Wednesday, May 30, 2018

ஆகாய பந்தலிலே .....

                                                                   ஆகாய பந்தலிலே .....


 எல்லா பிள்ளைகளுக்கும் தான் முதல் சம்பாத்தியதில  தன் அம்மாவுக்கு ஏதாவது ஸ்பெஷல்ah செய்யணும்னு ஆசை. அதுக்கு நம்ப ராஜுவும் ஒரு விதி விலக்கு  இல்ல. ராஜு முதல் தடவையா தன் அம்மாவை ஏரோபிளான்ல
கூட்டி செல்ல  வேண்டும்ன்னு ஆசைப்பட்டான். இதெல்லாம் அவன்  கல்யாணத்துக்கு  முன்னாடி நடந்த சமாச்சாரங்கள். நல்லா நினைவிருக்கட்டும்  !!  அந்த சமாச்சாரத்தை ஒரு surprise ஆக வெச்சிருந்தான். பெங்களூர்ல இருக்கிற தன் சிஸ்டர் வீட்டுக்கு அம்மாவை அழைத்தகொண்டு போறதாக பிளான். அக்காவிற்கு மாத்திரம் ரகசியமாக போன்ல சொல்லிட்டான் இந்த வாரம் weekend வருவதாக. அம்மா நல்ல மூட்ல இருக்கும் போது பார்த்து இந்த வாரம் நம்ப ரெண்டு பெரும் பெங்களூரு Friday  போயிடு Tuesday  வரலாமா, என்னக்கு லாங் வீக் end அப்படடினு ஒரு பக்கம் அம்மாவை ஒரே கண்ணால பார்த்து கொண்டே கேட்டான். ஏதோ கை  வேலைய இருந்த அம்மாவும் எனக்கும் உமாவையும் குழந்தையும் பார்க்கணும் போல தா இருக்கு. தட்கல்ல கூட டிக்கெட் கிடைக்காதே, ஹாலிடே சீசன் அச்சேன்னு கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல, அதுக்கு நீ ஒன்னும் கவலை படாதே  அம்மா, நான் பார்த்துகிறேன்னு சொல்லிட்டான். ..அம்மா முகம் 1000 வாட் சோடியம் vapour பல்பு தான்.

இனி அம்மாவோட action  பிளான் பாக்கணுமே. எத்தனை மணிக்கு டா  வண்டி, brindavan  இல்ல லால் பாக் ? பாவம்,  அம்மாவின் மனம் அதுக்கு மேல costly வண்டிகளுக்கு இடம் கொடுக்கல. அப்போ, கொஞ்சம் அரிசி, உளுந்து  ஊற இப்போவே போடறேன், ட்ரைன்ல சாப்பிட்டு போகலாம், ட்ரைன்ல விக்கற  பண்டம் எதுவும்வாங்க வேண்டாம், ரொம்ப மோசமா இருக்கும். மாப்பிள்ளைக்கும் குழந்தைக்கும்  மாத்திரம் கொஞ்சம் திரட்டிப்பால் பண்ணறேன்னு  சொல்லி பிரிகேட்ஜ் திறந்து பால் இருக்கானு செக்கப்பண்ண போய்ட்டாங்க. அம்மாக்கு கையும் ஓடல காலும் ஓடல. நாளைக்கு மோர்னிங் வண்டினு சொல்றே,,ஒரு  காரியம் அகல , டிரஸ் எடுத்து வச்சுக்கணும், ஸ்வீட் பண்ணனும், அப்புறம் சாம்பார் போடி கேட்டா  உமா, அது வேற ரெடி பண்ணனும்னு பெரிய லிஸ்ட் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. உடனே ராஜு நம்ப இப்போ short விசிட்க்கு தா போறோம்மா  , ஸோ, டேக் இட் ஈஸி மா  என்றான். உனக்கு என்ன. உன் மொபைல், ஒரு ஜீன்ஸ் பிளஸ் ரெண்டு டீ ஷர்ட் இருந்த போறும் . நான் எல்லாம் ரெடி பண்ணனும். அம்மா தேனியாக பறந்தாள். தான் ஒரு சின்ன வீக் end backpack மட்டும் ரெடி பண்ணி அம்மா சொன்ன தன்   items மாத்திரம் எடுத்துவச்சுக்கிட்டான் , அம்மா கிட்ட ஆதார் கார்டு எடுத்துக்கோங்க, சீனியர் சிடிஸின் ஆச்சே அப்படினு  கிட்ட உரக்க சொல்லி தன மட்டும் மனதில் சிறித்து கொண்டான். நாளை காலை 7.30மணிக்கு பிலைட் . அதுனால கால் டாக்ஸி அட்வான்ஸ் புக் பண்ணிவிட்டு காலை 5.00 மணிக்கு அலாரம் மொபைல்ல செட் பண்ணிட்டு வாட்ஸாப்பல  மூழ்கிட்டான். தான்  இப்போ லேட்டஸ்ட் பேஷன் எந்த பசங்களும்  ஷேவ் பண்றதே இல்லையே. ராஜுவும் அந்த கட்சி தான். ஒரு  வழிய நைட் டின்னர் சிம்பிளாக முடிச்சுட்டு படுக்க போய்ட்டான். ஏன்னா விடியக்காலை 5.30க்கு எழுந்திருக்கணுமாம்!!நைட் எவ்வளவு நேரம் அனாலும் வாட்ஸாப்ப், facebook youtube அப்பிடின்னு நேரம் போன கணக்கு கிடையாது.

இங்கே ராஜுவின் பேமிலி பத்தி கொஞ்சம் quickah பார்த்துடுவோம். ராஜுவின் தந்தை அவன் சிறு வயதிலேயே காலமானதால் அம்மாதா பூரா பொறுப்போடு அவனை வளர்த்தாள் . நல்ல காலம் அம்மா அந்த காலத்து கான்வென்ட். sslc  வரை. அதனால ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சு ராஜூவையம் உமாவையும்  ரொம்பவும் இண்டிபெண்டெண்டாக வளர்த்தாள். ராஜுவும் ரொம்ப ஸ்மார்ட். உமா , ராஜு அம்மா மூன்று  பேருக்கும் நல்ல understanding இருந்தது.

Friday  வந்தாச்சுனு அலாரம் அடிக்க அப்போதான் தூங்கின மாதிரி சலிச்சுக்கிட்டே எந்திரிச்சான். கிச்சன் பக்கம் எட்டி பார்த்தா அங்கே அம்மா சூப்பரா குளிச்சிட்டு ஸ்வாமிக்கு விளக்கு ஏத்தி வச்சு காபி உடன் வந்தாங்க . ராஜு !! ரா....அட நீ இன் ரெடி ஆகவே இல்லையா. போய்  குளிச்சிட்டு வா, காபி சாப்பிட்டு ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டா கொஞ்சம் பசி அடங்கும். எப்பவுமே ட்ரெய்ன்ல போகும் போது கொஞ்சம் அதிகமாகவே பசிக்கும் அத சொன்னேன். அம்மா !! ப்ளீஸ் ரொம்ப ஓவர் சீன் போடாதே. நான் என்ன சின்ன பையனா. எல்லாம் பெங்களூரு போய் குளிச்சிக்கலாம் னு சொன்னான். ஏன்னா அவனுக்கு தான் அந்த flightல  போற ரகசியம் தெரியும் . ஆமா, இல்லாட்டா மாத்திரம் நீ என்னைக்கு காலையில குளிச்சிருக்கே. தீபாவளிக்கு கூட குளிச்சது இல்ல. அம்மாவின் பேச்சை கேட்காமல் ராஜு jeansக்குள்  புகுந்துகொண்டான்.

பாக்கெட்ல மொபைல் 5.15க்கு  சரியாய் அடித்தது. கால் டாக்ஸி தான். சார், ராஜூங்களா, டாக்ஸி சார், அட்ரஸ் எங்கே, எங்கே போகணும் அப்பிடின்னு சரமாரியா  கேள்வி. உடனே ராஜு தன்னால் முடிந்த வரையில் அம்மாவுக்கு surpriseஆக இருக்க வேண்டி வாசலில் போய் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு வந்தான். அம்மா தன் ட்ராலி bag உடன் ரெடி.  அதை விட கொஞ்சம் கம்மியான சைஸில் shoulder bag  !! அதுலதான் எல்லா சாப்பிடற வஸ்துக்கள் எல்லாம் இருக்கு.அய்யே, இந்த சென்ட்ரல் ஸ்டேஷன்ல பிளாட்பார்ம் கண்டு பிடிச்சு கம்பார்ட்மெண்ட் தேடி சீட்ல உக்காரத்துக்குள்ள தாவு விட்டு போயிடும்னு அம்மா சலித்து கொண்டாள். ராஜு மனசில சொல்ல முடியாத ஒரு வித அல்ப சந்தோசம் . கால் டாக்ஸி வந்தது. அம்மா வீட்டை பூட்டி, ராஜூவையும் ஒரு தடவை செக் பண்ண சொல்லி டாக்ஸியில் அமர்ந்தார்கள். டாக்ஸி புறப்பட்டது. எங்கேய போகவேண்டுமோ அந்த எடத்துக்கு GPS செட் பண்ணி பறந்தது. அம்மாவுக்கு சென்னை நல்லாவே தெரியும். இருந்தாலும் தூக்கக்கலக்கம் போல. ஏர்போர்ட் என்ட்ரி கேட் வரை நல்லா தூங்கிட்டாங்க. ராஜுவுக்கு  மீண்டும் ஒரு அல்ப....டாக்ஸி departure கேட் ல பிரேக் போட்டு நிறுத்தினான். அம்மாக்கு தூக்கி வாரி போட, தூக்கத்திலிருந்து முழிச்சி பார்த்து , அட சென்ட்ரல் ஸ்டேஷன் என்னமா ஜொலிக்கிறது அப்படினு சொல்லி கீழே இறங்கினாள். ஒரு நிமிஷம் தான். சுதாரிச்சிகிட்டு உடனே, என்னடா ஏர்போர்ட் வந்திருக்கோம் னு ஆச்சரியத்தோட கேட்டாங்க. ராஜுவுக்கு இதுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியல. தன்னோட surprise பிளான் பத்தி சொன்னான். அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம், பெருமை எல்லாம் சேர்ந்து ராஜூவை அங்கேயே கட்டி கொண்டாள். ஏன்டா, டிக்கெட் சார்ஜ் ரொம்ப ஆகுமேடா ???!!  ராஜு உடனே அப்பிடியெல்லாம் ஒண்ணும்  இல்லேம்மா, ஹாலிடே சீப் fare போட்டாங்க , அதன் வாங்கினேன், நீ சும்மா ஜாலி வா...ச்ச , தெரிஞ்சிருந்தா பிலைட்க்கு ஏத்த மாதிரி சாரீ கட்டி இருப்பேன் அப்பிடின்னு அம்மாவுக்கு ஒரு சிறு வருத்தம்.

Now , ஏர்போர்ட் சீன்,அந்த குளு  குளு பெரிய lounge , ஏர் ஹோஸ்டஸ் , செக்கின் கவுண்டர் லேடீஸ் இவங்களை அம்மா ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும்  பார்த்து மகிழ்ந்தாள். எனக்கு கூட  ஸ்கூல் முடிச்சிட்டு ஏர்லைன்ஸ் வேலை செய்யணும்னு ஆசை. எனக்கு flight ல  உலகம் பூரா pass ல சுத்திப்பார்க்கணும்ணு  ஆசை. ஹும் , எங்கே..என்ன puc  கூட படிக்கச் வகைல  என அங்காயித்தாள். அதனால் என்னம்மா , என்னக்கு onsite ஜாப்  வாரத்துக்கு நெறய வாய்ப்புகள் இருக்கு..நீ  ஒன்னும் வருத்தப்படாதேன்னு சொல்ல அம்மாவிற்கு மனசு ஏர்போர்ட் குளு  குளு  விட ரொமப குளிரிந்தது. அம்மா கைல போர்டிங் பாஸ் கொடுத்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லி அம்மாவை லேடீஸ் செக்யூரிட்டி செக் சைடு அனுப்பிவிட்டு தான் ஜெனட்ஸ் சைடுக்கு  வந்தான். அம்மா போர்டிங் கார்டலில் உள்ள எல்லா  சமாச்சாரத்தையும் நல்ல படித்து கொண்டாள் இன்டெரெஸ்டிங்கா.
இப்போ flight  புறப்பாடு அனௌன்ஸ்மென்ட். அம்மாவுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசம். தன வயதஒத்த சக பயணிகளோட தன்னையும் ஒப்பிட்டுக்கொண்டாள். மனசுக்குள் ஒரு திருப்தி தான் சரியாக தான் மாட்சிங்காக  இருக்கிறோம் என்கிற  சந்தோசம்.

அம்மாவின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணமமும் ராஜுவின் நீண்ட நாள் அசையும் நிறைவேறும் தருணம்  வந்தது. பிலைட்க்குள் முதல் பிரவேசம். விமான பணி பெண்கள் எல்லோரையும் ஒரு வித  செயற்கை சிரிப்புடன் வணக்கம் தெரிவிக்க , அம்மா அவர்களுக்கு குட் மார்னிங் சிரித்துக்கொண்டே சொன்னாள். மற்றவர்கள் அவர்கள்  பக்கம் திரும்பி கூட  பார்க்காமல் தங்களுடைய சீட் தேட முட்டி தள்ளி கொண்டு இருந்தனர், அம்மாவுக்கு பயங்கர கடுப்பு, இது என்ன கொஞ்சம் கூட manners இல்லாம. third  கிளாஸ் ரயில்வே கம்பார்ட்மெண்ட் மாதிரி இருக்கே அப்பிடின்னு.  அம்மாவை விண்டோ சீட்ல உக்கார்த்திவைச்சாச்சு. அம்மாவுக்கு ரொம்ப குஷி. திரும்பி  திரும்பி அங்கேயும் இங்கேயும் சக passengers யும் ஒரு நோட்டம் விட்டாள் . அடுத்த  கட்டம் ஒரு சின்ன டெஸ்ட். அம்மா எப்பிடி சீட்  பெல்ட் போடறானு பார்ப்போம் னு, என்ன ஆச்சரியம் நான் பெல்ட்   போடுவதை  ஓர கண்ணால் பார்த்து தானும் போட் டு கொண்டு  இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா  மாதிரி விண்டோ வழியாக ஏர்போர்ட் ரசிக்க ஆரம்பிதாள். ஏன்னா ராஜுவோட  முதல் பிலைட் அனுபவத்தில் தான் சீட் பெல்ட் போட தெரியாமல் கொஞ்சம் தடுமாற பக்கத்து passenger  சொல்லி கொடுத்த நியாபகம் வந்தது. விமானம்  கிளம்பி நகர ஆரம்பித்தது. தங்களுடைய பயண விதி முறைகளை சொல்ல, அம்மா மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். நீ  ஒண்ணும்  பயபடாதே அம்மா, இதெல்லாம் சும்மா ஒரு சேப்டி பரிகாஷன்ஸ் தாணு சொல்ல, எனக்கு ஒன்னும் அதெல்லாம் இல்ல. ஒரு தடவ சரியாய் கவனிச்சா போதும்,,அதான்... பிலைட்ல போற எல்லாரும் அந்த விதி முறைகளை கண்டு கொள்வது இல்ல, தெரியவும் தெரியாது. runwayஇல் வேகமாய்  போய் வானத்தில் மிதந்தது. எங்கள் இருவர் முகத்தில் ஒரு வித சந்தோசம், அம்மா என் கைய சந்தோசத்தில் பிடித்து கொண்டாள்.அம்மா தன் வாட்ச் பார்த்து மணி 8 ஆகப்போவுது. ஏதாவது சாப்பிட கொடுப்பங்களை இல்ல நம்மளே பார்த்துக்க வேண்டியதுதானா. இல்லேன்னா ரெண்டு இட்லி மொளகாய்பொடி தடவி வச்சிருக்கேன் சாப்பிடறயான்னு கேட்டாள். sandwich வேணுமான்னு ஏர்ஹோஸ்டஸ் மாதிரி உபச்சாரம் வேற !!. அம்மா... இன்னும் பத்து நிமிஷத்தில பெங்களூர்ல லேண்ட் ஆகப்போறோம் ன்னு  சொல்ல அம்மாவுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம் கூடவே இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கு என்கிற வருத்தம் வேற.

அடுத்தது , பெங்களூரு செக்மெண்ட.plane லேண்ட் ஆகி இறங்கவேண்டிய நிலையில் நின்றது. உடனே எல்லோரும் தப தப என்று அறிவிப்பை கேட்க்காம தங்களுடைய luggae எடுக்க முனைந்தனர். அம்மாவின் முகம் மீண்டும் அருவருப்பை காண்பித்தது. ஒரு வழியாக இறங்கி மீண்டும் பெங்களூரு  சொர்க்கலோகம். ஜிலு ஜிலு குளு குளு. luggage கைலேயே இருந்ததாலே நேர வெளியே வந்தோம். அம்மாவிற்கு மீண்டும் சந்தோச அதிர்ச்சி. உமாவும், குழந்தை தர்ஷனும் நேரில் வரவே அம்மாவுக்கு ஒண்ணுமே புரியல.அதை விட எனக்கும் சேர்த்து இன்னும் ஒரு surprise நடந்தது,
நான் டாக்ஸி புக் பண்ணலாம்னு டயல் பண்ணும்போது, உமா டாக்ஸி எல்லாம் ஒண்ணும் வேண்டாம், நம்ப வீட்டு காரிலே போலாம் வாங்கன்னு சொல்லி கார் பார்க்கிங் நோக்கி வேகமாக போக ஆரம்பித்தாள். நீங்க இங்கேயே இருங்க.. நான் கார் கொண்டு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டா. எங்க ரெண்டு பெரு முகத்திலும் ஆச்சரியம் மற்றும் பெருமையும் கூட.  ஒரு பத்து நிமிடத்துல எங்களை ஒரசினாப்போல ஒரு புது சிகப்பு நிற டொயோட்டா கார் வந்து நின்றது, வாங்க அம்மா, ராஜு ஏறுங்க கார்ல னு சொன்னாள்  உமா. இது என்னடி, நீ எப்போ கார் வங்கினே, எப்போ ஓட்ட கத்துக்கிட்ட  ஒண்ணும்  சொல்லவே இல்லையேன்னு மீண்டும் சந்தோச புலம்பல்.

ராஜுவின் மனம் ரொம்பவும் சநதோஷ பட்டது. ஒரே சமயத்தில் அம்மாவிற்கு இரண்டு சந்தோச செய்திகள்.

********************************************************************************

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்












No comments:

Post a Comment