Monday, October 8, 2018

கருப்பு கண்ணாடி


                                                           கருப்பு கண்ணாடி

 நீங்கள் மேற்கொண்டு படிக்கப்போவது இதுவரை நீங்கள் படித்து வந்த ஹாஸ்ய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தை கொண்ட ஒரு வித்யாசமான கதை. தொடருங்கள் திறந்த மனதுடன்....!!

 ராஜுவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட நண்பர்கள் உண்டு. எல்லோரிடமும் அவர்கள் வயதிற்கு ஏற்றவாறு பழகும் குணம் உடையவன். அப்பிடிப்பட்ட இளைஞர்  நண்பர்களில் வித்யாசமான துடிப்புள்ள  நண்பன் உமேஷ். இவனுக்கும் ராஜுவிற்கும் குறைந்த  பட்சம் 40 வயசு  வித்தியாசம் இருக்கும். இவர்கள் நட்பு அறிமுகம் ஆனதே ரொம்ப சுவாரசியம். இவர்கள் ஒரு பிசினஸ் மீட்டிங்கில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது, உமேஷ் ஒரு enterprising கேரக்டர். மீட்டிங்கில் ராஜுவும்  அவன்  பக்கத்தில் அமர்ந்து இருந்த உமேஷ்சும் மாறி மாறி கேள்விகளை
கேட்டவாறு  இருந்தனர். இருவரின்  thinkingஉம்  ஒரே மாதிரி இருக்கவே இருவரும், தங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்களுடைய மொபைல் நம்பர்யை exchange  செய்துகொண்டு விடை பெற்றுக்கொண்டனர். உமேஷ் போகும் போது ராஜூவை பார்த்து, "சார்.. உங்களோட பிசினஸ் approach மிகவும் practical ஆக இருக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்' என்று சொல்லி, அடுத்து எப்போது, எங்கே மீட் பண்ணலாம் என்ற விவகாரத்தை உற்சாகத்துடன் சொல்லி முடித்து விடை பெற்றான.

சொல்லியபடியே அவர்கள் இருவரும் காபி ஷாப்பில் மீட் பண்ணினார்கள். நெறய விஷயங்களை உமேஷ் .பகிர்ந்துகொண்டான். இவர்களுடைய நட்பு அடிக்கடி மீட் பண்ணும் படி நேர்ந்தது. உமேஷுக்கு  ராஜு மீது ஒரு அபிமானம் உண்டாக்கியது. ராஜூவை தன் friend , philosopher அண்ட் guide போன்று பாவித்தான். தன் பேமிலி மற்றும் தன் சொந்த விஷயங்களை பற்றி ராஜுவிடம் பகிர்ந்துகொண்டான். ராஜுவும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் கேட்டு கொண்டான். உமேஷ் ஒரு சிறந்த multi -talented இளைஞன். பரதநாட்டிய கலைஞன். அதை தவிர மற்ற விஷயத்திலும் ரொம்பவும் ஸ்மார்ட் ஆக  இருந்தான். அவனுக்கு போட்டோகிராபி கை வந்த கலை . மேலும் அவன் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜித்தன். இது போறாதுன்னு கிட்டார் வேற கற்று கொண்டு வருகிறான். நல்ல துடிப்பான எல்லோரிடமும் சகஜமாக நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசும் குணம் உடையவன். உமேஷுக்கு  சீனியர் சிடிஸன்ஸ்  என்றல் ரொம்ப பிடிக்கும். இது ரொம்ப வியப்பான விஷயம். நோ டவுட் உமேஷுக்கு , ராஜூவை பிடித்தது.
.

ஒரு சமயத்தில் உமேஷை அவன் பெற்றோர்கள்  கல்யாணம் பண்ணிக்கொள்ள complel பண்ணுகிறார்கள் என்று சொன்னான். . ஏனென்றால்  அவன் சென்னையில் ஒரு MNC கம்பெனியில்  நல்ல வேலையில் இருந்தான். வயது 26. இந்த கட்டத்தில் உமேஷ்  தனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என சொல்லவே, ராஜுவும்,  "ஆமா, இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்சம் வருஷம் போகலாம், நல்லா  சம்பாதித்து, உன் டான்ஸ் திறமையை வெளிப்படுத்து, வெளி நாட்டு அசைன்மெண்ட் வந்தால் நல்ல experience கிடைக்கும், நல்லா காசு சேர்க்கலாம் " அப்பிடின்னு அட்வைஸ் பண்ணினான். ஆமா, அது தான் என்  பிளான், ஆனால் ..என்று ஒரு இழு இழுத்தான் .இந்த தருணத்தில் உமேஷ்  ஒரு ரகசியமான அதிர்ச்சியான உண்மையை  ராஜுவிடம் சொன்னான். அதை கேட்ட ராஜுவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஆனால்  சுதாரித்துக்கொண்டு மேலும் விவரமாக கேட்டுக்கொண்டான். தனக்கு ஏன் கல்யாணத்தில் நாட்டம் இல்லை என்ற காரணத்திற்கு அவன் சொன்ன பதில் ராஜுவிற்கு இப்பொது புரிந்தது. உமேஷ் தான் ஒரு GAY எனவும், தனக்கு பெண்களிடம் கவர்ச்சி இல்லை  எனவும், தன்னால் ஒரு பெண்ணின் life கெட கூடாது என்பதற்காகவும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என கூறினான். ராஜுவிற்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் மறு பக்கம் உமேஷ் எவ்வளவு தெளிவாக பேசுகிறான் என்கிற உண்மையும் புரிந்தது. ராஜூவினால் உடனே ரெஸ்பாண்ட் பண்ண முடியவில்லை. ராஜுவின் வாழ்கை பயணத்தில் இந்த மாதிரி மக்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறான், நெறய படித்தும் இருக்கிறான். ஆனால் இதுவே முதல் தடவை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு. ராஜுவிற்கு உள்ளுர ஒரு பயம் கலந்த சந்தேகம். என்னாக்க, தன்னிடம் அபிமானம் மற்றும் கிளோஸ் ஆக இதற்கு தான் பழகுகிறானோ? ஏற்கனவே உமேஷுக்கு  சீனியர்ஸ் கண்டால் ரொம்ப பிடிக்கும். என்னடா இது புது திருப்பமாக இருக்கேன்னு யோசனை பண்ணி கொண்டிருக்கும்போது, உமேஷ், சார் நீங்க ஒண்ணும்  worry பண்ணிக்காதீங்க, நீங்க என்  அப்பா மாதிரி அப்பிடின்னு சொல்லவே, ராஜு மனசுக்குள் நிம்மதி பெரு மூச்சு விட்டான். உமேஷ், ராஜுவிடம், "நீங்க தான் சார், எப்பிடியாவது  என் parents  கிட்ட சொல்லி புரியவைக்கணும், நான் கல்யாணத்துக்கு லாயக்கு இல்லை" அப்பிடின்னு ரொம்ப கெஞ்சினான். ராஜுவும் அவனுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லணுமே என்கிற முறையில், 'இப்போது, அத பத்தி ஒன்னும் worry பண்ணிக்காதே, சமயம் வரும்  போது பார்த்துக்கலாம், இப்போதைக்கு  ஏதாவது ஸ்டராங் காரணம் சொல்லி கொஞ்சம் வருஷம் வாய்தா வாங்கிக்கோ..யோசிப்போம், எப்பிடி solve  பண்ணலாமுன்னு " அப்பிடினு சொல்லி ராஜுவும்  வாய்தா வாங்கிக்கொண்டான். உமேஷினின் பெற்றோர்கள் ரொம்பவும் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் . அவர்களுக்கு ஒரு மகன் உமேஷும், மகள் ரசிகாவும் உள்ளனர். ரசிகாவிற்கு கல்யாணம் ஆகி, தன் கணவருடன் வெளி  நாட்டில் இருக்கிறாள் . உமேஷ் ஒரே பையன் என்பதினால் அவன் மேல் மிகவும் பாசமாக இருப்பதில்  ஆச்சர்யம் இல்லை..
அவனை மேல் படிப்பிற்காக கூட வெளி நாடு செல்ல அரை மனதுடன் சம்மதித்தார்கள். உமேஷுக்கும் ரசிகாவிற்கும் ஒரு நல்ல understanding இருந்தது, ரசிகாவும் கர்நாடக சங்கீதத்தில் தனியாக கச்சேரி செய்யும் அளவிற்கு ரொம்பவும் தேர்ச்சி பெற்று இருந்தாள்.  இப்பேற்பட்ட சூழ்நிலையில் உமேஷ் ரொம்பவும் குழம்பி கிடந்தான். உடனடியாக ஏதாவது action எடுத்தால் தான் பெற்றோரின் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என ராஜூவை, மீண்டும் "ஏதாவது solution சொல்லுங்க சார்"னு பிடுங்கி எடுத்தான். உடனே, ராஜுவின் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. உமேஷிடம், இந்த பிரச்சினை அவ்வளவு சீக்கிரம் தீராது, so உடனே உன் ஆபீஸ்ல பெங்களூரு transfer  கேட்டு வாங்கிக்கொண்டு போகமுடியுமா  என்று கேட்கவே, உமேஷும் அதன் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டான். இருவருக்கும் கொஞ்சம் பாரம் குறைந்தமாதிரி இருந்தது. உமேஷ் கொஞ்சம் வருத்தத்துடன் , "சார், உங்களை பார்க்க முடியாதே சார்னு..?" கேட்கவே, ராஜு, "பெங்களூரு பக்கம் தானே, நீ எப்போவேணடுமானாலும் வரலாமே" என்று சொல்லி பிரச்சினைக்கு ஒரு temperory முற்று புள்ளி வைத்தான்.

உமேஷும் பெற்றோரிடம் ஏதோ காரணம் சொல்லி, தனக்கு பெங்களூரு transfer ஆகிவிட்டதாகவும் உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லி, ரெண்டு நாட்களில் பெங்களூரு போய்  சேர்ந்தான். இரண்டு மாதம் பறந்து போனது. ஒரு நாள் போனில் ராஜூவை கூப்பிட்டு, தனக்கு ஒரு நல்ல சீனியர் நண்பர் கிடைத்து விட்டதாகவும், அவருடன் சந்தோசமாக இருப்பதாகவும் சொல்லி நிறுத்தாமல், அவங்க ரெண்டு பேரும் gay பார்ட்னர்ஸ் ஆகி விட்டதாகவும், we  are into  relationship,  living together nu ஒரு மிகவும் serious ஆன  விஷயத்தை அலட்சியமாக சொன்னான். அதோடு நில்லாமல் ரசிகாவிடமும் ஜாடை மாடையாக இதை பற்றி சொன்னதாகவும் ஏனென்றால் அவள் வெளி நாட்டில் இருப்பதனால், இந்த மாதிரி லைப் ஸ்டைல் ஏற்று கொள்வாள்  என்றும் சொன்னான். இவன் என்ன இப்பிடி விதியாசமான பாஸ்ட் ட்ராக்கில் போகிறானே என்று  ராஜு ஆச்சரியத்தில் மூழ்கினான். இதெல்லாம் நடக்கிற விஷயமா என்று ராஜு தனக்குள் கேட்டு கொண்டிருந்தான். இது வெளி நாட்டு கலாச்சாரம் ஆச்சே, எப்பிடி நமக்கு ஒத்து வரும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. இந்தியாவில் இந்த மாதிரி நிறைய GAYS இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக ஒரே வயது குரூப் நண்பர்களுடன்தான்  relationship  வைத்துக்கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறான் . ராஜுவிற்கு, உமேஷின் இந்த வாழ்க்கை முறையை அவனுடைய parents எப்பிடி ஏற்று கொள்வார்கள் என்றெல்லாம் யோசித்தான். இவர்களின் வாழ்க்கையை எப்பிடி அமைய போகுதுனு ரொம்ப கவலை  பட்டான் . ஏனென்றால் ராஜுவின் மனதிற்கு உமேஷ் எடுத்த முடிவு சரி என பட்டது. அவரவர் வாழ்க்கையை வேறு யாரும் முடிவு செய்ய கூடாதுயென நினைத்தான். இதில் பெற்றோரின் intervention கண்டிப்பாக இருக்க கூடாது என்பது ராஜுவின் உறுதியான எண்ணம். அவர்களுக்கு புரிய வைக்க  வேண்டியது மிகவும் அவசியம். இந்த சிக்கலான மற்றும் சென்சிடிவ் மேட்டர். பெற்றோர்கள் யதார்த்தமாகவும், பிள்ளைகளின் நன்மைக்காகவும் புரிந்து கொண்டு சப்போர்ட் செய்ய வேண்டும். பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மாதிரி அணுகுமுறைகள் இல்லாததால் நிறைய பேர்கள் வாழ்கை ரொம்பவும் பாழானது . இட் ஐஸ் நாட் தட் easily said அண்ட் done. இந்த முடிவில்  எல்லோருடைய வாழ்கை முறையும் அதை சுற்றி உள்ள பிரச்சினைகளும் அடங்கும். இதை எல்லாவற்றையும் விட, ஒருவரின் மன  நிம்மதியும் வாழ்க்கையின அர்த்தமும் அடங்கி உள்ளது. இப்பிடி இருக்கையில், மீண்டும் உமேஷிடம் இருந்த்து ஒரு திரில்லர் படத்தில் வருவது  போல போன் வந்தது. நாளை நைட் தன் அக்கா ரசிகா சென்னை வருவதாகவும், அவளை வரவேற்க்க  தானும் சென்னை வருவதாகவும் சொன்னான்.  உமேஷ் சென்னை வர இன்னொரு முக்கிய காரணம் ரசிகா மூலம் தன் கல்யாண பிரச்சினைக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் குஷியாக இருந்தான். "ஆஹா, ரொம்ப சந்தோசம் வா, உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றான் ராஜு.

மறுநாள் உமேஷ் நேராக ஏர்போர்ட்க்கே வந்துவிட்டான். அங்கே தான் அவனுடைய பெற்றோர்களையும் மீட் பண்ணும் படி ஆகிற்று. flight குறித்த நேரத்திற்கு வரவே உமேஷ் தன் அன்பு அக்காவை சந்திக்க ரொம்பவும் ஆவலாக  இருந்தான். ரசிகாவும் ரொம்பவும் தாமதம் இல்லாமல் trolly தள்ளி கொண்டுவரவே வேகமாக சென்று அக்காவை வரவேற்க சென்றான். வழக்கமாக அன்பு தம்பியை கண்டவுடன் அணைக்கும் அக்கா, இந்த தடவை ஹாய் மட்டுமே சொல்லி பெற்றோரின் பக்கம் நகர்ந்தாள் / உமேஷுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஓகே, மரியாதைக்காக அப்பா அம்மாவை முதலில் பார்க்கவேண்டும் என்ற ஆவலாக கூட இருக்கலாம்னு நினைத்து அக்கா பின்னாடி ஓடி போனான் . அக்கா அவனை  பார்த்து "டாக்ஸி , புக் பண்ணி  கொண்டு வரையா" என்று சொல்ல, உமேஷும் உடனே விரைந்தான் டாக்ஸி கவுண்டர் நோக்கி. ஒரு 10 நிமிடம் ஆகும் டாக்ஸி கிடைக்க என்று கவுண்ட்டரில்  சொல்லவே, சரி, அக்காவிடம் டாக்ஸி வரும் வரை பேசலாம் என்று அவர்களை நோக்கி வரும் நேரத்தில், உமேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அசம்பாவித நிகழ்ச்சி நடந்தது. உமேஷின் அப்பா அவன்  கிட்ட வேகமாக வந்து, மிகவும் கோபமாக கண் இமைக்கும் நேரத்தில் உமேஷின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, ஆவேசத்துடன், "இனி என் முகத்தில விழிக்காதே, உன்னை பெற்றதுக்கு எங்களுக்கு இதுவும் வேணும் ,, இன்னமும் வேணும், நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு நினைக்கவே இல்ல  " என்று கன்னா  பின்னாவென்று ஏச ஆரம்பித்தார்." நீ எங்களுடன் வர வேண்டாம், இப்பிடியே போய்  விடு" என்று சொன்னார். உமேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவமானத்தால் ரொம்ப கூனி குறுகி போனான். அவன் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரசிகாவும் ஒன்றும் பேசவில்லை மாறாக அவளும் கோவமாக இருந்தாள். இதெல்லாம் ஏர்போர்ட்டில் டாக்ஸி வரும் நேரத்திற்குள் நடந்தன. உமேஷுக்கு உடனே புரிந்தது அப்பாவின் இந்த கோவத்திற்கு யார் காரணம் என்று. அக்காவின் வில்லி  குணம் தான் என புரிந்து கொண்டான். யாரு தனக்கு உறு துணையாக இருப்பாங்க என்று நினைத்தானோ, அவளே அவன் நெஞ்சில் வேலை பாய்ச்சினாள். நம்பிக்கை துரோகம் !!. பாவம், உமேஷ் மனது ஒடிந்து, அழுகையை அடக்கி கொண்டு வீட்டில் போய் விவரமாக பேசிக்கொள்ளலாம் என்று பேசாமலே அவர்களுடன் சென்றான்.

வீட்டில் luggage கொண்டு வைத்தவுடன், அவன் அப்பா மீண்டும் ஆவேசமாக, " நீ ஏன் பிள்ளை இல்லை, உனக்கு தலை மூழ்கியாச்சு, நீ எனக்கு கொள்ளி போடக்கூடாது, உன் ரூமை காலி பண்ணிக்கொண்டு போ" என்று சொல்லவே, உமேஷுக்கு இதற்கு மேல் அங்கு  இருக்க கொஞ்சம் கூட பிடிக்காமல் கண்கள் கலக்கத்துடன், தன் bag மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். உடனே உமேஷ் அருகில்  உள்ள bar கு சென்று சினிமா ஹீரோக்கள் மாதிரி குடிக்க ஆரம்பித்தான். அங்கிருந்து, ராஜூ விற்கு போன் பண்ணி உடனே வரும்படி அழைத்தான். ராஜுவும், ஆஹா பையன் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து விட்டான்,   அவன் பெற்றோர்களை  கன்வின்ஸ் பண்ணிட்டான்  போலன்னு ஆவலுடன் barக்கு விரைந்தான். அங்கு உமேஷை கண்டதும் தூக்கி வாரி போட்டது. எல்லா விஷயமும் ஒரு மாதிரி யூகிக்க முடிந்தது. சரி, மேட்டர் failure ஆகிட்டுது என புரிந்தது. உமேஷ் ராஜுவிடம் நடந்தவைகளை ஒன்று விடாமல் அழுது கொண்டே சொல்லி தீர்த்தான். ராஜூ வின் மனம் ரொம்பவும் கஷ்ட பட்டது. ஐயோ, பாவம்  உமேஷ், மிகவும் நொந்து போயிருந்தான். ராஜு அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டி, குடிப்பதை நிறுத்தி, முதலில் ஊருக்கு போகுமாறு வலியுறுத்தினான். "காலம் தான் பதில் சொல்லணும். உடம்பை பார்த்து கொள்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இது நடந்து ஒரு 3 மாதம் இருக்கும். ராஜுவின் போன் அலறியது. உமேஷ் தான் வேறு யாராக இருக்க முடியும் இந்த அர்த்த ராத்திரி வேளையில். என்ன சமாச்சாரம் என்று கேட்பதற்கு முன்னதாகவே, உமேஷ் முந்திக்கொண்டான்.
"சார், நாளைக்கு நான் Amesterdam போகிறேன், எல்லாம் லாஸ்ட் மினிட் decision " என்றான். ராஜுவும், " சந்தோஷமாக போய்ட்டு வா. நல்லா  வேலை எல்லாம் கற்றுக்கொள்" என்றான். அதற்கு , அவன், "சார், நீங்க வேற,  என்  பார்ட்னர்க்கு அமெஸ்டெர்டாம்க்கு போன இடத்தில, அசிஸிடெண்ட் ஆகிடுத்து, அதுக்கு ஹெல்ப்புக்கு போறேன், அவருதான் எல்லா செலவும் ஏத்துக்கிறாரு" ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டான். ராஜு வாய் அடைத்து போனான்." நிஜமாவா சொல்றே?, அவரு எப்பிடி உனக்காக...? இவ்வளவு ...? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே, அதே சமயத்தில ரொம்ப பெருமையாகவும் இருக்கு, உங்க relationship நினைத்தால் "ன்னு சொன்னான். அதான் சார், gay  relationship னு ஒரு புது மீனிங் கொடுத்தான். ராஜு, "anyways , டேக் கேர் of yourself அண்ட் your partner , குட் luck , enjoy யுவர் stay "யென்று wish  பண்ணி, தூக்கம் இல்லாமல் ஆச்சர்யத்தில் புரண்டான்.

உமேஷ்  அடிக்கடி  அமெஸ்டெர்டாம் இல் நடந்த சுவையான அனுபவங்களையும், அங்கு எவ்வளவு பிரீ யாக மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்த வேலை மற்றும் லைப் ஸ்டைல் எல்லாம் ஒரு தடங்கலும் இல்லாமல் இருக்கிறதாக வாட்சப்பில் சொன்னான். அவனுக்கு அந்த ஊரு ரொம்ப பிடித்துப்போயிற்று. நாளை இந்தியா வருவதாக கூறினான். பாருங்கள் அவன் வந்து இறங்கிய நாள், இந்தியா வரலாற்றில்  மிகவும் முக்கியமான தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில்  தீர்மானம் ஆகியது. அமாம் !!.., உமேஷ் போன்ற பல கோடி gay சார்பினர்களுக்காகவே தீர்மானிக்க பட்டது.   Articlle 377, gay relationship  அங்கீகரிக்கப்பட்ட செய்தி வெளியாகியது. இந்த சந்தோஷமான செய்தியை  ஏர்போர்ட்டிலேயே உமேஷ்  கேள்விப்பட்டான். உமேஷுக்கு தலை கால் புரியவில்லை. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த ராஜூவை மனதார அணைத்து கொண்டான். ராஜுவும் அவனை வாழ்த்தினான். இனி உமேஷ்  ஒரு குற்றவாளி இல்லை. கால போக்கில் அவன் பெற்றோர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினான். ராஜுவும் அதை ஆமோதித்தான். உமேஷுடன் வந்த அவனுடைய பார்ட்னரை ராஜுவிற்கு அறிமுகம் செய்துவைத்து பின் அவரை அணைத்தபடியே இருவரும் கையை  கோர்த்து கொண்டு  தைரியமாக அவர்கள் வீட்டுக்கு இனிய முகத்துடன் ஏர்போர்ட் விட்டு வெளியேறினார்கள்.

ராஜுவின் மனம் நடந்தவற்றை அசை போட்டது. ஒரு சினிமா போல இருந்தது.  ஆனால் நடந்ததும் நடப்பதும் உண்மை. இது காலத்தின் கோலம். உமேஷ் மாதிரி கோடி கோடியான மக்கள் இந்த பிரச்சினைலருந்து விடு பட முடியாமல்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்கள் தேர்ந்து எடுத்த வாழ்கை இல்லை. பிறப்பின் அடையாளம்.
தனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியாமலும், வெளியே சொல்ல முடியாமலும், உள்ளுக்குள் வேதனை பட்டு, மனம் நொந்து வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.  கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு பார்த்தால் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும். இவர்களை வேறுபடுத்த  தேவை இல்ல. சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பெற்றோர்கள் அன்பும் ஆதரவு மற்றும் புரிதலும் தேவை. பல புகழ் வாய்ந்தவர்கள் gay என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

இது ராஜுவின் சொந்த அபிப்பிராயம்.

                                              - எண்ணம், எழுத்து :- ரவி சங்கர்
*********************************************************************************




















No comments:

Post a Comment