Friday, June 8, 2018

Muscat with Love

                                                               Muscat withLove

அட , இது என்ன கதை title..ஜெம்ஸ் பாண்ட்  ஆங்கில திரில்லர் படம் மாதிரி இருக்கே..! அப்பிடின்னு நினைக்கிறீங்களா..கிட்ட தட்ட அப்பிடித்தான்னு வச்சுக்கோங்க...வெளி நாட்ல நடந்த த்ரில்லிங் அனுபவம் தான்  கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்து ஹாஸ்ய நடையுடன்  எழுதி  இருக்கேன்.....

ரெடியா ..கதை க்குள்ள போகலாமா ... நம்ப கதாநாயகன் வேற யாரும் இல்ல. 45 வயதான ராஜுவே தான் .  இப்போ ஓபெனிங் சீன். சீட் பெல்ட் போட்டுக்கொள்ளவும். விமானத்தில் ராஜு வெளிநாட்டிற்கு  வேலை நிமித்தம் காரணமாக  ஓமன் நாட்டு தலைநகரான மஸ்க்கட்   நோக்கி போய்க்கொண்டு இருக்கிறான் . விமானம் இறங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. ராஜுவின் மனம் ஒரு 20 வருடங்களுக்கு பின் நோக்கி சென்றது. மலரும் நினைவுகள்.
 இப்பொழுது colorful பிளாஷ் பாக் சீன். ஆமாம்,   20 வருடத்திற்குமுன் ராஜுவின் முதல் வெளிநாட்டு வேலை  மஸ்க்கட்  தான். மறக்க முடியாத நாட்கள். மனதிற்கு மிகவும் பிடித்தமான நாடு  . கை  நெறய வெளிநாட்டு காசு , .bachelor வேற. நல்ல நண்பர்கள் சகவாசம். எல்லோரும் சொந்த கார் வைத்து கொண்டிருந்தார்கள். அருமையான, வெளி நாட்டு விதம் விதமான கார்கள். ராஜூவிற்கு கார் மோகம் ஜாஸ்தி. கார் விலை அதிகம் இல்லை. ஆனால்  driving license வாங்குவது குதிரை கொம்பு சமாச்சாரம். எவ்வளவுதான் experienced டிரைவர்ஆக இருந்தால் கூட மஸ்க்கட்டி ல்  எந்த பருப்பும் வேகாது. அதனால் எவனாவது கார் வைத்துக்கொண்டிருந்தால் அவன் ஸ்டேட்டஸ் வேற!!!
எல்லோரையும் போல் ராஜூவுக்கும் எப்பிடியாவது ஓமான்  driving license வாங்கவேண்டும் என்ற ஆசை. அதற்காக தினமும் driving கிளாஸ் போவது வழக்கம். நம்ப ஊரு மாதிரி ஏதோ ஆயிரம் கொடுத்தோமா,  சும்மா learners license வாங்கினோமா , driving கிளாஸ் போனோமா அப்புறமா டெஸ்ட் போவதற்குள் சம்பந்த பட்டவர்களுக்கு முழு காசு வெட்டனோமா , license டெஸ்ட் சும்மா அட்டென்ட் பண்ணினினோமா உடனே license வீட்டை தேடி வந்ததுன்னு இல்லாம ..இங்கெல்லாம் ஆயிரம் நொர நாட்டியம் பார்ப்பாங்க.. லேசுல license கிடைக்காது. கதையின் உட்காருவே இந்த driving  license சமாச்சாரம் தான். இவனுக்கு  driving சொல்லி கொடுத்த மாஸ்டர், ராஜுவின்   வயதே உள்ள ஒரு ஓமானி( ஓமான் நாட்டு மக்களை ஓமானி என்று சொல்லுவார்கள்). அவன் காலை தூக்கி dash போர்டு மேல வைத்து கொண்டு உரக்க அரபி பாட்டு கேட்டுக்கொண்டே முரட்டு  தனமா சொல்லிக்கொடுப்பான். அவனுக கிட்ட ஒண்ணும் பேச முடியாது. திடீர்னு பெட்ரோல் பெட்ரோல்ன்னு அலறுவான். ராஜுவும் ஒண்ணும் புரியாம ஓமானியை  பாக்க  அவன் அரை குறை ஹிந்தியில் ஜல்தி ஜல்தி னு சொன்னான். ஒ, ஸ்பீடா போக சொல்றன் போல அப்பிடினுட்டு acceleratorஐ  ஒரு அழுத்து அழுத்தினான் ராஜு. வண்டி குபீரென்று 80 Kmph பாய்ந்தது. அவ்வளவுதான்  அடுத்த நிமிஷம் ராஜுவின்  தொடைல ஓங்கி ஒரு அடி விட்டான். கார் ஸ்டாப் கரோ அப்படினு சொன்னான். என்னடா படு பாவி இப்படி அடிக்கிறானு நினைக்கும் போது காரை  விட்டு இறங்கு அப்பிடினான். என்னடா சமாச்சாரம்ன்னு கேட்டா, பக்கத்திலுள்ள speed  லிமிட் போர்டு காண்பித்து என்ன ஸ்பீட்ல வண்டி ஓட்டற, ஸ்பீட் லிமிட் கவனிக்கணும், நான் சொன்னா நீ ஸ்பீட்   போய்டுவியா. ரோடு தேக்கோ, ஸ்பீட் தேக்கோ அப்பிடின்னு ஒரு குட்டி பிரசங்கம் செய்து ராஜூவை வெளியே தள்ளி  அப்பிடியே அம்போன்னு அந்த நெருப்பு வெயில்ல நடு ரோட்ல விட்டுட்டு வேகமா போய்ட்டான். இது  என்னடா ஆரம்பமே சரியாய் இல்லையே அப்பிடின்னு கவலையோடு வேற டாக்ஸி பிடிச்சு ஒரு மாதிரி வீடு வந்து சேர்ந்தான் . இனி அடுத்த கிளாஸ் ரெண்டு நாள் கழிச்சுத்தான். இந்த driving கிளாஸ் சம்பந்தமாக யாரை கேட்டாலும் இப்பிடித்தான் இருக்கும் அப்படினு வேற சொன்னாங்க, இதுக்கெல்லாம் பயந்தா ராஜுவின் கார்  சொந்தமா வாங்கி ஓட்டும் ஆசை  நிராசையாகிவிடும். அதனால் ரொம்பவும் பொறுமையாக இருந்தான் . இரண்டாம் நாள் வந்தது. ஓமானி பையன் ரொம்ப குஷியா இருந்தான். ஹிந்தியில் பைட்டோ அப்பிடின்னு சொல்லி டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி ராஜூவை உட்கார சொல்லி ஜாவோ என்றான். ராஜுவும் மெதுவாக ஒட்டி சென்றான், ஒரு ரெண்டு கிலோ மீட்டர் போன பிறகு  மீண்டும்  ஜல்தி ஜாவோ அப்பிடினான். ராஜு முந்தாநாள்  அடி வாங்கியிருந்த அடி இன்னும் வலித்தது. ரொம்ப புத்திசாலித்தனமாக மெதுவாகவே வண்டியை ஓட்டினான். மீண்டும் ஒரு பளார்..ராஜுக்கு ரொம்ப கடுப்புஆக, ஏன் அடிக்கிறேன்னு கேட்டான், அதுக்கு  அந்த மாஸ்டர், ஏன் மெதுவா போற, இது highway தானே, ஸ்பீடு  லிமிட் எவ்வளவு போட்ருக்காங்க தேகோ. பார்த்தா  120 km போட்ருக்காங்க, இங்கெல்லாம் ஸ்பீடு போகணும். இல்லேன்னா பிச்சே காடி marega அப்பிடினான் அதாவது மெதுவாக போனால் பின்னால் வண்டி இடிச்சுடுவாங்க . இது என்னடா தஞ்சாவூர் மாடு மாதிரி இருக்கான், முன்னால்  போன முட்டறான், பின்னால்  போனல்  இடிக்கிறானே,,ராஜுவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. சரின்னுட் டு கொஞ்சம் வேகமாக போக, அந்த ஓமானி ராஜுவின் பாக்கெட்ல இருக்கிற சிகெரெட்டு பாக்கெட் பார்த்து தனக்கு வேண்டுமாறு கேட்டு கொண்டான். சரி, இதுல ஏதோ சூட்சமம் இருக்கு, அதனால தான் உஷாரா இருக்கனும் அப்பிடின்னு நினைச்சு அப்புறமா தரேன்னு சொல்லி முடிகிறதுக்குள்ள ராஜுவின் பாக்கெட்ல கைய விட்டு சிக்ரெட்ட எடுத்துகிட்டு, ஸ்டைலா பத்த வெச்சிகிட்டான். அதோட இல்லாம, ராஜூவையும்  சும்மா பிடி, பரவா இல்லைனு சொன்னான். ராஜுக்கு இது எங்கேய கொண்டு போய் முடியும் தெரியலடா சாமி அப்பிடின்னு அந்த ஓமானிய விடவும் முடியாம கொள்ளவும் முடியாம தவித்தான். அங்கெல்லாம் driving சொல்லி கொடுக்கிற கார்ல ரெண்டு brake ,ரெண்டு கிளட்ச் எல்லாம் உண்டு டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்ல. கண் இமைக்கும் நேரத்தில அந்த மாஸ்டர், ராஜூகிட்டேருந்து ஸ்டேரிங் கண்ட்ரோல் தான் எட்டுத்துகிட்டு, தான் ஓட்டுவதாகவும் ராஜு சிகரெட்டு பிடிக்கலாம்னு சொன்னான். ராஜுவிற்கு கொஞ்சம் சபலம், நாக்கு சிகரெட்டு கேட்டுது. சரி அவன்தான் வண்டி ஓட்டுறானே சொல்லி தானும் பற்ற வெச்சான், குஷியா ஒரு இழு இழுத்திருப்பான். அவ்வளவுதான் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது..மீண்டும் சுரீர்னு தொடையில் ஒரு அடி . வண்டி பூரா மாஸ்டர்  கன்ட்ரோல்ல இருந்ததால ஒடனே வண்டியை  ஓரம் கட்டி ராஜு வெளியே தள்ளப்பட்டான். இப்போ என்ன காரணம்னு கேட்டா டிரைவ்விங் செய்யும் போது சிகரெட் பிடிக்கக்கூடாதாம் . அப்போவே புரிஞ்சுது, ஏன் driving license கிடைக்க மாட்டேங்குதுனு.  so , ரெண்டாம் நாளும் வெற்றிகரமான வாபஸ். இன்னும்  நான்கு  நாள் தா இருந்தது டெஸ்ட்க்கு போக. அதனால் நாளைக்கும் கிளாஸ்க்கு வருவதாக அவனே சொல்ல, ராஜுவுக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. 
அன்றைக்குனு பார்த்து அந்த ஓமானி மாஸ்டர் வேற வண்டி கொண்டு வந்திருந்தான். இதைப்பார்த்த ராஜு, அய்யோயோ, சைத்தான் வேற வண்டில வருதே,  இந்த வண்டி தனக்கு  பழக்கம் இல்லையேன்னு மனசுக்குள் ஓரே  புலம்பல். சைத்தான், இன்னைக்கு பிரிட்ஜ் ஏறி அப்பிடியே பின் புறமாக வரவேணும், அப்புறம் பார்க்கிங் ட்ரைனிங்ன்னு சொல்ல ராஜுவின் வயிற்றில் ஒரு கிலோ புளி கரைத்தது. இதெல்லாம் இந்த கோமாளியை  வெச்சுகிட்டு எப்பிடி கத்துகிறது, எப்போ டெஸ்ட் பாஸ் பண்ணி எப்போ license  வாங்குறது...தன்சொந்த கார் வாங்கும் கனவு அந்த பாலைவனத்தில் மெழுகாக உருகியது,...விடிஞ்சா போல தான்...  ராஜு முடிவே கட்டினான். இருந்தாலும் எனக்காச்சு... உனக்காச்சு... அப்பிடின்னு வைராகியதோட இருந்தான். இந்த டெஸ்ட் இல்லைனாலும் அடுத்த டெஸ்ட்குள்ள நல்ல வேற மாஸ்டர் கிட்ட ஒழுங்கா கத்துக்கிக்கிடலாம்ன்னு பிளான் போட்டான். மற்ற ரெண்டு கிளாஸ்சும் சரியாக செய்யவே இல்ல. ராஜுவுக்கு நம்பிக்கையே இல்ல. அன்று கிளாஸ் முடியும் போது அந்த ஓமானி கோமாளி, ராஜு  கிட்ட வந்து ஷராப் license இருக்கானு கேட்டான், ராஜுவும்  ஏதோ confusion ல இருக்குனு சொல்லிட்டான் . இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் அவர்கள் மத ரூல்ஸ் படி மது அருந்துதல் கூடாது. மீறினால் விபரீதமாக தண்டிக்க படுவார்கள். ராஜுவிற்கு  அப்புறம் தான்  சுரீர் என்று உரைத்தது. இது எங்க கொண்டு போய் விடுமோ என்று.

Driving டெஸ்ட் நாள் வந்தது. காலையிலேயே சீக்கிரம்  டெஸ்ட் கொடுக்கும் இடத்திற்கு வந்தாகி விட்டது. நம்ப ஆளை காணவே இல்ல. mike ல இன்னைக்கு யார் யாரெல்லாம் டெஸ்ட் எடுக்கிறாங்களோ அவங்க பேரை தப்பு தப்பாக, படிக்க தெரியாம கூப்பிட்டாங்க. ரொம்பவும்  சிரிப்பாகவும் அதே சமயம் நம்ப பேரை சரியாக கூப்பிடவேண்டுமே என்ற கவலை வேற. ராஜுவின் நிஜ  பெரு ராஜ சர்வேஸ்வரன். மைக்ல  ராஜா சனீஸ்வரன்னு கூப்பிட ஒரு மாதிரி சிரிப்பை அடக்கி கொண்டு காரில் அமர்ந்தான் .  அந்த  பக்கத்தில ஒரு  தடியான ஆபிசர் உட்கார்ந்து கை கொடுத்து ஒட்டு என்றான். ராஜுவின் கை  கால்  எல்லாம் நடுங்க கார் ஸ்டார்ட் செய்தான். ஊஹூம் ...கார் ஸ்டார்ட் ஆனாதானே ...ராஜுவிற்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. ஒரு மாதிரி ஸ்டார்ட் செய்து ரெண்டு பக்கமும் ஸ்பீட் போர்டு இருக்கானு கவனித்து கொண்டே போகும் போது அந்த பாழா போன பிரிட்ஜ் ஏறும் கட்டம் வந்தது. காரில்  கூட டெஸ்ட்க்கு வந்தவர்கள் முகத்தில ஈ ஆடலை. கூட வந்த ஆபீசர் எதையுமே பார்க்காம தன் கைல கொண்டுவந்த பேப்பர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்து விட்டு பிரிட்ஜ் மேல ஏறு என்றான்.  ராஜுவும்  மூச்சை பிடித்துக்கொண்டு பிரிட்ஜ் மேல மெதுவாக போனான். பாதி  மேல ஏறும் போது 'தால் னு' அரபில கத்தினான். 'தால் னா' ஸ்டாப்னு அர்த்தம். அவ்வளவுதான் ..ராஜுவுக்கு சப்த நாடியும் அடங்கியது. ஏனென்றால் இந்த  வித்தை அந்த ஓமானி சொல்லித்தரவே இல்ல. உடனே ராஜு பிரேக்யை ஒரே அமுக்காக அமுக்க  வண்டி ஒரு பொருமலுடன் நின்றது. வண்டிக்குள் ஒரு மரண அமைதி. ஒரு நிமிடம் கழித்து மீண்டும் அந்த ஆஃபீசர் பீச்சே  ஜாவோ என்று அலறினான். இங்கே தான் இருக்கு சூட்சமம். reverse கியர் போடும் போது கிளட்ச் பிடிச்சி, reverse கியர் போட்டு பிரேக் மெல்ல விடணும். ராஜு பிரேக்கிலிருந்து  காலை எடுக்க, வண்டி தட தட என்று பின்னாடி போக ஆரம்பித்தது. ராஜு இன்னைக்கு டெஸ்ட் அம்பேல் தான் என்று முடிவே பண்ணிட்டான். எப்பிடியோ reverse கியர் போட்டு, வேர்க்க விறுவிறுக்க வண்டி யை மெல்ல நிறுத்தினான். ஆஃபீசர் ராஜூவை வெயிட் பண்ண சொல்லி மற்றவர்களை டெஸ்ட் செய்ய போய்ட்டான். ராஜு அந்த  ஓமானி பயலை மனசார திட்டி தீர்த்து விட்டான். கிட்ட திட்ட ஒரு மணி கழித்து எங்கிருந்தோ அந்த ஓமானி மாஸ்டர் ஓடி வந்து ராஜூவை கட்டி கொண்டு கை  குலுக்கி, டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டதாக சந்தோசமா சொன்னான். ராஜுவுக்கு   ஒண்ணுமே புரியல. எப்பிடி இந்த அதிசியம். ரொம்ப அதிர்ஷ்டம் தான் போல என்ன சந்தோச பட்டான்.
 ராஜு தன் நண்பர்களுடன் உற்சாகமாக தனக்கு license கிடைத்த செய்தியை  சொல்லி இரவு பார்ட்டிக்கு வருமாறு அழைத்தான். அந்த சமயத்தில் தன் வீட்டு காலிங் பெல் அலற ராஜு அவசரம் அவசரமாக கதவை திறந்தான். பொதுவாக யாரும் முன் அறிவிப்பின்றி வீட்டுக்கு வரமாட்டார்கள். கொஞ்சமும்  எதிர் பார்க்காத ஒரு நபர். வேற யாரும் இல்ல. அந்த ஓமானி மாஸ்டர் வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தான். ராஜுவிற்கு ஒண்ணும்  புரியவில்லை. என்ன சமாச்சாரம்னு ஹிந்தில ராஜு கேட்டான். அவன் மேல இன்னும் அசடு வழிய சிரித்துக்கொண்டு sharaab மிலெங்கே??!! (தண்ணி கிடைக்குமா?!!) அப்பிடின்னு ஒரு குண்டை தூக்கி போட்டான். இதென்னடா காலை சுத்தின்ன பாம்பு கடிக்காம விடாது போல இருக்கே அப்பிடின்னு நினைச்சான். கூடவே, தான் அந்த ஆஃபீசர் கிட்ட சொல்லி ராஜூவை டெஸ்ட்ல பாஸ் பண்ண வைத்ததாகவும்  சொன்னான். அதுக்கு அந்த ஆஃபீசருக்கு ஏதாவது கொடுக்கணும் சொல்லி, ஒரு நாலு பாட்டில் பிளாக்  லேபிள் வேணும்னு கேட்டான்...!! இப்போ தான் ராஜுவிற்கு தான் எப்பிடி செலவு இல்லாம டெஸ்ட்ல பாஸ் பண்ணிணோம்னு  விவரம் புரிஞ்சுது. அதனால் என்ன. ஓமான் driving  license, நாலு பாட்டில்ல கிடைக்கும்னு ராஜு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நாய் வித்த காசு கொறைக்கவா போகுது. தண்ணில வாங்கின license ஆடவா போகுதுனு  ராஜுவுக்கு ஒரே சந்தோசம். ஓமானி மாஸ்டர் க்கு  சந்தோசமா தண்ணி வாங்கி கொடுத்து தான். அடுத்த நாளில்  இருந்து அந்த ஓமானி டிரைவர், வீட்டுக்கு வந்து ராஜுவிற்கு ஒழுங்காக driving கற்று கொடுத்தான். சும்மா இல்ல..சரக்கு தான் பீஸ்.....!!!!

இப்பொழுது plane இறங்க  வேண்டிய டைம். ராஜு ஆவலுடன் இப்பொழுது  மஸ்க்கட்  எப்பிடி இருக்கு என்பதை விண்டோ வழியாக பார்த்து பூரித்து போனான். மஸ்க்கட்  சொர்கபுரியாக ஜொலித்துக்கொண்டிருந்தது.விமானம் கீழே இறங்க இறங்க, ராஜுவின் மனமும் சந்தோஷத்தில் இறங்கியது.   மஸ்க்கட் International Airport , ராஜூவை அன்புடன் வரவேற்றது.

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
******************************************************************

No comments:

Post a Comment