Tuesday, June 26, 2018

ONLINE அபேஸ்!!

ONLINE அபேஸ்!!


இந்த கதை எழுதும்போது நம்ப கதாநாயகன் ராஜு  வேலையில் இருந்து ஓய்வு பெற்ற மாஜி கம்ப்யூட்டர் அனலிஸ்ட். வயசு 63. வழுக்கை விழுந்த மொட்டை தலையின் பின் புறம் பிறை சந்திரன் மாதிரி அமர்க்களமான வெள்ளை முடி . வீட்டில் சும்மா எப்படி பொழுதைக்  கழிக்க முடியுமா? வெட்டி ஆஃபீஸ்ர்னு வீட்ல பட்டம் கட்டுவாங்க. இருக்கவே  இருக்கு கைவசம் தொழில்.!! நண்பன் இன்டர்நெட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என்று உசுப்பேத்த காணாததை கண்ட மாதிரி அந்த வலையில் டமார்!! ஒன்றுமில்லை ராஜு விழுந்த சத்தம்!!. 

அவ்வளவுதான் அன்றையலிருந்து ராஜுவும் , லேப்டாப்பும் புது கணவன் மனைவி போல் பிரிக்க முடியாமல் ஆகி விட்டார்கள்.. லேப்டாப் மடி மீது வைத்துகொண்டு என்னவோ office வேலை மும்மரமாக  செய்கிற மாதரி முகத்தை வைத்து கொள்வான். அவன் பாஸ் மனைவிக்கு கம்ப்யூட்டர்ஐ  பற்றி பே பே தான் !! ஒன்று தெரியாதது, ராஜுவுக்கு ரொம்பவும் வசதி ஆகிவிட்டது. பாஸ், ராஜூவை பார்க்கும் போதெல்லாம் சே! நம்ப ஆளுக்குதான் எவ்வளவு பொறுப்பு என்று பெருமைப்ட,. வேளா வேளைக்கு கல்யாண பரிசு தங்கவேலு styleஇல்  காபி டிபன் எல்லாம் சரியான நேரத்திற்கு வரும்   நூற்றுக்கு 90% home பிசினஸ் எல்லாமே பணம் முழுங்கும் கவர்ச்சி கன்னிகள் தான் என்பது புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புதைக்குழியில் ராஜு இழுக்கப்பட்டான். ஆன்லைன்இல் அவர்களுடைய business ஐ பற்றி விலாவாரியாக ரொம்பவும் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். சில fake  நபர்களின் போட்டோகளும், அவர்களின் வாக்குமூலம் இதில் இடம் பெற்றிருக்கும். அதை படித்து உடனே அந்த  வேலையில்  இறங்கினால் அப்புறம், கைல இருக்கும் காசு  "அடடா... வடை போச்சே!" கதை தான். 

ம். இப்படிதான் ராஜுக்கும்  ரொம்ப ஆசை பெருகியது. ஒரு ஆயிரம் கட்டினால் பத்தாயிரம் பண்ணலாம் சைட்இல் போயி free registration தானே என்று நினத்து எல்லா விவரங்களையும் தந்த பிறகு,  ரொம்ப குஷியாக இருந்தான். ஆனால்  வந்ததே ஒரு bouncer .. என்னவென்றால், மேலும் பணம் செலுத்தி upgrade செய்தால் தான் அடுத்தக் கட்டத்திற்கு போகமுடியும் என்று ஒரு மொட்டை தலை எமோஜி சிரித்த முகத்துடன் கூறியது . இப்போ தான் மீனு தூண்டில்ல மாட்டுற நேரம். சரி, இந்த ஒரு  முறை மட்டும் செலுத்தலாம் என நினத்து ரகசியமாக (பாஸ்க்கு தெரியாமல்) credit card விவரங்களை செலுத்தினான் . அவ்வளவுதான் , என்ன ஆச்சர்யம் ! ஒரு சூப்பரான website உடனே வந்தது. ரொம்ப பெருமையாக  மனைவியிடம் காண்பித்தான். ஏன் என்றால் ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியும் என்பதை விளக்கி (விளங்காத) ஒரு அட்டவணை!! ஆனால் , wife பார்த்த பார்வை இதெல்லாம் புரிந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே என்கிற மாதிரி மனதை உறுத்தியது. இருந்தாலும் ஆண் வர்கமாயிற்றே !! அவளை  அடக்கினான் . ஆனது ஆகட்டும் என்று வேலையை ஆரம்பித்தான் . அடுத்த ஸ்டெப், இன்னும் 10 ஆட்களை இதில் சேர்க்கச் சொல்லி ஒரு நிபந்தனை! தூண்டில்ல இப்போ மீன் நல்லா  மாட்டிச்சி டோய் !! ஒருத்தர் இரண்டு இளிச்சவாயனுங்க  வேண்டுமானால் கிடைப்பார்கள். இவ்வளவிற்கு ராஜு எங்கே போக? ஏற்கனவே அவங்க எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆனவங்கதான். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தான்

கொஞ்சம் பொறுமையா இருங்க, ராஜுவின் சொந்த கதை. சோக கதை கண்டிப்பாக விரைவில் தொடரும்...
- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்



*************************************************************************
ONLINE அபேஸ்!! தொடர்கிறது 

சரி நமக்கு இந்த பிசினஸ் லாயக்கு இல்லை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று வேறு siteக்கு போனால்  மீண்டும் இதே கவர்ச்சி கன்னிகள் கதை தான். தப்பி தவறிக் கூட பணம் கையில் கிடைத்து விடக் கூடாது என்பதிலே எல்லா site ம் குறியாக இருப்பது புரிந்தது. இது புரியாமல் ராஜுவின் மனைவியோ யார் அவனை  பற்றி கேட்டாலும் பெருமையாக இன்டர்நெட் பிசினஸ்இல் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று சொல்வாள். ராஜுவிற்கு தான் தெரியும் தான்  என்ன கிழிக்கிறான் என்று,,, ரொம்ப வெறுப்பாகிவிட்டது !!

  ஆனா சில பேரை கேட்டா, ஏதோ பெரிய பிசினஸ் பண்ற மாதிரி சொல்லுவாங்க. அது சும்மா உடான்ஸ் !! எப்பிடியோ, ஆனால் ராஜுவின் அதிர்ஷ்டம் எப்படின்னா, அவன் ரொம்ப யோசிச்சு, மீனம் மேஷம் பார்த்து  நெய் பிசினஸ் பண்ணலாமுன்னு போன அப்போ தான் பிரமாதமா வெயில் அடிக்கும். சே.. என்னடா இது... சரி..., இது வேலைக்கு ஆவது போலன்னு மாத்தி யோசிச்சு, மாவு விக்கலாமுன்னு போன அப்போ தான் பயங்கரமா புயல் காத்து அடிக்கும். அதனால சும்மா விவரம் கெட்ட தனமா இன்டர்நெட்டில் பிசினஸ் செய்கிறேன் என்று ஜம்பம் செய்யாமல் உருப்படியான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்  என்ற புத்தி வந்தது"எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும் ...' என்ற L. R. ஈஸ்வரி அவர்களின் பாடலை சற்று மாற்றி '' எனக்கு வந்த இந்த மயக்கம் யாருக்கும் வரவேண்டாம் "  என ராஜு அவன் friends களுக்கு அட்வைஸ்  பண்ண ஆரம்பித்தான்.!!!.

சரி, இந்த ஆன்லைன்  பிசினஸ் தான்  இந்த மாதிரின்னா, ஆன்லைன் ஷாப்பிங் இருக்கு பாருங்க அது இத விட ரொம்ப கொடுமை. வெறும் கானல் நீர் கதை தான்; இந்த மாய வலையில் ராஜுவும் ஒரு மூலையில் விழுந்து முழுக்க முழுக்க சோம்பேரி ஆகி ஆன்லைன் ஷாப்பிங்க்கு அடிமை ஆகிவிட்டான். குடும்பத்தோடு இல்லேன்னா  கூட இல்லேன்னா  சில சமயம் தனியாகவோ ஷாப்பிங் செய்வது ரொம்ப முக்கியம். உடல் மனம் எல்லாத்துக்குமே  ஷாப்பிங் ஒரு நல்ல exercise மாதிரி. ஆன்லைன்ல போடுற products எல்லாம் சரியாக அமைந்துவிடாது. pictures  அப்புறம் product description ஆளயே மயக்கும். ராஜு  மாதிரியான சோம்பேறிகளுக்காகவே இந்த வகை வகையான ஆன்லைன்ல products போடுறாங்க. சும்மா, bean bagல அமுங்கிய படியே மொபைல் மூலமா வேண்டிய ஆணி முதல் ஆனை வரை ஐடெம்ஸ் வாங்கும் படியான வசதி. இதுல பாதி  மோசடி வலை தான். payment டீடெயில்ஸ் கொடுத்த உடன் வெப்சைட் காணாமல் போய்  விடும் அல்லது error 404 காண்பிக்கும். உடனே டென்ஷன்ல customer சர்வீஸ்க்கு போன்  போட்டால் இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை அப்படினு திரும்ப திரும்ப ஒரே ஒப்பாரி. இதற்கிடையில் உங்க கிரெடிட் கார்டு சார்ஜ் ஆகி விடும். சரியான கூத்து. இதயெல்லாம் மீறி ஐடெம்ஸ் டெலிவரி ஆகிறதுக்குள்ள நம்ப BP உச்சாணி கொம்பு நுனியில் போய்  நிக்கும். சரி, ஒரு வழியாக நாம்ப ஆசை பட்ட ஐட்டம்ஸ் வீடு தேடி வர ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் அந்த சந்தோசம்  ரொம்ப நேரம் நிக்காது. மந்திரவாதி உயிர் இருக்கும் இடம் கண்டு பிடிக்க ஒவ்வொரு கட்டத்தை கடக்கற மாதிரி, பேக்கிங் ஒண்ணு  ஒண்ணா strip tease செய்து எடுத்தவுடன் அந்த ஆசை பட்ட ஐட்டம் கண்ணில் பார்த்தவுடன் ஒரு வித ஷாக்கிங். ஏன்னாக்க ஆர்டர் செய்த ஐட்டம் வேற, வந்த ஐட்டம் வேற !!. டெலிவரி ஸ்லிப் ல பார்த்தா  கரெக்ட் ஆக தான் இருக்கு. ஆகா, வெச்சாங்கடா ஆப்பு !! இப்போ உடனே ரியாக்ஷன் customer கால். மீணடும் காண்டாக்ட் நம்பர் ...அதே ஒப்பாரி ...கொடுமையான situation. அதே சமயம், சிறந்த தரமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களும் உண்டு. நிறைய பெரு வாங்குறாங்க. மேற்கொண்டு இந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவங்களை விவரிக்க வேண்டுமானால் கன்னி தீவு கதை மாதிரி தொடர் கதை தான் எழுத வேண்டும். அதனால உங்களை இப்போதைக்கு விடுவிக்கிறேன். 

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்
*********************************************************************************












,

No comments:

Post a Comment