக மனோகர் மற்றும் அனைவரும் கவலையோடு இருந்தார்கள். பிரசவம் எந்த நிமிடத்திலும் ஆகலாம். சரியாய், 5 நிமிடம் கழித்து , ரூமிலிருந்து குழந்தை அழும் சப்தம் கேக்கவே, எல்லோரும் டாக்டர் எப்போ ரூமிலிருந்து வருவாங்க னு காத்திருக்கும் போது , நர்ஸ்  கையில் குழந்தையுடன் ஓடி வந்து,  "பொண்ணு பொறந்திருக்கு" னு சொல்லவே எல்லோரும் ரொம்ப சந்தோச பட்டார்கள் . மனோகரின் முகத்தில்  ஒரே சந்தோசம். இது நடந்து ஒரு 2 நிமிடம் ஆகி இருக்கும் மற்றொரு நர்ஸ் கையில் இன்னொரு குழந்தையுடன் வந்து, "ட்வின்ஸ்ங்க பையன்"னு சொன்னாங்க, எல்லோருக்கும் ரெட்டை சந்தோசம். அட அமாம், கொசுறு கோகிலாவிற்கு, குழந்தையும் கொசுறாக  கிடைத்தது. கோகிலா ரொம்ப சநதோஷமாய் மனோகரை பார்த்து கொசுரித்தாள் !!! .

எண்ணம், எழுத்து - ரவிசங்கர்

*********************************************************************************








.


   

Thursday, July 18, 2019

முண்டியடி முகூர்த்தம் !!!

                               

                                                     முண்டியடி முகூர்த்தம் !!!!

அமாம் , மீண்டும் ராஜூவே தான்.. ராஜுவின் வாழ்க்கை ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி சும்மா அலுங்காம தளும்பாம சூப்பர்ah போய்  கொண்டிருந்தது. வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், வாக்கிங்..அப்போப்போ வெளியில போஜனம் வேற. யாராவது பேச்சுக்கு கூட வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாலோ இல்ல சும்மா ஏதாச்சும் கல்யாண நோட்டீஸ் வந்தாலே போதும் குடும்ப சகிதமா  கெளம்பிடுவாங்க. இந்த கதையின் சாராம்சமே , ராஜுவும் அவன் பாமிலியும் ஒரு தூரத்து சொந்தக்காரங்க வீட்டு
கல்யாணத்துக்கு போயிடு வந்த புராணம் தான்.

அப்பிடி ஒண்ணும் எல்லாமே பிரீ இல்ல. ஏனென்றால் , இந்த ப்ராஜெக்ட் ல CALLTAXI  மற்றும்  SURGE  சார்ஜ் அடங்கவில்லை . இந்த கட்டத்தில் கால் டாக்ஸியை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இப்போ எல்லாம் யாரும் வயத்தை குலுக்குற ஆட்டோவில, driver கிட்ட  பட்ட பகல்ல நட்ட நடு பாஜார்ல யாரும் பேரம் பேசுறது இல்ல. சும்மா , அலட்ச்சியமா கைல இருக்கிற மொபைல் APP USE   பண்ணி  டாக்ஸி புக் பண்றங்க. அதே தோரணையில் ராஜுவும் தன் மொபைல் எடுத்து கால் டாக்ஸி அழைக்க ஒரு மணி நேரம் முன்னதாகவே   தொடங்கினான் ...தொடங்கினான்...தொடங்கினான்...!! ராஜுவுக்கு வயசாகிவிட்ட காரணத்தினாலே கண்ணு வேற சாளேஸ்வரம்.!!! ஒரு கைல மொபைல், இன்னொரு கை விரலால லொட்டு லொட்டுன்னு ட்ராப் அட்ரஸ் அடிக்கிறதுக்கே 10 நிமிஷம் . அதையும் தப்பு தப்பா அடிக்க,
 அந்த GPS  APP   , அட்ரஸ் தேடறேன்  பேர் வழின்னு சுத்த ஆரம்பிக்க, வீட்க்குள் இருந்து, ஹை command என்னங்க முகூ ர்த்தம் முடிஞ்சிடும் போல இருக்கே, நீங்க டாக்ஸி புக் பண்றதுக்குள்ளேன்னு ஒரு குரல் விட்டாங்க. உடனே, ஆமா  நீ இன்னும் ரெடி ஆகவே இலையே, உன் சீ(மந்த !) புத்திரனை கூப்பிடு கொஞ்சம், அவன் தான் மொபைல் கிங் னு சொல்வதற்குள் அந்த வடு மாங்காய் ராஜுவின் கையிலிருந்த மொபைல் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவன்  கைக்கு மாற்றினான். ஒரு 5 செகண்ட் தான்  ஆகி இருக்கும், அந்த பையன் மொபைல்ல, அவனுடைய புத்திசாலி அப்பா அடித்திருக்கிற ட்ராப் அட்ரெஸ்ஸை பார்த்து பயங்கரமா சிரித்துக்கொண்டே அம்மா, இந்த அப்பா எப்பிடி TYPE   பண்ணி இருக்காரு பாருங்கன்னு ஊரெல்லாம் கேக்கும்படி கத்திகொண்டே ஓடினான். வெங்கட்ராமன் ஸ்ட்ரீட் TYPE  பண்றதுக்கு பதிலா வெட்கம் கெட்ட ராமன் ஸ்ட்ரீட்  ன்னு போட்ருக்காருனு சொல்ல, அவ்வளவுதா, அம்மா முகத்தில ஒரு நக்கல், நய்யாண்டி தோரணை..உங்க அப்பா, எதை தா ஒழுங்கா செஞ்சிருக்காருனு ஒரு  இலவச performance certificate  கிடைக்க பெற்றான். மீதிருந்த 40 வினாடியில், டாக்ஸி confirm  ஆகியது.

டாக்ஸியில் முன் சீட்டில் பையனும், பின் சீட்டில் இருவருமாக உக்கார்ந்தார்கள். சார், எந்த ரூட் ல சார் போகணும்ன் னு கேக்க, ராஜு கொஞ்சம் நக்கலாக, சீக்கிரம் போனாக டிபன் சாப்பிடுவோம்,லேட்டா  போனாக்க முகூர்த்த சாப்பாடு அப்பிடின்னு சொன்னான். டிரைவர் முகம் ஒரு மாதிரியா போனது. டிரைவர் பெயரை சொல்லி, AC கொஞ்சம் போடுங்க, ரொம்ப சூட இருக்கு காலையிலேயேன்னு சொல்ல, அதற்க்கு டிரைவர் , சார், AC full ah தான் சார் வெச்சுருக்கேன், அவ்வளவுதா சார் வரும், நீங்க வேணும்ன ட்ரிப் கேன்சல் பண்ணிக்கலாம் சார்னு சொல்லி அவன் வஞ்சம் தீர்த்து கொண்டு ஸ்பீட் யை குறைத்தான் . இது என்னடா புது திருப்பமாக இருக்கே, முகூ ர்த்தம் நேரம் நெருங்குதே அப்பிடின்னு. பக்கத்தில wife பக்கம் திரும்ப, அவங்க வேற பக்கம் திரும்பினாங்க. இப்பிடி எங்களை நடு தெருவில விட்டா  நாங்க எப்பிடி போறது, என்ன இப்பிடி சொல்றீங்க னு கேக்கவே, சார், நான் உள்ளதை தான் சொன்னேன்,எனக்கும் தான் சவாரி போகுது அப்பிடின்னான். சரி, எப்பிடியோ சீக்கிரம் கொண்டு விட்டாக்க  சரி . சார், கேஷ் payment ah  இல்ல கார்டா  சார். ராஜுவிற்கு ஒரே எரிச்சல் ..ஏன் கேக்குறீங்க..? இல்ல சார், CASH  ன்னா வண்டிக்கு டீசல் போடணும்..அதான்  கேட்டேன்..நீங்க தா முதல்  சவாரி ..ராஜுவின் கையில், மொய் காசு மட்டுமே இருந்தது. மீண்டும் ரைட் சைடு பார்த்தான்.  உடனே handbag வாயை  திறந்தது. காசு பரிவர்த்தனை சீக்கிரம் நடந்தது. ராஜு மீண்டும் பெரு மூச்சு விட்டான்.

கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள்  . டாக்ஸி கட்டணம் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கை  விட்டு போனது. டிரைவரிடம் சில்லறை இல்லாத காரணத்தினால். கல்யாண வரவேற்பு குழுவில் அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒன்று வரவேற்ப்புக்குழு அனைவரும் marriage காண்ட்ராக்ட் யுவதிகள். வாயில் செயற்கை சிரிப்பு, கூடவே, ஏண்டி, இன்னிக்கி payment கொடுப்பங்களான்னு? சக தோழியிடம் கேட்டுகிட்டே கும்பிடு போட்டாங்க. ரெண்டாவது காரணம், கலயாணத்திற்கு அழைத்தவர்கள் ஏதோ தூரத்து உறவோ இல்ல friend!! அதனால் என்ன, ராஜு வாட்ச் பார்த்தான். டிபன் சாப்பிடும் நேரம் முடிவடையும் நேரம் நெருங்கியது. ஆனால்  லஞ்ச்க்கு இன்னும் நெறய நேரம் இருந்தது. ரெண்டும் கேட்டான் நேரம்.. நன்றி டாக்ஸி நண்பர்,!!


ராஜுவின் மனைவி, வாங்க சீக்கிரம், டிபன் கடை முடிய போகுது, அப்பிடியே சாப்பிட்டுவிட்டு மணமக்களை வாழ்த்தி அப்புறமாக மொய்  எழுதலாம்னு சொல்ல, அதற்க்கு ராஜு, டிபன்  ஓவர் போல, நம்ப லஞ்ச் க்கு  போகலாம் னு சொல்லி அவங்களை முன்னே தள்ளினான். அதற்கு, இந்த லஞ்ச் மெனு ரொம்ப bore  ங்க. ஸ்டாண்டர்ட் மெனு தான் போடுவாங்க. சாம்பார், ரசம், அவியல், பருப்பு உசிலி, புளி  சாதம் அப்புறம் ஒரு பாயசம் தான் இருக்கும் அப்பிடின்னு மெனு லிஸ்ட் கொடுத்தாங்க. டிபன்ல மசால் தோசை, இடியாப்பம், பாதாம் ஸ்வீட், பூரி தவிர இட்லி, வடை பொங்கல் எல்லாம் இருந்துச்சாம் 10 மணி வரை. நீங்க தான்  அவசரபட்டிட்டீங்கன்னு பொலம்பினாங்க. கூட  வந்த பையனுக்கு, இவங்க சண்டையில தனக்கு எதுவுமே கிடைக்காது போல   இருக்கே னு மூஞ்சி வாடியது. இடையில் மீண்டும் அந்த கேட்டரிங் அழகிகள் வந்து ஒரு கலர் சர்பத் கொடுக்க, சக குடும்பத்தினர் எல்லோரும் பசியின் கொடுமையால் அதை  என்னனு கூட பார்க்காம வாங்கி மட மட என்று குடித்தனர் . ஒரு மாதிரி முகூர்த்தம் முடிய ராஜு தம்பதியினர் மணமக்களை வாழ்த்தி மொய் எழுதி அப்பிடியே மறக்காமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும் கொண்டாங்க. இப்போ அடுத்த கட்டம். சிறு குடல் பெருங்குடலை விழுங்கியது.

அவ்வளவுதான் ..அடுத்த 5 நிமிஷத்தில அனைவரும் டைனிங் ஹால்ல நோக்கி படை எடுத்தனர். அங்கே போனால்  ஒரு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. ஏற்கெனவே ஒரு பந்தி நடநதுகொண்டிருக்க அவரக்ளின் பின்னாடி அடுத்த பந்தி ஆட்கள்  HARI NIVAS HOTELa TOKEN TABLE la வெச்சிட்டு  நிக்குற மாதிரி   விவரமா நின்றுகொண்டிருந்தார்கள். இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத situation ராஜுவும் அவன் மனைவியும் குழம்பி கொண்டிருக்க, அவங்களோட பையன் சடார்என்று கூட்டத்தை தள்ளி கொண்டு முந்தினான். அப்பா, அம்மா இங்க வாங்கன்னு எதிர் வரிசையிலிருந்து கூவினான். பையன் ரொம்ப சாமர்தியமா தான் ஒரு chair லேயும், மீதம் ரெண்டு chairகளை  தன இடது மற்றும் வலது கைகளால் பிடித்து கொண்டிருந்தான், பெற்றோர்களுக்கு பெருத்த நிம்மதியும் கூடவே பிள்ளையின் சாமர்த்தியத்தை கண்டு ரொம்ப சந்தோசம். டாக்ஸி செலவு செய்துட்டு வந்த காரியம் நிறைவேற போகுதுனு அப்படி, ஒரு நிம்மதியுடன் பந்தியில் மும்முரமாக இறங்கினார்கள். என்ன, ஆச்சர்யம்,  ஒவ்வொரு ஐட்டமாக பரிமாற, அவன் மனைவி சொன்ன மாதிரியே அத்தனை ஐட்டம்களும் வந்தது. முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும், பசியின் கொடுமையினால் அத்தனை ஐட்டம்களும் அவர்களுக்கு தேவாம்ருதமாய் இருந்தது. பையன் கொஞ்சம் அடக்கி தான் வாசித்தான். ஏண்டா கம்மியா சாப்பிடுறன்னு கேட்டதுக்கு, அதோ அங்க இருக்கு பாருங்க, டெஸெர்ட் CORNER  ..அதுக்கு தா.. RESERVATION  அப்பிடின்னு சொல்லவே ராஜுவிற்கு..அடடா இது தெரியாம போச்சே..நம்ப கூட கொஞ்சம் கம்மியா வாசித்திருக்கலாம்னு நினைச்சன்.

ANYWAYS , அந்த குறையும் இல்லாம, மொய் எழுதின அமௌண்ட்க்கு மேலாகவே சாப்பிட்டு சந்தோஷமா, வெற்றிலை பாக்கு தேங்காய் பையுடன் வெளியே வந்து, மீண்டும் டாக்ஸி புக் பண்ணுவதில்  முனைந்தான்.

எண்ணம், எழுத்து  - ரவிசங்கர்

***********************************************************************************