Tuesday, June 5, 2018

FROM WEST (MAMBALAM ) COAST TO (அமெரிக்கா) EAST COASTவரை !!!!!

FROM WEST  (MAMBALAM ) COAST  TO   (அமெரிக்கா)  EAST COAST  வரை !!!!!

ஆச்சு , ஜூலை  ஆகஸ்ட் மாதம் வந்தா  போதும்.....வெஸ்ட் மாம்பலம் , டீ, நகர், அசோக் நகர்  மற்றும் நங்கநல்லூர்  ஏரியா அல்லோலகல்லோல படும் !! அமெரிக்கா  மற்றும் ஐரோப்ப்பகுதிகளில் ஸ்கூல் vacation டைம். வெளிநாட்டு போக்குவரத்துக் கொஞ்சம் ஒவராகவே இருக்கும். மக்கள் vacationக்கு வருவாங்க, போவாங்க. வெளி நாட்டில்வசிக்கும்  தம் பேர பிள்ளகளுடன் கும்மாளம் அடிக்க  மிடில் கிளாஸ் குடும்பத்தினறெல்லாம்  வெளிநாடு போகும் நேரம். IT boom வந்தாலும் வந்தது,  பழைய மாம்பலம் மக்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு சும்மா அயனாவரம் போற மாதிரி அனாவசியமா போயிட்டு  வராங்க.  மாமீஸ்  அண்ட் மாமாஸ் நடை, உடை பாவனை மற்றும்  body  language பார்த்தாலே சொல்லிடலாம்..இவங்க அமெரிக்கா returned nu. மாமிகள் எல்லாம் ஜீவா பார்க்கல கண்டிப்பா மாமாவுடன் வாக்கிங் போவாங்க .. அந்த காட்சி  பார்க்கணுமே.. ஜாகிங் shoes, சாரீ, தோளில்  ஒரு ஜோல்னா பை, அதுல ஒரு tissue  பேப்பர் பாக்கெட் அப்புறம் கைல ஸ்மார்ட் போன், நுனி நாக்கில் அரைகுறை இங்கிலிஷ், எல்லோரையும் ஒரு மேல்பார்வை, ஸ்மைலிங்  லுக்  ...அப்பிடி ஒரு தோரணை..மாமா ட்ரெஸ்ஸோ கேட்கவே வேண்டாம்...கொஞ்சம் டீசென்ட்டா  நடிகர் செந்தில் போல ஒரு முக்கால்  நிஜார், பிராண்டட் டீ ஷர்ட்,  body  ஸ்பிரே , கொஞ்சம் costly  ஸ்மார்ட் போன் எப்பவும்  இங்கிலீஸ் தான் போன்ல.  தன் சுற்றுப்புறம் எல்லாமே ஊழல் மாதிரி ஒரு அருவருப்பான பார்வை. sense less people .. நம்ப நாடு உறுபடவே உருப்படாது..ப்ளடி politicians இப்பிடி
சக்கட்டுமேனியா அங்கால்யிப்பு. இவங்க கூட முதல் தடவையா போக போற லட்சுமி மாமி அவங்கள பார்த்து ஒரு ஸ்மைல் அப்புறம் குட் மோர்னிங் வேற. நாங்க கூட அமெரிக்கா போகப்போறோம் அப்படினாங்க . என் பையன் கூகிள் கம்பெனில ஒர்க் பண்ணறான். டிக்கெட் எல்லாம் பிளாக் பண்ணிட்டான். விசா form fill  up பண்ணி முடிகிறதுக்குள்ள அமெரிக்கா போற ஆசையே போய்டும் போல இருக்கு. அடுத்த வாரம் பயோ மெட்ரிக் போகணும்..அப்படினு லட்சுமி மாமி தன் ப்ரோக்ராம் சொன்னாங்க .. இதோட விடாம, ரொம்ப அலட்டலாக  நாங்க லண்டன் எல்லாம்  போயிருக்கோம். இவ்வளவு கடி இல்லப்பா. எல்லாம் ஏஜென்ட் ரெடி பண்ணிட்டான். சும்மா namke vasthe இண்டெர்வியூ தான். அதுக்கு உடனே அந்த நியூ ஜெர்சி ஆறு மாதம் போய்ட்டு நொந்து நூலாயிட்டு வந்த தம்பதியினர் மெதுவா  கிண்டலா பேசிக்கொண்டாங்க. என்ன பெரிய அமெரிக்கா விசிட்...வெறும் glorified பேபி சிட்டிங் வேலை. அதோட இல்லாம  சமையல், வீட்டு பராமரிப்பு, பாத்ரூம் கிளீனிங் , பிள்ளைங்களை ஸ்கூல் பிக்கப் ட்ராப் எல்லாம் அடங்கும். கைல டாலர் இல்லாம ரொம்ப இக்கட்டான நிலைமை . இந்த வேலைக்கு  எல்லாம் கூலி, ஒரு வால் மார்ட் விஜயம், இல்லேன்னா ஒரு பக்கத்திலிருக்கும் பெருமாள் கோவில் இல்லேன்னா ஒரு பூதாகரமான ஒரு மால் விஜயம் வித் நைட்  டின்னர். இதுபோறதுன்னு எங்க  அம்மா நல்லா சமைப்பாங்கனு சொல்லி வீக் எண்டு பிரெண்ட்ஸ் தண்ட சாப்பாடு வேற . இந்தியா திரும்புவதற்கு முன்பா ஒரு வீக்கெண்ட் ட்ரிப். இதெல்லாம் முதல் ட்ரிப்ல சுவாரசியமாக இருக்கும். அப்புறம் தான்  புரியும் இது ஒரு தங்க கூண்டு அப்பிடின்னு.  நாங்க இந்த வருஷம் அமெரிக்கா போகல அதுக்கு பதிலா europe tour போகலாம்னு இருக்கோம் னு  நியூ ஜெர்சி பார்ட்டி கொட்டி தீர்த்தார்கள் . இவர்களை  தாண்டி போன இன்னொரு வைர தோடு அம்மா ...ம்ம் நம்ம கௌதம் கூட இந்த வருஷம் final  year. ..நல்ல படியா கேம்பஸ் selection  ஆச்சுன்னா அடுத்த வருஷமே அவனுக்கும் onsite போடுவாங்க. அப்போ  பாத்துக்கிறேன் இந்த கோஷ்டியை அப்படினு ஒரு வெட்டு பார்வையுடன் போனாங்க. இப்பிடியாக ஒரு மினி அமெரிக்காவே அந்த பார்க்கில  வாக்கிங் போய்க்கொண்டிருந்தது.

இப்பிடியிருக்க , தி நகர் போத்திஸ் கடை முன்னாடி ரெண்டு லேடீஸ். ஒருத்தர்  சிங்கப்பூர் அடிக்கடி போய்ட்டு வரக்கூடிய கோகிலா  மற்றொருவர் லதா, லண்டன் பார்ட்டி. ஏதாவது பெருமை பேசணுமேன்னுட்டு , கோகிலா மாமி, என்ன இருந்தாலும் சிங்கப்பூர் மாதிரி வரவே வராது . 4 மணி நே ரம் தான் flight . அப்பிடியே ஹை டெக் சென்னை தான். நம்மளுக்கு எல்லாம் சிங்கப்பூர் தா லாயக்கு. ரொம்ப நீட். எல்லாம் டைம் பிரகாரம் நடக்கும். யாரு தயவும்  வேண்டாம். எல்லாம் தமிழ் இல்  இருக்கும்.  mrt இல்லேன்ன smrt  பஸ் எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு டிப்ஸ், ஒரு எக்ஸ்ட்ரா பேச்சு...மூச்...எதுக்குமே இடம் கிடையாது. தமிழ் பேசற டாக்ஸி டிரைவர் கூட இருப்பாரு. என்ன மரியாதை அப்படினு சிங்கப்பூர் tourisim ப்ரோமோஷன் lecture முடிச்சாங்க. உடனே லண்டன் லதா எதிர் வாசிப்பு. சும்மா இருக்குமா. லண்டன் ஆச்சே !!! நாங்க அடிக்கடி சிங்கப்பூர் போவோம், ரொம்ப ஹப்பெனிங் place. ஆனா  ரொம்ப சின்ன ஊரு. நாலு நாளைக்கு மேல குப்பை கொட்ட முடியாது,   ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சுடும்..எல்லாம் இம்போர்ட்டட் தான். concrete jungle,  எல்லாம் artifical தான். லோக்கல் ஐட்டம்ஸ்  ஒண்ணுமே இல்ல. பாதி சாமான்கள் மலேஷியாலேந்து  வரும் அப்பிடின்னு சிங்கப்பூர் இம்போர்ட் அண்ட் export வண்டவாளத்தை தண்டவாளத்தில ஓடவிட சிங்கப்பூர் கோகிலா , சைனா காரன் சைஸில் அடங்கியது. இப்போ லண்டன் தன் கைவரிசையை காண்பிக்க ஆரம்பிச்சாங்க. நாங்க ரொம்ப வருஷமா லண்டன்ல பிசினஸ் பண்றோம். லண்டன்ல 3 வீடு இருக்கு. எங்க வீட்டு மாமா சென்ட்ரல் லண்டன்ல  பைன் டைனிங் ஹோட்டல் வச்சிருக்காரு. இந்தியா cultural சொசைட்டி ப்ரெசிடெண்ட், என்னோவோ இந்தியன் ப்ரெசிடெண்ட் போஸ்ட் மாதிரி.ஒரு போடு போட்டாங்க. so நாங்க அடிக்கடி சென்னை வருவோம். மத்தபடி எங்கள் கான்டக்ட்ஸ் எல்லாரும் பாதி   லண்டன்ல தான்  இருகாங்க, அதனால அநேகமா  சென்னையை  மிஸ் பண்றது இல்ல. இப்பிடியாக லண்டன் பார்ட்டி பின்னி பெடலெடுத்து  பொம்மி பிரஷர்ஒட  நின்றது..

இதையெல்லாம் ஒரு ஓரமா பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரி சு, ஒரிஜினல் பட்டணம் பொடி, தன் சக friend கிட்ட மெல்ல பேச்சு கொடுத்தது . இவங்கெல்லாம் புதுசா வந்திருக்கிற IT கம்பெனிகாரங்க வளர்த்துவிட்டவங்க. அதான்  வெளி நாட்டு  மோகம் பிடிச்சு அலையறாங்க. நான் அந்த காலத்து IRS (Indian Railway service ). ரயில்வே போர்டு சீனியர் மெம்பெர். UK , கென்யா, மலேஷியா, சவுத் ஆப்பிரிக்கா, எகிப்து இப்பிடி பல countriesக்கு இந்தியா சார்பில் போய் இருக்கேன் ன்னு பெருமையா  மூச்சு விட்டு நிக்கமா, இப்ப கூட கவெர்மென்ட் பென்ஷன், quarters, பிரீ லைப் டைம் firstclass ac பாஸ், பிரீ மெடிக்கல்  எல்லாம் உண்டுன்னு ரொம்ப அடக்கி வாசித்து புஸ் என்று ஸ்டீம் விட்டு நின்றார். அதோட இல்லாம ஆல் இந்தியா transfer வேலை வேறயா, எல்லா regional  language நல்ல பேசுவேன். இவங்கயெல்லாம் இந்த நுனி  நாக்கு இங்கிலீஷேயோ இல்ல தமிழையோ  வச்சுக்கிட்டு திருத்தணி கூட தாண்ட முடியாது அப்பிடின்னு ரொம்ப தெனாவெட்டோட ஒரு உண்மையும் சொன்னாரு. அந்த காலத்தில ரயில்வேஸ்ல நெக் டை ரொம்ப முக்கியம்.. கோட் சூட்டு  எல்லாம் போடணும். இப்போ இந்த பிரைவேட் ஆளுங்கயெல்லாம் ஜீன்ஸ் , டி ஷர்ட் சகிதம்தான்  இருகாங்க..சும்மாவா சொல்லியிருக்காங்க..டை கட்டி வாழ்வாரே வாழ்வர்... மற்றெல்லாம் கை  கட்டி வாய் பொத்தி பின் செல்பவர்ன்னு... பவுன்  பவுன் தான்  ....!!!!     இதுதான் எதார்த்தம்.

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்



*****************************************************************









No comments:

Post a Comment