Thursday, August 30, 2018

மேட்னி மோகம் !!!!!

 மேட்னி  மோகம்  !!!  

ராஜு  ரொம்ப வருஷமாக வெளி ஊர்ல  வேலை பார்த்துவந்தான். சென்னை வாசி தான், அனால்  வேலை நிமித்தம் காரணமாக ஊர் ஊராய் ட்ரான்ஸபெர்  பயணம். கடைசியா retire அன பிறகுதான் சென்னை வரும் சான்ஸ்  கிடைச்சுது. ரொம்ப ஆர்வத்தோட... அப்பாடா இனி எந்த ஊருக்கும்  போய் அலையை வேண்டாம் என சந்தோஷப்பட்டான் .  எப்போதோ வாங்கி போட்ட கிரௌண்ட்ல வீடு கட்டலாம்னு பிளான் போட்டு, வீடு முடியற வரைக்கும் வேற எங்கேயாவது வாடகைக்கு தான் போகணும். அதனால சண்டே அன்னிக்கு ஒரு ஏஜென்ட், பைக் சகிதம் காலையிலேயே  புறப்பட்டாச்சு. ராஜு விற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்ன இருந்தாலும் சென்னை சென்னை தாண்டா  அப்பிடின்னு மனசு சொல்லிச்சு. என்ன சுறு சுறுப்பான மக்கள். கொல்கத்தாவிற்கு போனால் மக்கள் ரொம்ப மச மச நிதானமா ஒரு கவலையும் இல்லாம இருப்பாங்க. பெங்களூரு போனக்க அது அதுக்கு மேல தூங்கு மூஞ்சி  ஊரு. டெல்லி சொல்லவே வேண்டாம். ஒரே  சொசைட்டி, பாலிடிக்ஸ் தான். மும்பையா ..கேட்கவே  வேண்டாம். நிக்கருத்துக்கே எடம் கிடையாது. எல்லாரும் எங்கேயோ அவசரமா காசுக்காக ஓடுவாங்க. இப்பிடியாக இருக்க, ராஜு வின் பைக் கோடம்பாக்கம் வழிய சென்று பழைய ராம் தியேட்டர் இருந்த இடத்தை தண்டி சென்றது. ஆனால் ராஜு வின் மனம் ராம் theatre யை சுற்றி சுற்றி  வந்தது.  அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்தது..அது என்ன தான் ராஜூவே சொல்றான் கேளுங்க... 

இப்போ சொல்லப்போற சுவாரசியமான நிகழ்வுகள் கிட்ட தட்ட 40 வருடங்கள் முன்னாடி இருக்கும். இந்த மறக்கமுடியாத நாட்களை பத்தி த்தான் இப்போ ராஜு பேச போறான். அந்த காலத்தில சினிமாக்கு போறது என்பது ஒரு பெரிய luxuryயோடு  இல்லாம ஒரு பெரிய ப்ரொஜெக்ட்டும் கூட. அமாம், சும்மா வீட்டுக்கு தெரியாமையோ இல்லேன்னா வேற யார் கூடயோ  அவ்வளவு ஈஸியா போகமுடியாது. பாக்கெட் மணி எல்லாம் அப்போ கிடையாது. மொத்தமா குடும்பதோட தா போவோங்க . ரொம்பவும் ஜாலியாக இருக்கும். . உதாரணத்திற்கு முக்கியமா சில  படங்களுக்கு போன சூப்பரான அனுபவங்கள்  மட்டும் இப்போ பாக்கலாம் . மத்த எல்லா சினிமாகளுக்கு போயிட் டு வந்த அனுபவம் ஏற குறைய அதே மாடல் தான்.!!  

முதல் படம் பிரபல மாஜி நடிகை கே .ஆர். விஜயாவின்  முதல் படமான கற்பகம். இந்த படத்திற்கு கட்டாயமாக போகவேண்டிய காரணம்  ஒண்ணு இருக்கு. இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜுவின் பெரிய அம்மாவின் சொந்தக் காரர். இந்த படத்தி சில காட்சிகள் தயாரிப்பாளரின் சொந்த ஊரில் படமாக்க பட்டதால் அந்த ஊரை சினிமாவில் பார்க்க வேண்டிய கண்டிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தயாரிப்பாளரின் சொந்த காரர் குடும்பம் என்பதால் எல்லோருக்கும் சேர்த்து ஒரு 6 பேருக்கு பிரீ பாஸ் கொடுக்கப்பட்டது. ராஜுவின் மொத்த மக்களுக்கும் இந்த ஆறு  பேரு பாஸ்  சரியான ரேஷன் மாதிரி. சரி..எப்பிடியோ தியேட்டருக்கு போய்  சமாளிக்கலாம் என்று பெரியம்மா சொல்ல மறுநாள் மதியம் மேட்னி காட்சி போவதாக ஏற்பாடு. இப்போ தலையாய பிரச்சினை யார் எல்லாம் சினிமாபோக போகிறார்கள் என்பது. என் பெரியம்மா கூட பிறந்த சகோதரிகள், அவர்கள் பேமிலி எல்லாம் சேர்த்தால் குறைஞ்ச பட்சம் பத்து உருபடிக்கு  மேல் தேறும். ஒரு மாதிரி குடும்பத்திற்கு ரெண்டு பசங்க  பேரு  வீதம் பிளஸ் பாட்டி , பெரியம்மா, சித்தி, ராஜுவின் அம்மா எல்லாம் சேர்த்து 8 பெரு செலெக்ட் ஆனாங்க . விட்டு போனவர்களை அடுத்த தடவை கூடி போவதாக ஒரு அட்ஜஸ்ட்மென்ட் செய்தாங்க. இந்த கும்பலில் ஒரே ஒரு சின்ன பையன் மட்டும் இருந்தான். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம்  பெரியவர்கள். அந்த சின்ன பையனுக்கு சினிமா இது தான் முதல் தடவை போல . முதலிலேயே  ஒரு கண்டிஷன். அதாவது அந்த சின்ன பையன் படம் பார்க்கும் போது அழுதால் யாராவது பசங்கதான் அவனை வெளியில் அழைத்துக்கொண்டு போகணும். இந்த  கண்டிஷன்க்கு பசங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு வேற வழி  இல்லாம ஒப்புக்கொண்டனர். காலைலேருந்தே படம் நடுவே சாப்பிட வேண்டிய ஐட்டம்  எல்லாம் பிளாட்டிக் கவர்ல  ரெடி. படம் 3.30 மணிக்கு. ஒரு மணிக்கே நொறுக்கு தீனி  bag சகிதம்  பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தாச்சு. சரியான உச்சி சென்னை வெயில், கேட்கணுமா ..செம்ம சூடு..12 or 12B நம்பர்  தான் ராம் தியேட்டர்  போக வேண்டிய பஸ். ஒரு வழியாக 2 மணிக்கே தியேட்டர் வந்தாச்சு . ஏன்னா எக்ஸ்ட்ரா  உருபிடிகளுக்கு மீதி பாஸ் வாங்கணும். பெரியம்மா தான் போய்  மேனேஜரை பார்த்து ஏற்பாடு பண்றேன்னு சொல்லி போனாங்க.  பெரியம்மா அந்த காலத்து கான்வென்ட் . இங்கிலிஷ் சும்மா வாயிலே குயின் எலிசபெத் கணக்கில வரும். அந்த மேனேஜர் கிட்ட போய்  தாட் பூட் ன்னு இங்கிலிஷ்ல பேச போய் அவன் ஒரேடியா வெல வெலத்து  போய் ஒரு டிக்கெட் எஸ்ட்ராவே கொடுத்தான். நல்ல வேளை அந்த குட்டி பயலை மடியில உட்கார வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒருவழியாக  2.45 க்கு  உள்ளே போய் உட்கார்ந்து ஆகிவிட்டது.  இந்த பாஸ்க்கு  ஏஸி  ரூம் வசதி  இருந்தது. உரக்க சினிமா பாடல்கள் பாட குஷி கிளம்பியது. அரங்கு திரை கலர் லைட் சகிதம் தூக்கியது. உடனே சின்னவன், அம்மா எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு சிணுங்க ஆரம்பித்தான். பாவம் முதல் தியேட்டர் அனுபவம் இல்லையா. மொதல்ல விளம்பர ஸ்லைடுகள், அப்புறமா பிஹாரில் வெள்ளம் நியூஸ் ரீல் முடிய 15 நிமிடம் ஆச்சு. மக்கள் பொறுமை இல்லாம விசில் அடிச்சு படத்தை போடுங்கனு ஒரே ரகளை. ஒரு வழியா படம் ஆரம்பிக்க  எல்லாரும் ஒரு மாதிரியா செட்டில் ஆகி படத்தோட ஐக்கியம் ஆகிட்டாங்க. இந்த சமயம் பார்த்து நம்ப பயல், அம்மா... பசிக்குதுனு சொல்லவே, உடனே பாட்டி கை பையில்  இருந்த முறுக்கு எல்லோருக்கும் விநியோகம் ஆனது.  படம் சுவாரஸ்யத்தில் கடிக்கவே முடியாத முறுக்கு சும்மா அல்வா மாதிரி கரைந்தது. அடுத்த 15 நிமிடம் தான் ஆகி இருக்கும். மீண்டும் சிணுங்கல். இப்போ என்னடா ன்னு கேட்டா, மூச்சா வரதுன்னு சொல்லவே, பெரியம்மா மற்ற பசங்களை பார்த்து, ஏற்கனவே போட்ட அக்ரீமெண்ட் பிரகாரம் யாராவது இவனை வெளியில் அழைச்சுண்டு போங்கடானு சொல்லவே, அவனவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். வேற வழி இல்லாமல் ஒரு பையன் அவனை வெளியே கொண்டு போய் விட்டு வந்தான். இப்போ மீண்டும் பிளாஸ்டிக் கவர் பிரிக்கும் சவுண்ட். பாட்டி  அடுத்த ரவுண்டு ஸ்னாக் பேரன்களுக்கு ரெடி பண்ராங்க. பின்னாடி சீட்டில் இருப்பவர்கள் இந்த சப்தம் தாங்க  முடியாமல் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்க  பாட்டி  அப்பிடின்னு கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே வேற வழி இல்லாம பிளாஸ்டிக் சப்தம் நின்றது. அடுத்த கட்டமான இண்டெர்வெல்  வந்தது. அவளவுதான் பாட்டி official லா தன் ஸ்னாக்க்டீரியாவை பிரிக்க ஆரம்பிச்சாங்க. என்ன என்னமோ நொறுக்கு தீனிகள்  உள்ளே போனது. மீண்டும் திரை தூக்கல். இண்டெர்வெல்க்கு அப்புறம் தான் கதை சுவாரசியம். பயலுக்கு  ஒரு மாதிரி ஸ்னாக்ஸ் மேல ஸ்னாக்ஸ்...  வயிறு நிறைய அடைச்சாச்சு. அப்பாடா , இனி படம் நிம்மதியா பார்க்கலாம். கொஞ்ச நேரத்தில இவங்க ஆர்வமா வெயிட் பண்ணிட்டிருக்கிற ஊரு காட்சி  வந்தது. எல்லோரும் ரொம்ப ஆவலாய் மகிழ்ச்சியுடன் பார்க்க, அந்த பொடி பயல் மட்டும் சுகமா தூங்கிட்டான்!!. படம் மேலும் மேலும் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில, பயல் சடார்னு எழுந்து ஒரே அழுகை. யாருக்கும் ஒண்ணுமே புரியல. என்ன பிரச்சினைனு  பார்த்தா, பாட்டி ஆசையாய் கொடுத்த ஐட்டம்ஸ் எல்லாம் வயிற்றில் கட முடா செய்ய ஆரம்பிடிச்சு  போல. அம்மா, எனக்கு அவசரமா வருதுன்னு பயல் ரெண்டு விரலையும் காண்பித்தான். எல்லோர் வயிற்றிலும் புளியை கரைக்க, அடுத்த வெளியே போகவேண்டிய  பலி ஆடு யாருனு பார்க்க,  ராஜு மரியாதையாக எழுந்து பயலை கூட்டிக்கொண்டு வெளியே வேகமாக வெளியேறினான். ராஜுக்கு மனசெல்லாம் படத்திலேயே தான். வெளியே போய் அந்த பய பாத் ரூம்ல அடிச்ச கூத்தும், ராஜு பட்ட கஷ்டமும் இங்கேய விலா வாரியா  விவரிக்க கூடிய விஷயம் இல்லை. ஒரு மாதிரி வேகமாக முக்கிய கட்சிக்காக உள் ளே வந்த ராஜுக்கு "மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா" என்கிற situation song  வேற...ராஜுவுக்கு ரொம்ப வெறுப்பு. இனிமே இந்த பார்ட்டி கூட சினிமா வரவேகூடாதுனு ஒரு முடிவுக்கு வந்தான். போறா  குறைக்கு பெரியம்மா , அப்பிடி ஒண்ணும் நடக்கலனு சொல்லி, விட்டு போன கதையை சொல்ல ஆரம்பித்தாள். இந்த  ஒரு அனுபவம் ராஜுவிற்கு இப்போது ராம் தியேட்டர் கிட்ட வரும்போது வந்தது.  நினைவலைகளை மிகவும் ரசித்தான்.

பெரியம்மா தான் அந்த கூத்து அடிச்சாங்கன்னா , ராஜுவின் அத்தை, குடும்பத்தோடு டெல்லி யிலிருந்து சென்னை வந்து அடிச்ச கூத்து இன்னும் சுவாரசியமானது.. இவங்க எப்போ வந்தாலும் குறைஞ்ச பட்சம் மூன்று  ஐட்டம்ஸ் உண்டு. ஒண்ணு மரீனா பீச்...ரெண்டாவது அங்கே ரீட்டா குச்சி ஐஸ் கிரீம் பிளஸ் மாங்கா பத்தை . ஆகா, என்ன ஆனந்தமான நாட்கள். அப்புறம் மூன்றாவது கண்டிப்பாக மேட்னி சினிமா உண்டு. அத்தை குடும்பத்தார்  கொஞ்சம் எமோஷனல் பார்ட்டி. சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகிடுவாங்க. அந்த விஷயம் சந்தோஷமாக இருக்கலாம் இல்லேன்னா வருத்தமாக கூட இருக்கலாம். அல்ப ரீட்டா ஐஸ் கிரீம்க்கு ரொம்ப சந்தோஷ படுவாங்க. அடுத்து வருவது  சீரியஸ் எமோஷனல் situation . வேற ஒண்ணுமே இல்ல. இவங்களை கூட்டிகிட்டு சன் தியேட்டர்ல "நெஞ்சில் ஒரு ஆலயம் " படம், அப்புறம் பாச மலர், நீர் குமிழி போன்ற டென்ஷன் படங்களுக்கு சேர்ந்து  குமபலாக  போயி  அழுததெல்லாம் சொல்ணும்னா  வேற  "மேட்னி மோகம்  பார்ட் 2" தான் எழுதணும். இப்போ நினைச்சாலும் வயிரு வலிக்க சிரிப்பு வரும் ராஜுவுக்கு. 

இப்பிடியாக, ராஜு சண்டே வீடு தேடும் படலம் கை கூடாம ஆனால் மலரும் நினைவுகளோடு வீடு திரும்பினான். என்ன இருந்தாலும் இந்த சிங்கார சென்னை, வந்தாரை மகிழ வைக்கும் நகரமாக இன்று வரை இருந்துதான் வருகிறது.

                                                                                 - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
******************************************************************************







வினை (தொகை)கள்


                        வினை(தொகை)கள் 




என்னடா இது ரொம்ப நாளாக ராஜூகிட்ட இருந்து ஒருகப்ஸாவும் வரலயேன்னு ரொம்ப கவலையா இருந்திங்களோ ?? !!! காரணம் என்னனா ராஜு இப்போ எல்லாம் வேற டைம்Passla பிஸியா இருக்கான். அதுஎன்னனு விலாவாரியா கேட்போம்.

அது வேற ஒண்ணும்  இல்ல. ராஜுவிற்கு எதேர்ச்சியாக ஒரு வெப்சைட்ல தையல் மெஷின் விற்பனைக்கு வந்ததை பார்த்து ஒரு விபரீத ஆசை வந்தது. Balconyகார்டன் oru பக்கம் இருக்க, தையல் கற்றுக்கொண்டால் மீதி நேரத்தில உருப்படியா ஏதாவது செய்யலாமேன்னு ஒரு ஐடியா தோணியது. வழக்கம்போல்,  வீட்டு பாஸ்க்கு சொல்லாம surpriseஆ ரொம்ப புத்திசாலித்தனமா கொறஞ்ச விலைக்கு தையல் மெஷின் வாங்கி வந்துட்டான் . ராஜுவின் பாஸ் ஒரு மாதிரி இது என்ன புது பொண்டாட்டின்னு கிண்டலாககேட்டாள். ஏற்கனவே ரொம்ப வருஷமா சும்மா இருந்த மெஷின் போன வருஷம் தான் அடி  மாட்டு விலைக்கு கொடுத்தோம்,இப்போ என்ன இதுக்கு அவசரம்ன்னு கேட்க, இல்ல...  இது லேட்டஸ்ட் மாடல்,ரொம்ப சீப்பாகவாங்கியதாக சொல்ல, அப்போவே பாஸ்க்கு புரிஞ்சு போச்சு. ஏதோ மழுப்பல்ன்னு. anyways கதைக்குள்ள போகலாம் வாங்க...






வீட்டுக்கு வந்த புதிய விருந்தாளி ஒரு எலக்ட்ரிகல் மெசின். அத எப்பிடி யூஸ் பண்ணறது அப்பிடின்னு யோசிச்சிண்டிருந்தான். உடனே,கமாண்டர் இன் chief, ராஜூவை பார்த்து நீங்க கையும் காலையும் வச்சுக்கிட்டு ஏதாவது ஏடா கூடமா செய்யாதீங்க அப்படினு சொல்லவே. ராஜு தன் மொபைலில் YOUTUBEல டைலரிங் டுடோரியல் பாக்க போனான்.கூடவே இந்த மிஷினை வித்தவர் சொன்ன ஐடியா நியாபகம் வரவே,மெஷின் வாங்கின கடைக்கு போன் போட்டு ஒரு டெமோ செஷன் fix பண்ணி ரொம்ப பெருமையா பார்த்தான். டெமோ அப்பாயிண்ட்மெண்ட் ரெண்டு நாள் ஆகும். அதுவரை புது பொண்டாட்டிய சுத்தி சுத்தி வந்தான். டெமோ மாஸ்டர் கரெக்டா வந்தார். மெஷினை பார்த்து எவ்வளவுக்கு சார் வாங்கினீங்கன்னு வந்தது வராததுமாய் இடம் பொருள் ஏவல் தெரியாம கேட்டார். ராஜு ஒரு மாதிரி சசுதாரித்துக்கொண்டு, close friendது, விலைக்கு வந்து இருக்கு, வாங்கலாமான்னு  கேட்டான். மெஷின் கண்டிஷன் எப்பிடி  இருக்குனு சொல்லுங்க என்றான் . அவர் மெஷினை ஒட்டி பார்த்துட்டு கொஞ்சம் சர்வீஸ்  பண்ணனும், நானே பண்ணுவேன்,500 ரூபாதான்  ஆகும், கடைல கொடுத்தா  1000 ஆகும்னு சொன்னரு. ராஜு HOD approval வாங்கி சரி நீங்களே சர்வீஸ் நீங்களே செய்யுங்கன்னு சொன்னான். டெமோ மாஸ்டர் தனக்கு அன்னைக்கு ஒரு மீனு மாட்சின்னு சந்தோச பட்டு மெஷின் சூப்பரா  இருக்கு சார்ன்னு சொல்லி வாங்கக்கூடிய விலையை சொன்னாரு. அந்த தொகையும் தான் கொடுத்த தொகையை விட கொஞ்சம்தான்  கம்மியாக இருந்ததால ராஜு மீண்டும் ஒரு பெரு மூச்சு  விட்டான். அப்பாடி பரீட்சை பாஸ். டெமோ செஷன் ரொம்ப smoothaga போனது. மாஸ்டர் ரொம்ப சிம்பிளா ஸ்ட்ரெயிட்ட running ஸ்டிட்ச் சொல்லி கொடுத்து மற்றபடி எப்பிடி ஊசில நூல் கோக்கணும்னு ரொம்ப லாவகமா  காண்பிக்கவே யானைக்கு ஏர்றம் குதிரைக்கு குர்ரம் போல அப்பிடின்னு மனசுல நினைசக்கிட்டான். மறக்காம மாஸ்டர் போன் நம்பர் வாங்கி கொண்டான்.  

அப்பாடி , இனி நாம்பளே தைக்கலாம்னு சந்தோசம். யூ டூப்பில் பார்த்த DIY  (Do  It Yourself ) எல்லா டுட்டோரிலும் ரொம்ப ஈஸியாக இருந்தது. சரி, இனி கோதாவில் இறங்க வேண்டியது தான். மொதல்ல ஒரு வேஸ்ட் கெர்ச்சிப் துணி எடுத்து ஸ்டிச் பண்ணலாமேன்னு துணிய தைக்கிறதுக்கு ஆயுதமானான். இப்போ தா வந்தது மதுரைக்கு  வந்த சோதனை. நூலை கண்டிலிருந்து இழுத்து பல ரூட் குள்ள போயி  கடைசியில ஊசி முனை கிட்ட வரணும். அதுவே ஒரு challenging  வேலை. இப்போ ஊசியில் நூலை நுழைக்கும் படலம். நூல் நுனி கூர்மையாக இல்லாததால், நூலை நுழைக்க ரொம்ப பிரம பிரயத்தனம் பட்டான். வேறவழி  இல்லாம பொண்டாட்டியை  ஒரு ஹெல்ப் பார்வை. அவங்க அலட்சியமா டூல்  பாக்ஸ்லேந்து ஒரு item (அது பேரு kneedle threader, ராஜு  மாதிரி, சோப்லாங்கிகளுக்குன்னு கண்டு பிடிச்சாங்க போல) எடுத்து, அத ஊசி ஓட்டைக்குள்ள நுழைச்சு நூலை கோத்து வாங்கி அனாவசியமா நூலை ஊசிக்குள்ள கோத்துக்கொடுத்தாங்க. ச்ச, இது எனக்கு தெரியாம போச்சேன்னு அசடு வழிய, இது எனக்கு தெரியாதா..நீ என்னமோ அப்பிடியே  நூலை கோப்பியோனு நினைச்சேன்னு சமாளிக்கிறதுக்குள்ள, படக்குனு நூலை ஊசிலேந்து உருவி எடுத்து ராஜு கைல அந்த வஸ்துவை கொடுத்து, இப்போ உங்க turn அப்பிடின்னு சொன்னா.ராஜுவும்  ரொம்ப வீறாப்பா , அந்த வஸ்துவின் நுனியை ஊசி முனையில் நுழைக்க ட்ரை பண்ண போக, அதன் நுனியிலுள்ள சின்ன ஒயர் மொளுக்ன்னு உடைந்து வாயே பிளந்து கொண்டு சிரித்தது !. ராஜுவின் முகம் ரொம்ப விகாரமா போக, சகதர்மினி  பரவா  இல்ல..., நீங்க, அது இல்லாம  பழகிக்கோங்கன்னு சொன்னா. அய்யோயோ, இது அதைவிட ரொம்ப கஷ்டமான பரீட்சை ஆச்சே, எப்பிடி சமாளிக்கப்போறோம்னு மனசு கிடந்தது அடித்துக்கொண்டது. இதோ பாருங்க, நான் கோத்து காண்பிக்கிறேன் சொல்லி மீண்டும் வெற்றிகரமா நூலை ஊசில கோத்து கொடுத்தாங்க. உடனே, ராஜு அப்புறமா நான்  ட்ரை பண்றேன் சொல்லி சமாளிச்சான். இப்போ அடுத்த கட்டம், trial ஓட்டம். ராஜு, சாமிக்கு வேண்டிக்கிட்டு தன்  காலை பெடல்  மேல் வைத்து லேசா ஒரு அழுத்து அழுத்த, மிஷின் சும்மா தண்ணி  போட்ட ரேஸ் குதிரையாக கோணல் மாணலாக தையல் போட்டது. ராஜு ஒரு நிமிஷம் வெலவெலத்து போனான். அம்மாடி, இதுல நெறைய சூட்சமம் இருக்கு டோய்ன்னு புரிஞ்சுகொண்டான். நூல் தான் சரி இல்ல போலிருக்கு..அப்பிடின்னு நூல் மேல பழியை போட்டு திரும்பி பார்க்கிற நேரத்திலே, தான் நினைத்தது அவன் மனைவிக்கு மூக்கிலே வேர்த்தது போல...ஆட தெரியாத நாட்டியக்காரி மித்தம் கோணலாக இருக்குனு சொன்னாளாம் அப்பிடின்னு முணுத்துக்கொண்டே  மொதல்ல அப்பிடித்தான் இருக்கும், டெய்லி கொஞ்சம் ப்ராக்டிஸ்  பண்ணுங்க சரி ஆகிடும் அப்படின்னு  அசரீரி மாதிரி சொன்னா. ராஜுவிற்கு பகிர்ன்னு இருந்தது.
ஆனாக்க ராஜு மனசை தேத்திக்கிட்டு விடா கொண்டனாக தினமும் கிரமசித்தயாக தினமும் பொறுமையா கற்றுக்கொண்டு, யு Tubeய மானசீக குருவாக கொண்டு சின்ன சின்ன, ஈஸியாக வரக்கூடிய items தைக்க ஆரம்பித்தான். இந்த மெஷின் வாங்கின வினை (தொகை)களை தினமும் தனக்கு வேண்டியவர்களுடன் வாட்ஸாப்ப் மூலம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தான். 


- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்