Thursday, July 18, 2019

முண்டியடி முகூர்த்தம் !!!

                               

                                                     முண்டியடி முகூர்த்தம் !!!!

அமாம் , மீண்டும் ராஜூவே தான்.. ராஜுவின் வாழ்க்கை ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி சும்மா அலுங்காம தளும்பாம சூப்பர்ah போய்  கொண்டிருந்தது. வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், வாக்கிங்..அப்போப்போ வெளியில போஜனம் வேற. யாராவது பேச்சுக்கு கூட வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாலோ இல்ல சும்மா ஏதாச்சும் கல்யாண நோட்டீஸ் வந்தாலே போதும் குடும்ப சகிதமா  கெளம்பிடுவாங்க. இந்த கதையின் சாராம்சமே , ராஜுவும் அவன் பாமிலியும் ஒரு தூரத்து சொந்தக்காரங்க வீட்டு
கல்யாணத்துக்கு போயிடு வந்த புராணம் தான்.

அப்பிடி ஒண்ணும் எல்லாமே பிரீ இல்ல. ஏனென்றால் , இந்த ப்ராஜெக்ட் ல CALLTAXI  மற்றும்  SURGE  சார்ஜ் அடங்கவில்லை . இந்த கட்டத்தில் கால் டாக்ஸியை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இப்போ எல்லாம் யாரும் வயத்தை குலுக்குற ஆட்டோவில, driver கிட்ட  பட்ட பகல்ல நட்ட நடு பாஜார்ல யாரும் பேரம் பேசுறது இல்ல. சும்மா , அலட்ச்சியமா கைல இருக்கிற மொபைல் APP USE   பண்ணி  டாக்ஸி புக் பண்றங்க. அதே தோரணையில் ராஜுவும் தன் மொபைல் எடுத்து கால் டாக்ஸி அழைக்க ஒரு மணி நேரம் முன்னதாகவே   தொடங்கினான் ...தொடங்கினான்...தொடங்கினான்...!! ராஜுவுக்கு வயசாகிவிட்ட காரணத்தினாலே கண்ணு வேற சாளேஸ்வரம்.!!! ஒரு கைல மொபைல், இன்னொரு கை விரலால லொட்டு லொட்டுன்னு ட்ராப் அட்ரஸ் அடிக்கிறதுக்கே 10 நிமிஷம் . அதையும் தப்பு தப்பா அடிக்க,
 அந்த GPS  APP   , அட்ரஸ் தேடறேன்  பேர் வழின்னு சுத்த ஆரம்பிக்க, வீட்க்குள் இருந்து, ஹை command என்னங்க முகூ ர்த்தம் முடிஞ்சிடும் போல இருக்கே, நீங்க டாக்ஸி புக் பண்றதுக்குள்ளேன்னு ஒரு குரல் விட்டாங்க. உடனே, ஆமா  நீ இன்னும் ரெடி ஆகவே இலையே, உன் சீ(மந்த !) புத்திரனை கூப்பிடு கொஞ்சம், அவன் தான் மொபைல் கிங் னு சொல்வதற்குள் அந்த வடு மாங்காய் ராஜுவின் கையிலிருந்த மொபைல் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவன்  கைக்கு மாற்றினான். ஒரு 5 செகண்ட் தான்  ஆகி இருக்கும், அந்த பையன் மொபைல்ல, அவனுடைய புத்திசாலி அப்பா அடித்திருக்கிற ட்ராப் அட்ரெஸ்ஸை பார்த்து பயங்கரமா சிரித்துக்கொண்டே அம்மா, இந்த அப்பா எப்பிடி TYPE   பண்ணி இருக்காரு பாருங்கன்னு ஊரெல்லாம் கேக்கும்படி கத்திகொண்டே ஓடினான். வெங்கட்ராமன் ஸ்ட்ரீட் TYPE  பண்றதுக்கு பதிலா வெட்கம் கெட்ட ராமன் ஸ்ட்ரீட்  ன்னு போட்ருக்காருனு சொல்ல, அவ்வளவுதா, அம்மா முகத்தில ஒரு நக்கல், நய்யாண்டி தோரணை..உங்க அப்பா, எதை தா ஒழுங்கா செஞ்சிருக்காருனு ஒரு  இலவச performance certificate  கிடைக்க பெற்றான். மீதிருந்த 40 வினாடியில், டாக்ஸி confirm  ஆகியது.

டாக்ஸியில் முன் சீட்டில் பையனும், பின் சீட்டில் இருவருமாக உக்கார்ந்தார்கள். சார், எந்த ரூட் ல சார் போகணும்ன் னு கேக்க, ராஜு கொஞ்சம் நக்கலாக, சீக்கிரம் போனாக டிபன் சாப்பிடுவோம்,லேட்டா  போனாக்க முகூர்த்த சாப்பாடு அப்பிடின்னு சொன்னான். டிரைவர் முகம் ஒரு மாதிரியா போனது. டிரைவர் பெயரை சொல்லி, AC கொஞ்சம் போடுங்க, ரொம்ப சூட இருக்கு காலையிலேயேன்னு சொல்ல, அதற்க்கு டிரைவர் , சார், AC full ah தான் சார் வெச்சுருக்கேன், அவ்வளவுதா சார் வரும், நீங்க வேணும்ன ட்ரிப் கேன்சல் பண்ணிக்கலாம் சார்னு சொல்லி அவன் வஞ்சம் தீர்த்து கொண்டு ஸ்பீட் யை குறைத்தான் . இது என்னடா புது திருப்பமாக இருக்கே, முகூ ர்த்தம் நேரம் நெருங்குதே அப்பிடின்னு. பக்கத்தில wife பக்கம் திரும்ப, அவங்க வேற பக்கம் திரும்பினாங்க. இப்பிடி எங்களை நடு தெருவில விட்டா  நாங்க எப்பிடி போறது, என்ன இப்பிடி சொல்றீங்க னு கேக்கவே, சார், நான் உள்ளதை தான் சொன்னேன்,எனக்கும் தான் சவாரி போகுது அப்பிடின்னான். சரி, எப்பிடியோ சீக்கிரம் கொண்டு விட்டாக்க  சரி . சார், கேஷ் payment ah  இல்ல கார்டா  சார். ராஜுவிற்கு ஒரே எரிச்சல் ..ஏன் கேக்குறீங்க..? இல்ல சார், CASH  ன்னா வண்டிக்கு டீசல் போடணும்..அதான்  கேட்டேன்..நீங்க தா முதல்  சவாரி ..ராஜுவின் கையில், மொய் காசு மட்டுமே இருந்தது. மீண்டும் ரைட் சைடு பார்த்தான்.  உடனே handbag வாயை  திறந்தது. காசு பரிவர்த்தனை சீக்கிரம் நடந்தது. ராஜு மீண்டும் பெரு மூச்சு விட்டான்.

கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள்  . டாக்ஸி கட்டணம் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கை  விட்டு போனது. டிரைவரிடம் சில்லறை இல்லாத காரணத்தினால். கல்யாண வரவேற்பு குழுவில் அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒன்று வரவேற்ப்புக்குழு அனைவரும் marriage காண்ட்ராக்ட் யுவதிகள். வாயில் செயற்கை சிரிப்பு, கூடவே, ஏண்டி, இன்னிக்கி payment கொடுப்பங்களான்னு? சக தோழியிடம் கேட்டுகிட்டே கும்பிடு போட்டாங்க. ரெண்டாவது காரணம், கலயாணத்திற்கு அழைத்தவர்கள் ஏதோ தூரத்து உறவோ இல்ல friend!! அதனால் என்ன, ராஜு வாட்ச் பார்த்தான். டிபன் சாப்பிடும் நேரம் முடிவடையும் நேரம் நெருங்கியது. ஆனால்  லஞ்ச்க்கு இன்னும் நெறய நேரம் இருந்தது. ரெண்டும் கேட்டான் நேரம்.. நன்றி டாக்ஸி நண்பர்,!!


ராஜுவின் மனைவி, வாங்க சீக்கிரம், டிபன் கடை முடிய போகுது, அப்பிடியே சாப்பிட்டுவிட்டு மணமக்களை வாழ்த்தி அப்புறமாக மொய்  எழுதலாம்னு சொல்ல, அதற்க்கு ராஜு, டிபன்  ஓவர் போல, நம்ப லஞ்ச் க்கு  போகலாம் னு சொல்லி அவங்களை முன்னே தள்ளினான். அதற்கு, இந்த லஞ்ச் மெனு ரொம்ப bore  ங்க. ஸ்டாண்டர்ட் மெனு தான் போடுவாங்க. சாம்பார், ரசம், அவியல், பருப்பு உசிலி, புளி  சாதம் அப்புறம் ஒரு பாயசம் தான் இருக்கும் அப்பிடின்னு மெனு லிஸ்ட் கொடுத்தாங்க. டிபன்ல மசால் தோசை, இடியாப்பம், பாதாம் ஸ்வீட், பூரி தவிர இட்லி, வடை பொங்கல் எல்லாம் இருந்துச்சாம் 10 மணி வரை. நீங்க தான்  அவசரபட்டிட்டீங்கன்னு பொலம்பினாங்க. கூட  வந்த பையனுக்கு, இவங்க சண்டையில தனக்கு எதுவுமே கிடைக்காது போல   இருக்கே னு மூஞ்சி வாடியது. இடையில் மீண்டும் அந்த கேட்டரிங் அழகிகள் வந்து ஒரு கலர் சர்பத் கொடுக்க, சக குடும்பத்தினர் எல்லோரும் பசியின் கொடுமையால் அதை  என்னனு கூட பார்க்காம வாங்கி மட மட என்று குடித்தனர் . ஒரு மாதிரி முகூர்த்தம் முடிய ராஜு தம்பதியினர் மணமக்களை வாழ்த்தி மொய் எழுதி அப்பிடியே மறக்காமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும் கொண்டாங்க. இப்போ அடுத்த கட்டம். சிறு குடல் பெருங்குடலை விழுங்கியது.

அவ்வளவுதான் ..அடுத்த 5 நிமிஷத்தில அனைவரும் டைனிங் ஹால்ல நோக்கி படை எடுத்தனர். அங்கே போனால்  ஒரு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. ஏற்கெனவே ஒரு பந்தி நடநதுகொண்டிருக்க அவரக்ளின் பின்னாடி அடுத்த பந்தி ஆட்கள்  HARI NIVAS HOTELa TOKEN TABLE la வெச்சிட்டு  நிக்குற மாதிரி   விவரமா நின்றுகொண்டிருந்தார்கள். இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத situation ராஜுவும் அவன் மனைவியும் குழம்பி கொண்டிருக்க, அவங்களோட பையன் சடார்என்று கூட்டத்தை தள்ளி கொண்டு முந்தினான். அப்பா, அம்மா இங்க வாங்கன்னு எதிர் வரிசையிலிருந்து கூவினான். பையன் ரொம்ப சாமர்தியமா தான் ஒரு chair லேயும், மீதம் ரெண்டு chairகளை  தன இடது மற்றும் வலது கைகளால் பிடித்து கொண்டிருந்தான், பெற்றோர்களுக்கு பெருத்த நிம்மதியும் கூடவே பிள்ளையின் சாமர்த்தியத்தை கண்டு ரொம்ப சந்தோசம். டாக்ஸி செலவு செய்துட்டு வந்த காரியம் நிறைவேற போகுதுனு அப்படி, ஒரு நிம்மதியுடன் பந்தியில் மும்முரமாக இறங்கினார்கள். என்ன, ஆச்சர்யம்,  ஒவ்வொரு ஐட்டமாக பரிமாற, அவன் மனைவி சொன்ன மாதிரியே அத்தனை ஐட்டம்களும் வந்தது. முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும், பசியின் கொடுமையினால் அத்தனை ஐட்டம்களும் அவர்களுக்கு தேவாம்ருதமாய் இருந்தது. பையன் கொஞ்சம் அடக்கி தான் வாசித்தான். ஏண்டா கம்மியா சாப்பிடுறன்னு கேட்டதுக்கு, அதோ அங்க இருக்கு பாருங்க, டெஸெர்ட் CORNER  ..அதுக்கு தா.. RESERVATION  அப்பிடின்னு சொல்லவே ராஜுவிற்கு..அடடா இது தெரியாம போச்சே..நம்ப கூட கொஞ்சம் கம்மியா வாசித்திருக்கலாம்னு நினைச்சன்.

ANYWAYS , அந்த குறையும் இல்லாம, மொய் எழுதின அமௌண்ட்க்கு மேலாகவே சாப்பிட்டு சந்தோஷமா, வெற்றிலை பாக்கு தேங்காய் பையுடன் வெளியே வந்து, மீண்டும் டாக்ஸி புக் பண்ணுவதில்  முனைந்தான்.

எண்ணம், எழுத்து  - ரவிசங்கர்

***********************************************************************************










No comments:

Post a Comment