Monday, May 21, 2018

என்று தணியும் இந்த....

     என்று தணியும் இந்த....

இந்த கதை ராஜுவின்  வாழக்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவம். சி நே சி ம,,இது என்ன புதுமாதிரியான வார்த்தை ஜாலம்..? ஒண்ணும்  இல்ல ..பிரபல தமிழ் கதா ஆசிரியர்  அவர்களுடைய சினிமாவான சிநேரங்களில் சினிதர்கள் தான் இந்த கதையின் உட்கரு. இக் கதையில் வரும் உண்மை பெயர்கள் மாற்றப்பட்டு  இருக்கின்றது. வாங்க...கதைக்கு செல்வோம்..

இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு 35-40 வருடங்கள் இருக்கும்..உடனே ராஜுவிற்கு  இப்போ என்ன வயசு இருக்கும் அப்படிங்கற சந்தேகம், விடுங்க,..அது இப்போ ரொம்ப முக்கியம் இல்ல ...அப்போ ராஜு  ஒரு MNC கம்பெனில கம்ப்யூட்டர் ஆபரேட்டராக  இருந்தான. மூன்று ஷிபிட் இருக்கும். நல்ல ஜாலியாக இருக்கும். வேலையும் இன்டெரெஸ்டிங்கா இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுகொண்டு வேல செய்துகொணடே ஒருத்தரை  ஒருத்தர் கலாய்ச்சிகிட்டே இருப்பாங்க. அந்த காலம் ரொம்பவும் இனிமையான இளமை காலம். எல்லோரும்ம் போட்டி போட்டுகொண்டு வித விதமா டிரஸ் செய்துகொண்டு லைப் ஈஸியாக எடுத்துக்கும் வயசு. கைல காசு, பைக்,,அப்புறம் என்ன..மிகவும் சந்தோஷமான மறகக்க முடியாத  நாட்கள்..

இப்பிடியாக நாட்கள் போகும் போது  புதுசா ஒரு பெங்களூரு  பையன் வந்து சேர்ந்தான். சென்னை வந்தி இறங்கிய  புது மோஸ்தர். பேரு  ஆகாஷ் . ஸ்டைலா ஷாம்பு போட்ட ஸ்டெப் கட்டிங் வேற , பெல் bottom pant . சக சீனியர்ஸ்  ஸ்டைல் எல்லாம் தூக்கி அடிக்கிற  மாதிரி ஸ்மைல்  அப்புறம்   colorful ஷர்ட்..young  அண்ட் energeticகா  இருந்தான். உடனே ராஜுவுக்கு  அவனை பார்த்ததும் பிடித்தது..டெய்லி அவன்  கிட்ட, தெரிஞ்ச  கன்னடத்தில் பேச  ஆரம்பிச்சான் ..(பெங்களூர்ல ஒரு வருஷம் கம்ப்யூட்டர் ட்ரைனிங் போனதுல கெடச்ச  லாபம் இந்த கன்னட மொழி)..ஆனா  anti  கிளைமாக்ஸ்ah ஆகாஷ்  கன்னடத்தில் பேசாம, இவன்கிட்ட   கிட்ட ஹிந்தில பேச ஆரம்பிச்சான்..என்னடா இது நம்ப weak சப்ஜெக்ட்ல கை  வைக்குறானே ..என்ன பண்றது..ஆனா  ராஜுவிற்கு  அவனை பிடிச்சிருக்கு...என்ன செய்ய,,உடனே இங்கிலீஷில பேசி பார்த்தான். செம்மயா ஆகாஷ் மாட்டினான்..ராஜுவின் நல்ல  வேளை , அவனுக்கு  ராஜுவின் இங்கிலீஷ்  சரியாய்  புரிய, அவனும்  இங்க்லிஷ்ல  பேச ஆரம்பிச்சான்..ராஜுவிற்கு  அவன் போட்டுஇருக்கிற ஷர்ட், பாண்ட் மேலதான் ஏழாம் வேற்றுமை உருபு .. "ஐ" (eye  !!)  அதான்  "கண்"...எப்போதோ தமிழ் grammer கிளாசஸ்ல அரை குறை தூக்கத்திலே கேட்ருக்கான் ..இந்த pant , shirt எல்லாம் எங்கே  வாங்கி இருப்பான்ன்னு ராஜூவிற்க்கு  ஆயிரம் கேள்விகள். ராஜுவிற்கு  யாரவது நல்ல டிரஸ் பண்ணி இருந்தா அவனை கப்புனு friend பிடிச்சிக்குவான்.  ராஜூவை அவன்  ஆபீஸ்ல Raymond டிரஸ் விளம்பர மாடல் மாதிரி இருக்கான்  அப்பிடின்னு சொல்லுவாங்க..அப்பிடி இருக்கும்போது ஆகாஷ்  அவனுக்கு சரியான போட்டி ..படி படியாக  அவங்க  நட்பு வளர்ந்து இணை பிரியாத நண்பர்களாக ஆனாங்க . ஆகாஷ், ராஜு வீட்ல  அடிக்கடி வந்து தங்க ஆரம்பிச்சான். வீட்ல இருக்கிறவங்களுக்கும் அவனை ரொம்ப பிடிச்சி இருந்தது . ஆகாஷை  அவன்  ஷிபிட்க்கு ராஜு மாத்திக்கிட்டான் . ரொம்ப குஷியா இருந்தது ராஜு மனசுக்கு. so , வீக்லி off  வரும்போது ஆகாஷ் ஸ்விம்மிங் கத்துக்கணும்னு ஆசை பட்டான். எல்லாருமாக சேர்ந்து மரீனா ஸ்விமிங் நீச்சல் குளத்துக்கு  போக ஆரம்பித்தோம். ஆகாஷுக்கு நீச்சல் தெரியாது. ராஜு  தான் கத்துக்கொடுக்கணும்னு ரொம்ப அன்பு தொல்லை வேற. சரின் னு சொல்லி அவன் செலவில் ரெண்டு ஸ்விமிங் ஷார்ட்ஸ் வாங்கி நீச்சல் கிளாஸ் ஆரம்பமானது. நீச்சல்  கத்துகிறதுல ரொம்பவும் ஆர்வம் கா காட்டினான். கொஞ்சம் நாள் ஆக  ஆக , குருவுக்கு மிஞ்சின சிஷ்யனாகிவிட்டான். ராஜு  பத்து அடி போறதுக்குள்ள ஆகாஷ்  15 அடி  தூரம் போயிடுவான். எப்போதும்  எல்லாரும் சேர்ந்து தான்  போயிட்டு  பக்திலுள்ள  புஹாரி ஹோட்டல்ல டீ , கேக் எல்லாம் சாப்பிட்டு ( ஆகாஷ்  செலவு தான்) திரும்புவாங்க  .

இப்பிடியாக அவங்க  லைப் ஆனந்தமா போயிற்றுக்கும்போது  ஒரு நாள், ....வாழ்க்கைல மறக்க முடியாத அந்த நாள் வந்தது....அன்னிக்கின்னு பார்த்து ஆகாஷுக்கு  off  போட்டுட்டாங்க. தனியா வீட்ல போர் அடிக்கும்  ராஜு  இல்லாம, அப்படினு சொல்லி ஸ்விமிங் தான் தனியா போகட்டுமான்னு கேட்டான். ராஜூவும் சரின்னு  சொல்லிட்டான் . ராஜு  தனியா மார்னிங் ஷிப்ட்ல வேலை செய்து  கொண்டிருந்தான் , ஒரு two hours கழித்து போலீஸ் ஸ்டேஷனிலேந்து ராஜுவிற்கு  போன் கால் வந்தது. ராஜுவிற்கு  ஒன்னும் புரியல. போன்க்கு   அந்த பக்கத்திலேந்து, சார்  ஒரு dead body மரீனா ஸ்விமிங் குளத்திலே கண்டெடுத்தோம். அவரு pant பாக்கெட்ல ஆபீஸ் கம்ப்யூட்டர் ரூம் நம்பர் இருந்தது. அதா உங்களுக்கு போன் பணறேன்னு   சொன்னாரு. ராஜுவிற்கு  கையும் ஓடல காலும் ஓடல. அப்பிடியே எல்லாரும் ஜெனரல் ஹாஸ்பிடல் ஓடி போய் ராயப்பேட்டை mortuaryla பார்த்தோம். ராஜுவின்  உடம்பு  ரத்தம் அப்பிடியே உறைந்த்து போச்சு. ராஜுவின்  உயிர் நண்பன் ஆகாஷ் தான் அந்த body . எப்பிடி இந்த விபத்து நடந்தது என்று விசாரிக்கும் போது ஆகாஷ் ஸ்விம் ககுளத்திலே  யரும் இல்லாத நேரத்தில டைவிங் ட்ரை பண்ணிருக்கிறான். ஆகாஷுக்கு  சுத்தமா டைவிங் தெரியாது. அவனுடைய  ஆர்வ கோளாறு. அவனை  கொன்று விட்டது..ஐயோ. ராஜுவால்  தாங்க முடியல. மேற்கொண்டு ஆக  வேண்டிய எல்லா பொறுப்பையும் தானே  ஏற்றுக்கொண்டு ஆகாஷ் பாமிலிக்கு போன் போட்டு இந்த துக்க செய்தியை சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து வரும்படி சொன்னான் . அதுவரை body mortuaryla வைக்க ஏற்பாடு செய்தான் . அவனுக்கு  உறு  துணையாக ராஜுவோட வேலை செய்யும்   பிரிண்ட்ஸ் மற்றும்  அண்ணா முதலியோர் இருந்தார்கள்.

இப்போது கதை எப்பிடி போகுதுன்னு பார்ப்போம். ஆகாஷின் வீட்டு மக்கள் மலை 6 மணிக்குள்  வந்து விடுவதாக கூறவே மற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தான்  ராஜு.. நண்பன் விபரீதமாக  இறந்த துக்க சம்பவம் அவனை ரொம்பவும் வாட்டியது . ராஜுவின்  அண்ணா மற்றும் நண்பர்கள் மேற்கொண்டு ஆக  வேண்டிய காரியத்தில் ரொம்பவும் பிஸியாக இருந்தாங்க. அவனுக்கு மட்டும் ஒரு வித சொல்ல முடியாத மன வேதனை. ஆகாஷுக்கு ஸ்விமிங் கத்துக்கொள்ள தான்  காரணமாக இருந்தோமேனு  என்று நெஞ்சு பதறியது. மாலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் உடல் தகனம். நேரம் கடத்த கூடாது என்பதற்காகவும் மற்றவர்கள்  இறந்தவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்  கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் மட்டும் அன்று மேற்கொண்டு மூட பட்டு எல்லோரும் மயானத்தில் கூடுவதாக ஏற்பாடு .

இது கிளிமாஸ் கட்டம். 5 மணிக்கு bodya  மயானத்திற்கு ஆம்புலன்ஸசில கொண்டு செல்லப்பட்டது. எல்லா ஏற்பாடுகளும் நன்றாகவே  செய்யப்பட்டு இருந்தது. சரியாக 6 மணிக்கு ஆகாஷ் வீட்டிலிருந்து தந்தை மற்றும் 3 brothers எல்லோரும் வந்தார்கள். அவர்களை கண்டவுடன் துக்கம் தாளாமல் ராஜு , இங்கிலீஷ்லேயும் , கன்னடலத்திலேயும் நடந்ததை  சொல்லி அழுதான் . அப்போது தான்  கொஞ்சமும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. உங்களால் யூகிக்கவே முடியாது. ஆகாஷின் brothers எல்லோரும் அவன் உடலை கட்டி கொண்டு அழ ஆரம்பிக்க,  தந்தை மட்டும் ஒரு மூலைக்கு  சென்று கை  கால்கள் ஒரு மாதிரியாக நடுங்க கீழே விழுகிற மாதிரி இருந்தார். முகம் ரொம்பவும் வெளிறி போய்  விகாரமாக இருந்தது. எனக்கு ஒண்ணுமே புரியல. ஐயோ பாவம், புத்திர சோகம் போல..பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவரு அப்போ அப்போ குடிக்க தண்ணி வேணும் போல கையை காண்பிக்கவே நா ஒரு பாட்டில் வாட்டர் கொடுத்தேன். அதை அவர் தள்ளி விட்டு மீண்டும் அதே சைகை காண்பித்தார். இதை கண்ட அவரது மூத்த மகன் , என்  காது கிட்ட வந்து ஒரு சில வார்த்தைகள் கன்னடத்தில் சொன்னாரு.அத கேட்டு நான் உறைஞ்சு போய்ட்டேன். அது என்ன என்றால்  அவர் அப்பாவுக்கு ரொம்ப குடி பழக்கம் உண்டாம். இந்த மாதிரி நேரத்தில  இப்பிடித்தான் டென்ஷன் ஆகிடுவாராம். அதுக்கு மருந்து எப்போவுமே ஒரு கட்டிங் கைல வெச்சுஇருப்பாராம் !!. எப்பிடி!! .அந்த பையன் மேல சொன்னான்..வர அவசரத்தில் அவரு வாங்கலியாம்.."illi, yelli sikathe re, drinks nu" (இங்க எங்கேய பாட்டில் கிடைக்கும் னு ) கேட்ட  எனக்கு தலையே சுத்தியது. மேலே என் பதிலுக்கு காத்திராமல் ஒரு பிரதர் வெளியே வேகமாக ஓடி ஒரு பத்து நிமிடத்தில் கையில் பாட்டில்  பிளஸ் ஒரு பாக்கெட் சிகரெட்டு சகிதம் வந்து அவரிடம் கொடுத்தான் . உடனே தந்தை அந்த பாட்டிலின் மூடியை திறந்து அப்பிடியே ஒரே மூச்சில் முழுவதையும்  குடித்துவிட்டு வாயில் சீக்ரெட்டையும் பற்ற வைத்தார்.  மிகுந்த போதையால் அவர் அப்பிடியே சாய்ந்து விட்டார். எல்லார் முன்னாடியும் ரொம்ப கேவலமாக நடந்துகொண்டார். வாய் வேறு எது கன்னடலத்தில உளறி கொண்டிருந்தது. இப்பிடி ஒரு குடி பழக்கமா? இப்பிடி ஒரு தந்தையா !! இப்பிடி ஒரு குடும்பமா !!  ராஜுவுக்கு ஓரு பக்கம் பயங்கர கடுப்பும் மற்றொரு பக்கத்தில அவன் friend கிடப்பதையும் பார்த்து நொந்து போனான். ச்ச ...இப்பிடி ஒரு குடும்பத்தில இப்பிடி ஒரு நல்ல பையனா ? மேற்கொண்டு ராஜுவிற்கு, ஆகாஷின் வீட்டு மக்களை பார்க்க   பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து போய தன் நண்பனுக்கு செய்ய வேண்டிய கடைசி கால கடமைகளை தானே முன்னிருந்து செய்தான்.  தன நண்பனை நினைத்து மிகவும் வருந்தி மனதார அவன் ஆத்மா சாந்தி அடையுமாறு வேண்டிக்கொண்டான் .

என்ன விசித்திர  உலகமடா இது???!! ஒரு பக்கம் பிள்ளை தண்ணியில் தெரியாமல் விழுந்து  இறந்தான்... மறு  பக்கம் தந்தையோ தண்ணி இல்லாமல் இறந்துடுவாரு போல இருக்காரு . what an irony of life..!!!ராஜு மனசு ரொம்பவும்  நொந்து போனது. ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்றிலிடுந்து இன்று வரை நண்பர்கள் யாராவது ரொம்ப குடித்தார்களானால் அவர்களிடம் போதை தெளிந்த பிறகு ஆகாஷின் தந்தை கதைய விவரமாய் சொல்லி அவர்களை குடி பழக்கத்தை கை  விடுமாறு கேட்டுக்கொள்வான். இது, தான் ஆகாஷுக்கு செய்யும் கடமையாகவும், சமூகத்திற்கு  தன்னால் முடிந்த சிறு சேவையாக  ராஜு இன்று வரை செய்து  வருகிறான்.

********************************************************************************


- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்





















No comments:

Post a Comment