Saturday, May 19, 2018

ராஜுவின் Balcony காய்க(கனவுகள்)னிகள்

ராஜுவின் Balcony காய்க(கனவுகள்)னிகள் 

சின்ன வயசுலேந்தே ராஜுவிற்கு  gardening ரொம்ப பிடிக்கும்.  யார்  வீட்டுக்காவது  போகும் போதெல்லாம், அவன்   கூட வருவாங்க வீட்டுக்குள்ள போவாங்க, ஆனால் அவன்   மட்டும் வீட்டை சுத்தி ஏதாவது  செடி இருக்கானு பார்க்கப்போவான் . அப்பிடி ஒரு செடி பைத்தியம். அதோட இல்லாம எந்த செடியாவது seeds  கூட   இருந்தா  அத அப்பிடியே யாருக்கும் தெரியாம தன்  பாக்கெட்ல போட்டுருவான்  . இதுல  என்ன கூத்துன்னா , சீட்ஸ் பாக்கெட்ல போட்டது மறந்து போய் மறு நாள் துணி தோய்க்கும் போது தான்  குட்டு  வெளிப்படும். அவன்  pant  துணி பாழாபோனதுமில்லாம கூடவே அவன்   தோட்ட கனவும் சேர்ந்து போனது. இது போறாதுன்னு அவன்  அம்மா, "என் பிள்ளை கை  ரொம்ப ராசியான கை. அவன்  எந்த செடியோ இல்ல விதையோ வெச்சா நல்ல  வளரும்" அப்படினு  சொல்ல  ராஜுவிற்கு பெருமை பிடி படல .

இப்போதெல்லாம் எங்கே காம்பௌண்டோட வீடு இருக்கு ?. எல்லாம் அப்பார்ட்மெண்ட்ஸ் தானே . ஆனாலும் இவ்வளவு வயசு ஆகியும்  செடி வளர்ப்பில  அவனுக்கு தீராத காதல், so அதனால அவன்  வீட்ல இருக்கிற 3'x 4' அளவே உள்ள  அபார்ட்மெண்ட்balcony அவன் கண்ணை உறுத்த ஆரம்பித்தது. ஏதாவது உறுப்பிடியான kitchen கார்டன்  போடலாம்ணு வீட்ல head of  the  departmentக்கு மொதல்ல approval கேட்டான்,  ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு அரை மனசோட உறுப்பிடியா காய்கறி ஏதாவது போடுங்க பரவாயில்ல . சும்மா இந்த crotons அப்புறம் வாசனை இல்லாத பூச்செடி இதெல்லாம் போடாதீங்க. அப்புறம் தண்ணி ரொம்ப செலவாகாத vegetables  வேண்டுமான போட்டுக்கோங்க அப்படினு sanction ஆனது . அப்பிடின்னா பிளாஸ்டிக் செடி தான்,   வைக்கணும்னு முணுத்துக்கொண்டு திரும்பி பார்த்தான் . நல்ல வேளை  பாஸ் டிவியோட  ஐக்கியம் ஆகிட்டாங்க.

இதுதான் நல்ல சமயம். உடனே கார் எதுக்கிட்டு Ecr   ரோடுக்கு கிளம்பினான் . மனசுக்குள்ள எப்பிடியும் ஒரு 20 தொட்டி , கொஞ்சம் உரம் அப்புறம் கம்போஸ்ட் எல்லாம் வாங்கணும்னு லிஸ்ட் போட்டு ஒரு 500 ரூபாயை பாக்கெட்ல போட்டு நீயும்  வரையான்னு அவன் wife  பார்த்து சும்மா    கேட்டான் . அய்ய, எனக்கு அப்பிடி ஒண்ணும்  இண்டெரெஸ்ட் இல்லைன்னு டிவி சொன்னது. நமக்கு இது தானே வேணும். தன்   இஷ்டத்துக்கு  எது வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு மணி ஆகும் ஒன்னும் கவலைபடாதே சொல்லிட்டு அவ பதிலுக்கு காத்திராமல்   மின்னல் ஸ்பீட்ல வீட்டை விட்டு ராஜு வெளியேறினான் , இந்த செடிகள் நர்சரி தோட்டம் எப்பவோ மஹாபலிபுரம் போகும் போது  பார்த்தது , சரி, போற வழிலே பார்த்துக்கலாம் நினைச்சி ECr ரோடு டிராபிக்குள்ள கார் ஓட்டிக்கொண்டே போனான் . டிராபிக் வேற ரொம்ப இருந்தது. இந்த தோட்டம் எல்லாம் எங்கே இருக்குனு சரியாய் வேற தெரியாது. ஒரு 20 km பொய் இருப்பான் , திடீரென அவன்   காருக்கு ஒரேடியா  நெஞ்சு வலி வந்து மூச்சு  முட்டி நின்று விட்டது.  என்னடான்னு பார்த்தா பெட்ரோல் காட்டி முள் ஒரேடியா படுத்துகிச்சு. பெட்ரோல் காலி..உடனே யோசிக்காம கார் ஓரம் கட்டிட்டு ஏதாவது லிப்ட் கிடைக்கும்னு வெயிட் பண்ணும் போது ஒரு டப்பா sccoty வர .. thumps up காட்டினான் . நல்ல வேளை ஒரு 100 அடி தள்ளி வண்டி நின்றது.  பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் போய் பெட்ரோல் கேன் சகிதத்தோட மீண்டும் thumpsup...  ஒரு பயங்கர ஓட்ட லாரி பிடித்து கார் வந்து சேர்ந்தான் . கையிலிருந்த 500ல  ஒரு 200 பெட்ரோல் ;போட்டுட்டு மீதம் 300 செடி ஷோப்பிங்க்காக பத்திரமா புத்திசாலித்தனமா வெச்சுருந்தான் . இந்த சமயம் பார்த்து அவன்   மனைவிக்கு மூக்கிலே வேர்த்தது  போல..மொபைல் போன் ரிங் ரிங்..எப்பிடி சமாளிக்க..நடந்ததை சொன்னா  situation worst ஆகும்னு தெரியும். உடனே இங்கே தோட்டத்தில ரொம்ப கூட்டம் , இன்னிக்கு சண்டே இல்லே..ரொம்ப கூட்டம்  போல.sale  வேற போட்டிருக்காங்க னு ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்தான்  . ஒரு வழியாக தோட்டத்தை  கண்டுபிடிதத்தான் . கார் டாஷ்போர்டுல பார்த்தா  35 கி வந்து இருக்கான் . சரி இப்போ நாம வாங்க வேண்டிய items  லிஸ்ட் மொபைல் போன்ல இருக்கு. அப்புறம் என்ன. அவனை பார்த்த  தோட்டக்காரனோட  ஏழாம் அறிவு ரொம்ப பெரிய  பார்ட்டி மாட்டி இருக்குனு  சொன்னது போல. உடனே ரொம்ப  பவ்யமா அய்யாவுக்கு என்ன வேணும் சார்...இது வேணுமா, அது வேணுமா அப்பிடின்னு  மாறி  மாறி உபசரித்தான். ராஜுவிற்கு   தலை  கால் புரியலை. அவன்  லிஸ்டில் இருந்த items  எல்லாம் படித்து இதெல்லாம் உன்கிட்ட இருக்கானு கேட்டான் . தோட்டக்காரன்  கணக்கு பிரகாரம் இந்த items  எல்லாம் வெறும் சப்பை போல. இதெல்லாம் ரொம்ப சீப் சார். இத பாருங்க காஷ்மீர் ரோஜா  , இத வேணுமா அஜம்மெர் ரோஜா அப்படினு விதம் விதமா  நெறய செடி தொட்டியை கட்டினான் . உடனே ராஜுவின் சுய கவுரவம் அவனை  ஒரு உசுப்பு உசுப்ப, சும்மா அந்த அஜ்மீர்   என்ன விலைனு கேட்டான் . டிஸ்கோவுண்ட் போக , ஒரு செடி 250 ரூபா தான் சார். அடிவயத்துல பகிர் னு ஒரு பீலிங். நம்பகிட்ட  கேவலமா வெறும் 300 மட்டும் தானே  கைல இருக்கு, எப்பிடி இவளவு items  வாங்கறதுனு ஒரு பயங்கர  மனக்குழப்பம் வேற. எப்பிடியோ  சுதாரிச்சிகிட்டு இதெல்லாம் எனக்கு வேணாம்,,இந்த லிஸ்ட் item  மாத்திரம் தனியா எடுத்து  வெச்சு பில் போடுங்கன்னு  சொன்னான் . உடனே சரி சார் னு சொல்லி, அவன் அசிஸ்டண்ட் கிட்ட  சொல்லி மாயமாய் மறைந்து அடுத்த sound  பார்ட்டிய கவனிக்க  போனான். ஒரு வழியா பில் வந்தது. ஒண்ணும்  புரியாத தமிழ் பாஷயைல கிறுக்கி மொத்தம் 20 items இருந்தது. ராஜுவின் கண்ணு மொத்தம் எவ்வளவு damageன்னு கடைசி item வரைக்கும் தேடி  அப்புறம் பின் புறம் மீதி continue ஆக  மொத்தம் 4500 இருந்தது. இது என்னடா பிள்ளியார்  பிடிக்க குரங்கு  வந்த கதையா ஆனதேன்னு   ரொம்ப பீலிங் வேற. சரி இப்போ situation எப்பிடி சமாளிப்பதுனு யோசிச்சு கொஞ்சம் இருங்க, வீட்ல கேட்டு எது வேணும்னு கேக்கறேன் சொல்லி அவன்கிட்ட ஒரு அல்ப பொய் சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி போயி  மொபைலை பேசுறமாதிரி ஆக்ட் செய்ய வேண்டியதாச்சு. தோட்டக்காரன்  எப்போ இந்த பார்ட்டி வீட்ல கேக்குதோ அப்போ எதுவும் வாங்காதுனு முடிவு பண்ணிட்டான் போல.
இந்த பலகணி கார்டன் ரொம்ப கைய கைடிக்கும் போல இருக்கே, அதே சமயம் ஆசை விடல. ஒரு பக்கம் பொண்டாட்டி உருவமும் இனொரு பக்கம் கேவலமா அவனை  பாக்கும் தோட்டக்காரன் ஜர்தா போட்ட முகமும்    தமிழ் சீரியல்ல  வர மாதிரி மாறி  மாறி focus  ஆகிட்டே  இருந்தாங்க. சரி , இப்போ ஒரு முடிவுக்கு வந்தாகணுமே..என்ன செய்ய..நிலைமைய  சமாளிச்சு சீக்கிரம் வெளியேறனும்..ஒடனே கிரெடிட் கார்டு வாங்குவீங்களானு கேட்டான் . எப்பிடியும் அவன் வாங்க மாட்டான்  என்கிற நம்பிகை தான்  வேற என்ன. இல்ல சார் என்று  சொன்னான் ...ராஜு  முகத்தில வெற்றி புன்னகை..அப்போ சரிப்பா..நா இங்க தான் பக்கத்தில இருக்கேன்,,,இன்னும் அரை மணியில வந்துடுவேன்னு..காசு கொண்டுவரேன்  சொல்லி நழுவ பார்த்தான் ...உடனே அவன் அட்ரஸ் கொடுங்க சார்,,நான் நேர வந்து கேஷ் வாங்கிக்கிறேன் னு சொல்ல, இது என்னடா வேண்டாத வம்பு..நல்ல மாட்டிக்கினோமே அப்பிடின்னு நினைச்சான் ,,மேல அவன் இல்லேன்னா ஒண்ணு  பண்ணுங்க சார்,  உங்க கிட்ட paytm அக்கௌன்ட் இருக்கானு கேட்டு மேலும் அவனை  இக்கட்டான நிலமைல கொண்டு விட்டான்,,  அவன் மொபைல் நம்பர் வேற கொடுத்தான்..இல்லேப்பா மொபைலில் சார்ஜ் இல்லே னு சொல்லி அங்கிருந்து வில்லில் இருந்து விட்ட அம்பு மாதிரி சர்ருனு கார் கிட்ட பாய்ந்தான் . அவ்வளவு தான் ..அடுத்த அரைமணியில் ராஜு  வீடு வந்து சேர்ந்தாச்சு..

இப்போ வீட்டுக்   காட்சி..என்னங்க வெறும் கையோட வந்துட்டீங்க,,ஒண்ணும்  வாங்கலியா ??!!...இவ்வளவு  நேரமா  என்ன பண்ணினீங்க ..அப்பிடின்னு சரமாரியா  கேள்வி கணைகள்..உடனேயே ராஜு மனசில ரெடியா வச்சிருந்த புத்திசாலியான  பதில் விட்டான் ..நீ இல்லாம என்னால எதுவும் decide  பண்ண முடியல...நெறய variety  வேற...அடுத்த  தடவை நம்ப ரெண்டு பெரும் ஜாலியா ஒரு டிரைவ் போய்ட்டு செடி வாங்கிட்டு வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்னு நெனச்சேன்னு ஒரு சூப்பர் சீன் போட்டான் ,,சரி சரி ..குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்..பசிக்குது னு சொல்ல ஒடனே என்னமா சமாளிச்சிட்டோம்னு நினைச்சுகிட்டே  பெருமையா balcony இல்  இருக்கிற towel எடுக்க போனேன்,,,

அங்க தான்  அவன் விதி அவனை பார்த்து ஏளனமாக சிரித்தது. ஆமாங்க...  ...ஒரு 15 பூந்தொட்டி , அதில வித விதமா செடி, ரோஜா செடி, அப்புறம் செம்மண் மூட்டை, உரமூட்டை சகிதம்  இருந்தது ..இதுஎல்லாம்  ஏ,,,,,து அப்பிடின்னு திரும்பி பார்த்து கேக்கறதுக்குள்ளே அவ,  ரோட்ல கூவிட்டு போனான்..நான்தா மொத்தமா ஒரு 500க்கு வாங்கினேன் சொல்லிகிட்டே, அவன்   முகத்தில வழியிற அசட்டு தனத்தை பாக்காமா  அவபாட்டுக்கு போய்ட்டா வழக்கம் போல ......ராஜுவின் பலகணி கார்டன் கனவு அவன் நினைத்ததை போல் பூத்து  காய்க்காமல், வெறும்  காய்ந்த சரகாக உதிர்ந்துப்போனது ..

*********************************************************************************

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்

















No comments:

Post a Comment